திங்கள், 8 நவம்பர், 2010

அகத்தியரின் பரிபூரணம்-400

****************
காப்பு
***************
பூரணமாய் நிறைந்தபரி பூரணத்தைப்போற்றிப்
 புகழ்பெரிய வைத்திய பூரணத்தைப்பாடக்
காரணமாய்கருவுரு வெங்குங்தானாய்க்
கண்மணியினடுவான கருணைதன்னை
யாரணமாய்முக்கோண நடுவினின்ற
அம்பரத்தையனுதுனமு மறிவாற்போற்றி      
வாரனமாமுகத்தோனை யனுதினமும்போற்றி
மகத்தானவேதியனை வணங்கினேனே.