அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,
நேற்றைய தொடர்ச்சி...
மணி சரியாக 6 . அப்போது வெங்கட் ஐயா, என் மனைவியை அழைத்து தீபம் ஏற்ற சொன்னார். தீபம் ஏற்றும் போது காற்று பலமாக வீசியது. இருப்பினும் 3 முறை முயன்று ,இறுதியில் தீபம் ஏற்றப்பட்டது.
எல்லாரும் மனமார அகத்தியரை வணங்கிணோம். இருப்பினும் என் மனதில் ஒரே குறை ,மூலவரை பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லையே என்று.
ஆலயத்தில் உள்ள மின் விளக்குகள் அனைத்தும் எரியவில்லை ஏனென்றால் , ஆலயத்தை மூடி 3 மாதமாகிவிட்டது. வெங்கட் ஐயாவிடம் மெதுவாக நான் சென்று எனக்கு கொஞ்சம் நேரம் கொடுங்க என்றேன். ஆலயத்தை உற்றுப்பார்த்தால் ஒரே இருட்டாக இருந்தது.
பின் மனதில் உறுதிக்கொண்டு ,
குருவே சரணம் ,
சத்தியமே அகத்தியம்,
என்ன ஒரு ஆச்சர்யம், ஒரு சின்ன ஒளி கீற்று மூலவரை நோக்கி வந்தது. அது மெர்க்குரி வெளிச்சம் போல் இருந்தது. எனக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. நன்றாக உற்றுப்பார்த்தேன்.
குருவே சரணம் என்று கூக்குரலிட்டேன். எல்லாரும் ஓடி வந்துப்பார்த்தார்கள் . அனைவருக்கும் ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. எங்கள் அனைவராலும் மூலவரை நன்றாக பார்க்க முடிந்தது.
அகத்தியர் ஆசிரமத்தில் இருந்து உடன் வந்தவர் ஓடிச்சென்று ,மின்சாரம் ஏதாவது நின்றுப்போய் வந்ததா எனப்பார்த்தார் . ஆனால் அப்படி ஒரு நிகழ்வு எதுவும் நிகழவில்லை அதே நேரம் எல்லா சுவிட்சுகளும் ஆப் செய்யப்பட்டுள்ளது ஏனென்றால் கோவிலை மூடி 3 மாதமாகிவிட்டதால் அதற்க்கும் வாய்ப்பு இல்லை என உணர்ந்தோம். அதன் பின் எல்லாரும் தியானம் செய்ய போய்விட்டோம் .
பொழுது இருட்டாக ஆரம்பித்தது. அனைவரும் எனக்காக காத்திருந்ததனர். பிறகு தியானத்தை முடித்துவிட்டு புறப்பட சென்றோம். அப்போது நான் எல்லார் முன்னிலையிலும்
"அகத்திய குருவே நீர் உண்மை"- என்பதை உணர்த்திவிட்டீர், மிக்க நன்றி, நாங்கள் புறப்படுகிறோம் என்று கூறினேன். அதுவரை இருந்த அந்த ஒளிக்கீற்றானது எல்லார் முன்னிலையிலும் மெதுவாக மறைந்தது அந்த நேரத்தில் எங்களுக்கு எதுவுமே ஒன்றும் புரியவில்லை.
அந்த ஒளியானது மெதுவாக மறைந்துபோனது மீண்டும் ஆலயத்தை இருள் சூழ்ந்தது. இதன் மூலம் நான் கண்டு கொண்ட உண்மை என்னவென்றால்
"தரிசனம் என்பது கோவில் பூட்டிக்கிடந்தாலும் கிடைக்கும்" என உணரப்பெற்றேன்.
இன்று நினைத்துப்பார்த்தாலும் அந்த தரிசனம் எங்கள் நினைவில் நீங்காமல் இடம் பெற்றுவிட்டது.
குருமுனியானவர் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார் என்பதே உண்மை.

அகத்தியமே சத்தியம் --என்று மனமுறுக குருவை நோக்கி பிரார்த்திதேன்.

என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.