வெள்ளி, 1 ஜூன், 2012

அகத்திய முனியின் அரவணைப்பு...

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,
 
பல நாட்களாக எந்தவொரு பதிப்பினையும் எம்மால் பகிர முடியவில்லை.
கடந்த சித்திரை மாதம் -14  முதல் 19  வரை நாங்கள் பொதிகை யாத்திரை சென்று வந்தோம்.
அங்கு சென்ற அனுபவம் எமது வாழ்க்கையில் மறக்கமுடியாத சம்பவமாகும் .
புலியின் உறுமுதல் சத்தம்,
யானையின் பிளிறல் சத்தம் ,
குயிலின் அருமையான சங்கீத சத்தம் -இன்னும் எங்கள் காதுகளில் ரீங்காரம் செய்கிறது.
 
அகத்திய முனியின் அரவணைப்பு இன்றி அந்த தலத்திற்கு நம்மால் செல்ல முடியாது .
முடிந்தால் யாத்திரையின் அனுபவத்தை பகிர முயற்சி செய்கிறேன்.
 
குருநாதரின் பாதங்களை பிடித்து கொண்டு அவரின் பேரக் குழந்தைகள் போல் நாங்கள் அவர் அருகே  உட்கார்ந்து இருந்ததை 
எந்த ஜென்மத்திலும் எங்களால் மறக்க முடியாது.
 
ஒவ்வொரு அபிஷேகத்தின் போதும் அவரின் முகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் எங்கள் கண்ணெதிரே நிற்கிறது.
 
குறிப்பாக பால் அபிஷேகத்தின் பொது அவர் தமது விழிகளை உருட்டி ,மிரட்டி ,மேல் நோக்கி பல வித யோக வித்தைகளை
எங்களுக்கு செய்து காட்டினார்.
 
இறுதியாக நாங்கள் கிளம்பும்போது அவரின் கண்களில் இருந்து தாரையாக வந்த கண்ணீரை பார்த்து நாங்களும் அழுதுவிட்டு
கிளம்பினோம்.
 
இன்றளவிலும் எங்களால் அந்த தாக்கத்தை மறக்க முடியவில்லை .
 
வரும் நாட்களில் சில புகைப்படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
 
பால் அபிஷேகம்:
 
 
என்றும் சிவனடிமை - பாலா