செவ்வாய், 1 ஜனவரி, 2013

இறையின் நிலை....

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு  ,

பல நாட்களுக்கு பிறகு உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்வு கொள்கிறேன் .

சித்தர்களின் ஆசியின்றி எம்மால் ஒரு பதிவும் செய்ய முடியவில்லை  .

இறையின் நிலையை யான் புரிந்துகொண்ட பிறகு

அதனை எல்லாருக்கும்  புரியும் வகையில் யான்  எழுத  ஆரம்பித்த பிறகுதான்

எம்மால் அதனை பதிவு  செய்ய  கூட முடியவில்லை .

எல்லாம்  அவர்களின்  சித்தம் .


இந்த ஆண்டு அனைவருக்கும் அனைத்து ஆசிகளையும் அந்த  ஆதி  சித்தன்

அருள்வான் என்பது சித்தம் .


" போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர் "
" போற்றி அருளுக நின் அந்தமாம்  செந்தளிர்கள் "


 http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

Wish You Happy New Year 2013





என்றும்-சிவனடிமை-பாலா.

ஞாயிறு, 7 அக்டோபர், 2012

சிவகாமசுந்தரியின் வருகை .....

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு  ,

நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன் . சித்தர்களின் அருட்பேராற்றலின் மூலம்  எங்களுக்கு ஒரு அழகிய பெண் குழந்தை கடந்த வாரம் அவதரித்துள்ளது .

சித்தர்களின் திருவிளையாடல்கள் என்னவென்று சொல்வது என்று எனக்கு எதுவும் புரியவில்லை .

அவர்களின் ஒவ்வொரு அசைவிலும் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் உண்டு என்பதை நான் புரிந்து கொண்டுள்ளேன் .

இந்த கலிகாலம் அவர்களின் கையில் தான் உள்ளது .

கனவில் கண்ட குழந்தை நினைவில் வந்துள்ளது .

எல்லாம் அந்த ஆதி சித்தனின் கருணை ..

கூடிய விரைவில் பல பதிவுகளை பதிவு  செய்ய முடிவு .செய்துள்ளேன் .

 http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

செவ்வாய், 24 ஜூலை, 2012

அமுரி என்னும் அமிர்தம் ....

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

சித்தர்களின் பாடல்களுக்கு விளக்கம் எழுதுவது என்பது அவர்களின்
கருணையினால் மட்டுமே முடியும். அதை தவிர அவர்களின் பாடல்களை
படிக்கும் ஒவ்வொரு ஆத்மாக்களின் நிலைக்கு ஏற்ற மாதிரியாக அப்பாடல்களின்  பொருள்  இருக்கும்.

குறைகள் இருப்பின்  மன்னிக்கவும் .


//உண்ணும்போ துயிரெழுத்தை உயர வாங்கி
**அமுரி என்னும் அமிர்தத்தை உண்ணும்போது "அ " என்னும் உயிர் எழுத்தை உயர எழுப்பதல்.
//உறங்குகின்ற போதெல்லா மதுவே  யாகும்
**தூங்கியும் தூங்காமலும் உள்ள   நிலை -மஹா  சாம்பவி முத்திரை உபயோகிக்கும் நிலை.//பெண்ணின்பா லிந்திரியம் விடும்போ தெல்லாம்
**சிவன் என்ற அமுரியை சக்தி என்ற இந்த ஸ்தூல உடலில் இறக்கும் முறை // பேணிவலம் மேல்நோக்கி அவத்தில்  நில்லு
**அமரியை உண்ணும்போது உடல் உள்ள நிலை // திண்ணுங்கா யிலைமருந்து மதுவே  யாகும்
**வாசி என்ற பயிற்சியின் மூலம் கிடைக்கும் இந்த மருந்தினை // தினந்தோறும் அப்படியே செலுத்த வல்லார்
**தினந்தோறும் ஒழுக்கம் தவறாமல் இந்த பயிற்சியை செய்பவர்கள் //மண்ணூழி காலமட்டும் வாழ்வார் பாரு
**இந்த மண்ணுலகம் உள்ளவரை இறப்பு என்பது வராது //மறலிகையில் அகப்படவு மாட்டார் தானே .
**இறப்பினை தரும் எமன் கையில் அகப்பட மாட்டார்

 எளிமையான விளக்கம் :

சிவத்தால் உருவாக்கப்பட்ட வாசி என்ற பயிற்சியை குருமுகமாக
பயின்று  அதன் மூலம் உண்டாகும் அமுரி என்ற அமிர்தத்தை உண்டு வாழ்ந்தால் இறப்பின்றி வாழலாம் .

அகத்திய மாமுனியின் அருளினால் எல்லாருக்கும்( உண்மையில் பரம்பொருளை அடைய விரும்பும் ஆத்மாக்கள் ) இந்த அமிர்தத்தை  கிடைக்க பிரார்த்திப்போம் .


 http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

புதன், 11 ஜூலை, 2012

அகத்தியர் ஞானம்-உயர் ஞானம் .

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

அகத்தியர் ஞானம்-உயர் ஞானம் .

உண்ணும்போ துயிரெழுத்தை உயர வாங்கி
       உறங்குகின்ற போதெல்லா மதுவே  யாகும்
பெண்ணின்பா லிந்திரியம் விடும்போ தெல்லாம்
       பேணிவலம் மேல்நோக்கி அவத்தில்  நில்லு
திண்ணுங்கா யிலைமருந்து மதுவே  யாகும்
      தினந்தோறும் அப்படியே செலுத்த வல்லார்
மண்ணூழி காலமட்டும் வாழ்வார் பாரு
      மறலிகையில் அகப்படவு மாட்டார் தானே .

விளக்கம் :

கூடிய விரைவில் ........


 http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

வெள்ளி, 1 ஜூன், 2012

அகத்திய முனியின் அரவணைப்பு...

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,
 
பல நாட்களாக எந்தவொரு பதிப்பினையும் எம்மால் பகிர முடியவில்லை.
கடந்த சித்திரை மாதம் -14  முதல் 19  வரை நாங்கள் பொதிகை யாத்திரை சென்று வந்தோம்.
அங்கு சென்ற அனுபவம் எமது வாழ்க்கையில் மறக்கமுடியாத சம்பவமாகும் .
புலியின் உறுமுதல் சத்தம்,
யானையின் பிளிறல் சத்தம் ,
குயிலின் அருமையான சங்கீத சத்தம் -இன்னும் எங்கள் காதுகளில் ரீங்காரம் செய்கிறது.
 
அகத்திய முனியின் அரவணைப்பு இன்றி அந்த தலத்திற்கு நம்மால் செல்ல முடியாது .
முடிந்தால் யாத்திரையின் அனுபவத்தை பகிர முயற்சி செய்கிறேன்.
 
குருநாதரின் பாதங்களை பிடித்து கொண்டு அவரின் பேரக் குழந்தைகள் போல் நாங்கள் அவர் அருகே  உட்கார்ந்து இருந்ததை 
எந்த ஜென்மத்திலும் எங்களால் மறக்க முடியாது.
 
ஒவ்வொரு அபிஷேகத்தின் போதும் அவரின் முகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் எங்கள் கண்ணெதிரே நிற்கிறது.
 
குறிப்பாக பால் அபிஷேகத்தின் பொது அவர் தமது விழிகளை உருட்டி ,மிரட்டி ,மேல் நோக்கி பல வித யோக வித்தைகளை
எங்களுக்கு செய்து காட்டினார்.
 
இறுதியாக நாங்கள் கிளம்பும்போது அவரின் கண்களில் இருந்து தாரையாக வந்த கண்ணீரை பார்த்து நாங்களும் அழுதுவிட்டு
கிளம்பினோம்.
 
இன்றளவிலும் எங்களால் அந்த தாக்கத்தை மறக்க முடியவில்லை .
 
வரும் நாட்களில் சில புகைப்படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
 
பால் அபிஷேகம்:
 
 
என்றும் சிவனடிமை - பாலா  

வியாழன், 19 ஏப்ரல், 2012

நந்தன ஆண்டு -சித்திரை மாதத்தின் முதல் மூன்று நாட்கள்

அன்புள்ள சித்த  உள்ளங்களுக்கு  ,

பல நாட்களுக்கு பிறகு   உங்களை    சந்திப்பதில் மிக மகிழ்ச்சி கொள்கிறேன்.

இந்த சித்திரை மாதத்தின் முதல் மூன்று நாட்கள் சித்தர்களின் விழா நாட்களாக தஞ்சையில் உள்ள அகத்தியர் மூலிகை உடல் இயக்க மையத்தில் தொடர்ந்து 10  வது ஆண்டாக நடைப்பெற்றது . இந்த மாநாட்டில் ஏறக்குறைய 800 க்கும் மேற்பட்ட பாரம்பரிய சித்த மூலிகை மற்றும் வர்மா வைத்தியர்கள் கலந்து கொண்டார்கள் .

அவர்கள் தங்களின் அனுபவங்களை எல்லாம் எல்லாருக்கும் புரியும் வண்ணம் எளிய முறையில் விளக்கி காட்டி கொண்டு இருந்தார்கள் .
மாநாட்டுக்கு வந்திருந்த அனைவருக்கும் இலவச முறையில் சித்த வைத்தியத்தை செய்து காட்டினார்கள்.  கண்களுக்கு மற்றும் நாசிக்கு தேவையான மருத்துவத்தை இலவசமாக ஏறக்குறைய 1000  க்கும் மேற்பட்ட மக்களுக்கு செய்தார்கள் .

மாநாட்டிற்கு பெரியார் மணியம்மை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு பல்கலைகழகத்தின் துணைவேந்தர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள் .

அடியேனும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு முடிந்த வரை வந்த மக்களுக்கு தேவையான அன்னதான உதவியையும், வருபவர்களை இன்முகத்துடன் வரவேற்றுதலும் போன்ற பணிகளை செய்து கொண்டு
நல்ல முறையில் இந்த மாநாடு முடிவுற உடன் இருந்தேன் என்பதை கூறி கொள்கிறேன்.

சிவவாக்கியரின் பாடலில் ஒன்று

காலைமாலை நீரிலே முழுகுமந்த மூடர்காள்
காலைமாலை நீரிலே கிடந்த தேரை என்பெறும்
காலமே எழுந்திருந்து கண்கள் மூன்றில் ஒன்றினால்
மூலமே நினைப்பிராகில் முத்தி சித்தி யாகுமே .

விளக்கம் : 

அதிகாலையில் எழுந்து , மூன்றாம் கண்ணான புருவ நெற்றியில் சிந்தனையை வைத்து வாசியை உயர்த்தினால் சித்தியும் முத்தியும்
கிடைக்கும் .


என்றும்-சிவனடிமை-பாலா.

புதன், 21 மார்ச், 2012

நீரழிவு நோய்க்கு இயற்கை மருத்துவம்...

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

நீரழிவு நோய்க்கு இயற்கை மருத்துவம்...
அன்பர் குருசாமியின் பதில் கண்டு மிக மகிழ்வுண்டேன் . 

மூலைக்கு மூலை அக்குபஞ்சர் மருத்துவர்கள் பெருகிவிட்டார்கள்  என்பது உண்மை தான் . இந்த மருத்துவத்தை நானும் தற்சமயம் தான் பயின்று வருகிறேன்.  எல்லாரும் கற்று கொள்ள கூடிய எளிமையான மருத்துவம் தான் . நீங்களும் பயின்று மருந்தில்லா மருத்துவ துறையில் மக்களுக்காக பணியாற்றுங்கள் .  உடலில் ஓடும் சக்தி ஓட்டத்தை கொண்டு நோயை குணபடுத்தும் அருமையான மருத்துவம்  தான் இது.

உடலில் உள்ள மண்ணீரல் உறுப்பினை நன்கு வைத்து கொண்டால் நமக்கு எந்தவொரு பாதிப்பும் வராது .  இன்சுலின் இல்லாமலும் நமது உடல் இயங்கு வண்ணம் இறைவன் அற்புதமாக படைத்துள்ளான் .

என்று மனிதன் உடல் உழைப்பினை மறந்தானோ அன்றோ நோய்களுக்கு
அடிமையாகிவிட்டான் . இன்சுலின் தேவையை குறைத்து கொண்டு மாற்று முறையில் வாழ கற்றுகொண்டால் அவனுக்கு நிச்சயம் நோயிலிருந்து விடுதலை கிடைக்கும்.

எளிமையான முறையில் நாம் இயற்கையோடு ஒத்து வாழ கற்றுக்கொண்டால் நோயினை கண்டு பயப்பட தேவையில்லை .

நோய் என்பது மனிதனுக்கு இயற்கை உணர்த்தும்   ஒரு அறிகுறி தான் . நமது உணவு முறையில் மாற்றம் ஏற்படும் போது தான் நோய் வருகிறது.

உண்ணும் உணவினை கவனித்தால் போதும் நோயின்றி வாழலாம் .

உணவே மருந்து . மருந்தே உணவு ...

தினந்தோறும் ஒரு கைப்பிடி முருங்கை கீரையை  சாப்பிடுவதற்கு
முன்பு சாப்பிடுங்கள்.


தினந்தோறும் ஒரு நெல்லிக்கனியை சாப்பிடுங்கள் .

தினந்தோறும் ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை சாப்பிடுவதற்கு
முன்பு சாப்பிடுங்கள்.

முடிந்த அளவு நடைப்பயற்சியை மேற்கொள்ளுங்கள் .

நீரழிவு நோயை முற்றிலும் நம்மால் ஒழிக்க முடியும்.

நாளைய பதிவில் எந்த வகையான உணவுகளை சேர்த்து கொள்ள
வேண்டும்  என கூறுகிறேன்.


http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

செவ்வாய், 20 மார்ச், 2012

நீரழிவு நோயில் இருந்து நம்மை பாதுகாப்பது எப்படி ?

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

நீரழிவு நோயில் இருந்து நம்மை பாதுகாப்பது எப்படி ...

இந்த தலைப்பை பார்த்தவுடன் எல்லாருக்கும் எப்படி நாம் அந்த நோயில் இருந்து மீளபோகிறோம் என்ற எண்ணம் தான் வரும்.  முதலில்  நீங்க தெரிந்த கொள்ளவேண்டியது சர்க்கரை நோய் என்பது நோயே அல்ல .
அது நமக்கு எச்சரிக்கை செய்கின்ற ஒரு நோய் தான்.

நமது உடலில் உள்ள இன்சுலின் அளவு குறையும் போதோ  அல்லது அதிகரிக்கம்போது உடலில் ஏற்படும் மாற்றமே சர்க்கரை நோயாகும் .

இதனை இரண்டு வகையாக பிரிக்கிறார்கள்.
1 ) பரம்பரை நோயாக வருவது .
       ஆங்கில மருத்துவம் இதனை குணபடுத்த முடியாது என்று கூறுகிறது.
"முயன்றால் முடியாது எதுவும் இல்லை ."

2 ) மன அழுத்தத்தினால் வருவது .
     இதனை எளிதாக குணப்படுத்தலாம்.

"மனநோய் தான் எல்லா வியாதிகளுக்கும் தாய் ."

சுலபமாக சர்க்கரை நோய் தீர்க்கும் வழிகள் :
1 ) எட்டு நடை பயிற்சி தினந்தோறும் 20  நிமிடம்.
2 ) வெறும் வயிற்றில் ஒரு கைப்பிடி முருங்கை இலைகளை சாப்பிடுவது.
3 )  வாரம் ஒரு முறை அக்குபஞ்சர் சிகிச்சை .

நிச்சயமாக குணமாக்க கூடிய வியாதி தான் இது .

தொடரும் ....

http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

திங்கள், 19 மார்ச், 2012

பரங்கிப்பேட்டையில் பாபாஜியின் அருகில்....

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

பரங்கிப்பேட்டையில் பாபாஜியின் அருகில்....

பலநாட்களாக என்னால் எந்தவொரு பதிப்பினையும் பகிர்வு செய்ய முடியவில்லை .

இரண்டு வாரங்களுக்கு முன்னால் நாங்கள் பாபாஜி அவதரித்த புண்ணிய பூமிக்கு சென்று இருந்தோம்.   அங்கு தரிசனம் முடிந்த பிறகு ,கொஞ்ச நேரம் தியான செய்து விட்டு போகலாம் என்று எண்ணம் கொண்டு இருந்தேன்.  நானும் என் நண்பனும் தியானம் செய்ய ஆரம்பித்தோம். ஆனால் அவனுக்கு தியானம் செய்ய தெரியாது , கொஞ்ச நேரம் கண்ணை மூடி கொண்டு பாபாஜியின் நாமத்தை சொல்லி கொண்டு இரு என்று சொல்லிவிட்டு தியானத்தை ஆரம்பித்தோம்.

கொஞ்ச நேரம் கழித்து ,எனக்கு அருகே யாரோ ஒருவர் உட்கார்ந்து கொண்டு வாசியை ஏற்றி கொண்டு இருந்தார் . என்னுடைய எண்ணம் எல்லாம் என் நண்பனின் மேல் இருந்தது .  ஏறக்குறைய 20  நிமிடங்கள் கழித்து நான் எனது கண்களை திறந்து அருகில் இருந்த என் நண்பனை பார்த்தேன் . அங்கு யாருமே இல்லை என்னை தவிர .
 ஒருவேளை இப்போதுதான் எழுந்திருந்து போய் இருப்பான் என்று எண்ணம் கொண்டு வெளியே வந்தேன் . 

ஆனால் என் நண்பனோ, வெளியே  என் மகனிடம் விளையாடி கொண்டு இருந்தான் . உடனே எனக்கு ஒரு எண்ணம் வந்தது .  என் நண்பனிடம்
எப்பொழுது தியானத்தை விட்டு வெளியே வந்தாய் என்று கேட்டேன்.

அவனோ நான் ஒரு 3  நிமிடங்கள் தான் உட்கார்ந்து இருந்தேன் . அதற்க்கு அப்புறமா என்னால் உட்கார முடியல என்று கூறினான்.

எனக்கு ஒரு சந்தோசம் , ஆச்சர்யம் ,பாபாஜியின் அருகில் இருந்து தியானம் பண்ணியதை நினைத்து கொண்டு இருந்ததை .


மறக்க முடியாத நினைவுகளோடு .....பாபாஜியின் துணையோடு ....


 
நீரழிவு நோயின் தன்மையையும் அதனை குணமாக்கும் மருத்துவத்தை   அறியும் முயற்சியில் ஈடுபட்டு அதில் ஓரளவு  வெற்றிபெற்றுள்ளேன். அதற்க்கான மருத்துவ செலவு ஒன்றும் இல்லை ,நீங்கள் உங்களைப்பற்றி நன்றாக தெரிந்து கொண்டு இயற்க்கை வைத்தியத்தின் மூலம் உங்களை நீங்களே குணப்படுத்தி கொள்ள முடியும்.

வாழ்நாள் முழுவதும் மருந்து மாத்திரைகளோடு வாழவேண்டும் என்ற அவசியம் உங்களுக்கு கிடையாது .


அதைப்பற்றிய விபரங்கள் வரும் நாட்களில் காணலாம் .


 http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.