அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,
கடந்த இரண்டு ,மூன்று வாரங்களாக என்னால் எந்தவொரு பதிப்பினையும் பதிவு செய்ய முடியவில்லை . சித்தர்களின் மாந்திரிகம் என்ற ஆராய்ச்சியில் கொஞ்சம் மூழ்கியதால் பதிவுகளை செய்ய முடியவில்லை . அதே வேலை எமது பாஸ்போர்ட் காலாவதி ஆகிவிட்டதால் அதனை புதிப்பிக்கவே எனக்கு இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது .
நல்ல அனுபவங்கள் நமது அரசாங்க அலுவலகங்களில் எனக்கு கிடைத்தது நண்பர் குருசாமி அடிக்கடி தமது வலைப்பூவில் இன்றைய அரசியல் மற்றும் அரசாங்க அலுவலல்களில் நடக்கும் நிகழ்சிகளை குறிப்பிடுவதை என்னால் அனுபவபூர்வமாக உணரமுடிந்தது .
சென்னைக்கும் திருச்சிக்கும் ஏறக்குறைய 4 தடவை செல்லவேண்டிய சூழ்நிலை ஆகிவிட்டது .இது தான் நான் பதிவுகளை பதிவு செய்ய முடியாதற்க்கான காரணாமாகும் . அதேவேளை இந்த குறிப்பிட்ட காலத்தில் எனக்கு மூன்று சித்தர்களின் மாந்திரிக நூல்கள் கிடைத்தது .
1 ) அகத்தியரின் மாந்திரிக காவியம்
2 ) கருவூரரின் அட்டமா சித்து
3 ) பிருகு முனிவரின் மாந்திரிக அரிசுவடி.
இந்த மூன்று நூல்களுக்கும் விரிவுரை இல்லை . இருப்பினும் அவர்களின் கருணையால் கொஞ்சம் கொஞ்சம் என்னால் படிக்க முடிகிறது . இன்றைய போலி சாமியார்களின் நிலை மற்றும் அவர்கள் கூறும் வார்த்தை வித்தைகளை சித்தர்கள் பாடி இருப்பதை கண்டு வியந்து போனேன் .
வருகின்ற 30 ஜுலை அன்று ஆடி அமாவாசை விழா சதுரகிரியில் நடைபெற இருப்பதால் என்னால் பதிவுகளை பதிவு செய்ய கொஞ்சம் கால தாமதமாகும் என நினைக்கின்றேன். சித்தர்களின் தலைமையிடம் மற்றும் அனைத்து சித்தர்களும் கண்டிப்பாக வரவேண்டிய இடமும் நாளும் அந்த நாள் ஆகும் . இந்த நிகழ்வுக்கும் அவர்களின் ஆசி இருந்தால் மட்டுமே போக முடியும் .
எமக்கு மாந்திரகத்தில் நம்பிக்கை கிடையாது இருப்பினும் சித்தர்களே அதனைப்பற்றி பாடி இருப்பதால் கொஞ்சம் தெரிந்து கொள்ள ஆசையாக தான் இருக்கிறது .
வரும் பதிவுகளில் சில பாடல்களை பார்ப்போம்.
என்றும்-சிவனடிமை-பாலா.