வியாழன், 19 ஏப்ரல், 2012

நந்தன ஆண்டு -சித்திரை மாதத்தின் முதல் மூன்று நாட்கள்

அன்புள்ள சித்த  உள்ளங்களுக்கு  ,

பல நாட்களுக்கு பிறகு   உங்களை    சந்திப்பதில் மிக மகிழ்ச்சி கொள்கிறேன்.

இந்த சித்திரை மாதத்தின் முதல் மூன்று நாட்கள் சித்தர்களின் விழா நாட்களாக தஞ்சையில் உள்ள அகத்தியர் மூலிகை உடல் இயக்க மையத்தில் தொடர்ந்து 10  வது ஆண்டாக நடைப்பெற்றது . இந்த மாநாட்டில் ஏறக்குறைய 800 க்கும் மேற்பட்ட பாரம்பரிய சித்த மூலிகை மற்றும் வர்மா வைத்தியர்கள் கலந்து கொண்டார்கள் .

அவர்கள் தங்களின் அனுபவங்களை எல்லாம் எல்லாருக்கும் புரியும் வண்ணம் எளிய முறையில் விளக்கி காட்டி கொண்டு இருந்தார்கள் .
மாநாட்டுக்கு வந்திருந்த அனைவருக்கும் இலவச முறையில் சித்த வைத்தியத்தை செய்து காட்டினார்கள்.  கண்களுக்கு மற்றும் நாசிக்கு தேவையான மருத்துவத்தை இலவசமாக ஏறக்குறைய 1000  க்கும் மேற்பட்ட மக்களுக்கு செய்தார்கள் .

மாநாட்டிற்கு பெரியார் மணியம்மை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு பல்கலைகழகத்தின் துணைவேந்தர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள் .

அடியேனும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு முடிந்த வரை வந்த மக்களுக்கு தேவையான அன்னதான உதவியையும், வருபவர்களை இன்முகத்துடன் வரவேற்றுதலும் போன்ற பணிகளை செய்து கொண்டு
நல்ல முறையில் இந்த மாநாடு முடிவுற உடன் இருந்தேன் என்பதை கூறி கொள்கிறேன்.

சிவவாக்கியரின் பாடலில் ஒன்று

காலைமாலை நீரிலே முழுகுமந்த மூடர்காள்
காலைமாலை நீரிலே கிடந்த தேரை என்பெறும்
காலமே எழுந்திருந்து கண்கள் மூன்றில் ஒன்றினால்
மூலமே நினைப்பிராகில் முத்தி சித்தி யாகுமே .

விளக்கம் : 

அதிகாலையில் எழுந்து , மூன்றாம் கண்ணான புருவ நெற்றியில் சிந்தனையை வைத்து வாசியை உயர்த்தினால் சித்தியும் முத்தியும்
கிடைக்கும் .


என்றும்-சிவனடிமை-பாலா.