செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

15 வது பாரம்பரிய தமிழ்நாட்டு வைத்தியர்கள் மாநில மாநாடு - 2017

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

வணக்கம் , நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்திக்கிறேன் .

15 வது பாரம்பரிய தமிழ்நாட்டு வைத்தியர்கள் மாநில மாநாடு 2017  - வரும் சித்திரை மாதம் 1,2,3 ஆகிய நாட்கள் தஞ்சாவூர் அருகில் உள்ள பிள்ளையார் பட்டியில் உள்ள அகத்தியர் மூலிகை உடலியக்க மருத்துவ மையத்தில் நடைபெறுகிறது.

அனைவரும் கலந்து கொண்டு சித்தர்களின் அருளை பெறுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் .


 http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

சனி, 3 டிசம்பர், 2016

மிக நீண்ட இடைவெளியுடன் உங்களை சந்திக்கிறேன்.

அன்புள்ள  சித்த  உள்ளங்களுக்கு ,

மிக நீண்ட இடைவெளியுடன் உங்களை சந்திக்கிறேன்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக , பல்வேறுப்பட்ட அனுபவங்கள்
எமக்கு  கிடைத்தன .

எம்மால் பதிவுகள்  பதிவு செய்யவே முடியவில்லை.


அந்த ஆதி சித்தன்  அருளோடு மீண்டும் இந்த பதிவின் மூலம்

வலைத்தளத்தில் இனைகிறேன் .


எந்தவொரு செயலையும்  செய்யுமின் குலதெய்வத்தை வணங்கி தான் செய்ய வேண்டும் என்பதை கடந்த இரண்டு  ஆண்டுகளாக
நான் பல்வேறு அனுபவங்கள்  மூலம் கண்டு கொண்டேன்.

தயவு செய்து உங்கள் குலதெய்வம் எதுவாக இருந்தாலும் ,அவர்களை வணங்கிய பின் எந்தவொரு  செயலையும்  செய்யுங்கள் .

குலதெய்வம் தெரியாதவர்கள் அந்த ஆதி சித்தானம் அனாதி ஆனா

பரம்பொருளை நாடுங்கள் .

குரு அருளோடு இறை அருளும் அனைவருக்கும் கிடைக்கட்டும் .


என்றும்-சிவனடிமை-பாலா.

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

பதிவுகளை பதிக்க முடியாமை ...

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

இறையின் பணியில் சில நாள் , பணியின் பணியில் பல நாள்

தேடலின் முடிவில்   சில  நாள் ,  தெளிவின் முடிவில் பல  நாள்

வாசியின் முடிவில் சில  நாள் ,  வாழ்வின் தெளிவில் பல நாள்

செயல்கள் எல்லாம் சில நாள் அதன் செயல்பாடுகள்  எல்லாம் பல நாள் .

என்று சித்தர்களின் சிந்தனை கொண்டு உலா வந்து கொண்டு இருக்கிறேன்.


 அவர்களின் அனுமதியுடன்  தொடர நினைக்கும் ....

 http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

செவ்வாய், 14 ஜனவரி, 2014

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் .

அன்புள்ள  சித்த உள்ளங்களுக்கு  ,


இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் .

நீண்ட நாட்களுக்குப்  பிறகு உங்களை  சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி , அடியேனின் வாழ்கையை என்னவென்று சொல்வதென்று எனக்கு ஒன்றும் புரியவில்லை. எல்லாம் அவர்களின் பாதங்களில் ஒப்படைத்தபின் என்னால் எதுவும் தனித்து இயங்கமுடியவில்லை.

அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்பது போல ......

அவர்களின் பார்வை இன்றி எம்மால் ஒரு செயலும்  செய்யமுடியவில்லை .

எம்மால் இயன்ற அளவிற்கு இந்த வலைத்தளத்தை மேம்படுத்த முயற்சிக்கிறேன்..

சொக்கநாத வெண்பாவில் .....

நீயே ஒளித்திருப்பை  நீயென்றும் காணாமல்
நீயே ஒளித்திருப்பை  நின்னருளால்  நீயே தான்
காட்ட அன்னியமாய்க்  கண்டேன்  உனது வினை
யாட்ட தென்ன சொக்கநாதா ...


சிவபோக சாரத்தில் 

கூட்டுவதுங் கூட்டிப் பிரிப்பதுவம் ஒன்றென்றை
ஆட்டுவதும்  ஆட்டி அடக்குவதுங்  காட்டுவதும்
காட்டி மறைப்பதுவுங் கண்ணுதலோன்  முன்னமைந்த
ஏட்டின் படியென் றிரு ......


எல்லாம் அவன் செய்ய நினைக்கும் போது .....யாம் என்ன செய்ய  இயலும் .

மேற்கூறிய இரண்டு பாடல்களுமே அவனின்றி ஒன்றுமில்லை  என்பதையே
குறிக்கிறது.


 http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

வியாழன், 25 ஏப்ரல், 2013

வாசியின் பலன்

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

அபிராமியின் வருகைக்குப் பிறகு கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டுள்ளது .

வாசியின் பலன் :

நமது சுவாசத்தின் நீளம் 12 அங்குலம் ,அதில் வாசி பயிற்சியின் மூலம் அதனை
நாம் குறைக்கும் போது  நமக்கு கிடைக்கும்  பலன்கள்  பின்வருமாறு சிவயோக சாரத்தில் கூறப்பட்டுள்ளது .

ஒரு அங்குலம் குறைந்தால் இவ்வுலக திசையினின்று சுவாதீனபடுவான்

இரண்டு அங்குலம் குறைந்தால் ஞான செல்வம் உண்டாகும்

மூன்று அங்குலம் குறைந்தால் விவேகிஆவான் .

நான்கு அங்குலம் குறைந்தால் தூர தேசத்தில் நடக்கும் செய்திகளை கூறுவான்

ஐந்து அங்குலம் குறைந்தால் ஞான திருஷ்டி பாக்கியம் கிடைக்கும்

ஆறங்குலம் குறைந்தால் ஆகாயத்திலுள்ள சகலமும் கண்டுனுர்வான்

ஏழங்குலம்  குறைந்தால் சரிரீரம்  காயசித்தி அடையும்

எட்டங்குலம்  குறைந்தால் அணிமாசித்திகளை  அடைவான்

ஒன்பதங்குலம்  குறைந்தால் நவ கண்டங்களில் சஞ்சரிப்பான்

பத்தங்கலும்  குறைந்தால் ஒரு  தேசத்தை விட்டு மற்றொரு  தேசத்துக்கு செல்வான் .


பதினோரு அங்குலம் குறைந்தால்  தமது  ஆன்மாவை கண்டு வசனிப்பான் .

பன்னிரண்டு அங்குலம் குறைந்தால் நெடுங்காலம்  அன்ன பாணாதிகளை  நீக்கி அவாவற்றி இருப்பான் . http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

செவ்வாய், 22 ஜனவரி, 2013

பிறப்புக்கு துணையாவது எது ...

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு  ,

பிறப்புக்கு துணையாவது  எது ...

பாம்பாட்டி சித்தரின் பாடலில் இருந்து  உங்களுக்கு ....

மணக்கோலங்  கொண்டு  மிக மனமகிழ்ந்துமே
மக்கள்  மனை சுற்றத்தோடு மயங்கி  நின்றாய்
பிணக்கோலங்  கண்டு பின்னுந்  துறவாவிட்டால்
பிறப்புக்கே துணையாமென்றா டாய்  பாம்பே ......


விளக்கம் :

பற்றினை துறவாவிட்டால்  மீண்டும் மீண்டும் பிறப்பினை நாம் எடுத்து கொள்வோம் .

http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

செவ்வாய், 1 ஜனவரி, 2013

இறையின் நிலை....

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு  ,

பல நாட்களுக்கு பிறகு உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்வு கொள்கிறேன் .

சித்தர்களின் ஆசியின்றி எம்மால் ஒரு பதிவும் செய்ய முடியவில்லை  .

இறையின் நிலையை யான் புரிந்துகொண்ட பிறகு

அதனை எல்லாருக்கும்  புரியும் வகையில் யான்  எழுத  ஆரம்பித்த பிறகுதான்

எம்மால் அதனை பதிவு  செய்ய  கூட முடியவில்லை .

எல்லாம்  அவர்களின்  சித்தம் .


இந்த ஆண்டு அனைவருக்கும் அனைத்து ஆசிகளையும் அந்த  ஆதி  சித்தன்

அருள்வான் என்பது சித்தம் .


" போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர் "
" போற்றி அருளுக நின் அந்தமாம்  செந்தளிர்கள் "


 http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

Wish You Happy New Year 2013

என்றும்-சிவனடிமை-பாலா.

ஞாயிறு, 7 அக்டோபர், 2012

சிவகாமசுந்தரியின் வருகை .....

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு  ,

நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன் . சித்தர்களின் அருட்பேராற்றலின் மூலம்  எங்களுக்கு ஒரு அழகிய பெண் குழந்தை கடந்த வாரம் அவதரித்துள்ளது .

சித்தர்களின் திருவிளையாடல்கள் என்னவென்று சொல்வது என்று எனக்கு எதுவும் புரியவில்லை .

அவர்களின் ஒவ்வொரு அசைவிலும் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் உண்டு என்பதை நான் புரிந்து கொண்டுள்ளேன் .

இந்த கலிகாலம் அவர்களின் கையில் தான் உள்ளது .

கனவில் கண்ட குழந்தை நினைவில் வந்துள்ளது .

எல்லாம் அந்த ஆதி சித்தனின் கருணை ..

கூடிய விரைவில் பல பதிவுகளை பதிவு  செய்ய முடிவு .செய்துள்ளேன் .

 http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

செவ்வாய், 24 ஜூலை, 2012

அமுரி என்னும் அமிர்தம் ....

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

சித்தர்களின் பாடல்களுக்கு விளக்கம் எழுதுவது என்பது அவர்களின்
கருணையினால் மட்டுமே முடியும். அதை தவிர அவர்களின் பாடல்களை
படிக்கும் ஒவ்வொரு ஆத்மாக்களின் நிலைக்கு ஏற்ற மாதிரியாக அப்பாடல்களின்  பொருள்  இருக்கும்.

குறைகள் இருப்பின்  மன்னிக்கவும் .


//உண்ணும்போ துயிரெழுத்தை உயர வாங்கி
**அமுரி என்னும் அமிர்தத்தை உண்ணும்போது "அ " என்னும் உயிர் எழுத்தை உயர எழுப்பதல்.
//உறங்குகின்ற போதெல்லா மதுவே  யாகும்
**தூங்கியும் தூங்காமலும் உள்ள   நிலை -மஹா  சாம்பவி முத்திரை உபயோகிக்கும் நிலை.//பெண்ணின்பா லிந்திரியம் விடும்போ தெல்லாம்
**சிவன் என்ற அமுரியை சக்தி என்ற இந்த ஸ்தூல உடலில் இறக்கும் முறை // பேணிவலம் மேல்நோக்கி அவத்தில்  நில்லு
**அமரியை உண்ணும்போது உடல் உள்ள நிலை // திண்ணுங்கா யிலைமருந்து மதுவே  யாகும்
**வாசி என்ற பயிற்சியின் மூலம் கிடைக்கும் இந்த மருந்தினை // தினந்தோறும் அப்படியே செலுத்த வல்லார்
**தினந்தோறும் ஒழுக்கம் தவறாமல் இந்த பயிற்சியை செய்பவர்கள் //மண்ணூழி காலமட்டும் வாழ்வார் பாரு
**இந்த மண்ணுலகம் உள்ளவரை இறப்பு என்பது வராது //மறலிகையில் அகப்படவு மாட்டார் தானே .
**இறப்பினை தரும் எமன் கையில் அகப்பட மாட்டார்

 எளிமையான விளக்கம் :

சிவத்தால் உருவாக்கப்பட்ட வாசி என்ற பயிற்சியை குருமுகமாக
பயின்று  அதன் மூலம் உண்டாகும் அமுரி என்ற அமிர்தத்தை உண்டு வாழ்ந்தால் இறப்பின்றி வாழலாம் .

அகத்திய மாமுனியின் அருளினால் எல்லாருக்கும்( உண்மையில் பரம்பொருளை அடைய விரும்பும் ஆத்மாக்கள் ) இந்த அமிர்தத்தை  கிடைக்க பிரார்த்திப்போம் .


 http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.