செவ்வாய், 5 ஜூலை, 2011

சதுரகிரியில் நாங்கள் ....

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு  , 

நேற்றைய தொடர்ச்சி ,

மகாலிங்கத்தின் பிறந்த நாள் அன்று இரவு என்னுடைய அனைத்து நண்பர்களையும் மற்றும் சுற்றத்தில் உள்ளவர்களை அழைத்து ஒரு சிறிய விருந்தினை கொடுத்து மகிழ்ந்தேன் .

அன்று எதிர்பார்த்த பலர் வரவில்லை அவர்களின் சூழ்நிலை அப்படி இருக்க வந்தவர்களோ மனமார மகாலிங்கத்தை வாழ்த்தினார்கள் .

அன்று இரவே நாங்கள் சதுரகிரிக்கு புறப்பட்டு விட்டோம். என் மனதில் ஒரே ஒரு ஆசை இருந்தது  என் மகனின் பிறந்த நாள் அன்று அவனுக்கு ஒரு ருத்ராட்சை வாங்கி கழுத்தில் அணிய வேண்டும் என்று.

இதனை என் மனைவியிடம் சொல்லியபோது ,மகாலிங்கம் கண்டிப்பா கொடுப்பார் கவலைபடாதிங்க என்று ஆறுதல்வார்த்தை கூறினாள்.
 நாங்கள் மதுரை வந்தடைந்துவுடன் எங்கள் சதுரகிரி வழிகாட்டி ஐயா வெங்கடேஷன் எங்களை வரவேற்றார் . அதற்குபின் அவர் இமயமலையில் இருந்து வாங்கிவந்த ஒரு அற்புதமான ருத்ராச்யை என் மகனின் கழுத்தில் கட்டினார் . அதனை கண்ட நான் ஆச்சயர்ப்பட்டு போனேன்.
 நாம் நினைப்பதை இறைவன் எவ்வகையாலவது நம்மிடம் சேர்த்து விடுகிறார் என்பதனை உணர்ந்தேன் .

அதற்குபின் சுந்தர மகாலிங்கத்திடம் சென்றபோது என் மகனை பார்த்த பூசாரிகள் அவனை பார்த்து கையெடுத்து கும்பிட்டார்கள் . பின் அவனை தூக்கிக்கொண்டு சுந்தர மகாலிங்கத்தின் அருகே படுக்க வைத்துவிட்டு அவனுக்கு ஒரு மாலையை அவன் கழுத்தில் போட்டு என்னிடம் கொடுத்தார்கள் .  எனக்கு ஒன்றுமே புரியவில்லை ,எல்லாம் அவன் செயல் என்று உணரபெற்றேன் .

பிறகு கும்பகிரி அகத்தியர் மடத்தை சேர்ந்த சித்தர்களிடம் ஆசி பெற்று அங்கு காலை உணவினை உண்டோம் . பின் சந்தன மகாலிங்கத்தை பார்க்க புறப்பட்டோம் .

அங்கும் நல்ல வரவேற்பு ,அனைவரும் மகாலிங்கத்தை வாழ்த்தினார்கள் .
 நான் அங்கு சென்று ஏறக்குறைய எட்டு மாதங்கள் ஆகிவிட்டது அவனின்றி அவன் தாள் வணங்க முடியாது என்பது போல் அவன் அருளின்றி சதுரகிரி மலை ஏற முடியாது என்பதனை நான் உணர்ந்தேன் . அன்று மாலை அருமையான அபிஷேகங்கள் நடந்தது . அதற்க்கு பின் மகாலிங்கத்திடம் என் மகனுக்காக வேண்டி கொண்டோம் .

அங்கு அபிசேகம் நடந்த போது சந்தன மகாலிங்கத்தின் முகத்தில் பல உருவங்கள் தோன்றி மறைந்ததை எங்களால்  காண முடிந்தது . நந்திக்கு ரொம்ப முக்கியத்துவம் ஏன் கொடுக்கப்படுகிறது என்ற ஞானம் எனக்கு அன்று தான்
கிடைத்தது .

பிறகு மெதுவாக மழை பெய்ய தொடங்கியது , இதுவும் ஒரு அதிசயம் தான் .
பக்தர்களின் குறையை கேட்பதில் மகாலிங்கத்துக்கு நிகர் யாரும் இல்லை .

நாங்கள் மலை ஏறும்போது என் மனைவி வெங்கட் ஐயாவிடம் கூறினாள்  , இன்னைக்கு மழை பெய்தால் நாங்க வந்தத அவர் ஏற்றுக்கொண்டு விட்டார் என்று . அதே போல் மழையும் பெய்து எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது .
மறுநாள் காலை என் மகனை சந்தன மகாலிங்கத்திடம் ஒப்படைத்துவிட்டேன்.

அவனை மகாலிங்கத்தின் முன் படுக்க வைத்து சித்தர்களிடம் ஒப்படைத்துவிட்டு பின் தத்து எடுத்துகொண்டோம் . இனிமேல் அவன் எங்கள் சொத்து இல்லை என்றும் இனிமேல் அவன் சித்தர்களின் சொத்து என்று கூறி  சத்திய பிரமாணம் எடுத்து கொண்டோம்.

இனிமேல் நாங்கள் வளர்ப்பு தந்தையும் தாயுமாக மகாலிங்கத்தை பார்க்கும் பொறுப்பினை சித்தர்கள் எங்களிடம் தந்து விட்டார்கள் .

பிறகு மதுரை வந்து அன்னை மீனாட்சியை தரிசினம் செய்து கொண்டோம்.
என் மகன் மதுரை கோயில் இறங்கி தானே நடக்க ஆரம்பித்து விட்டான்.
யார் கூப்பிட்டும் அவன் செல்லவில்லை அதுவும் எனக்கு ஒரு ஆச்சர்யமாக இருந்தது .

நாளைய பதிவில் இருந்து சித்தர்களின் பாடல்களையும் அதற்க்கான விளக்கத்தையும் நாம் மீண்டும் தொடருவோம் ...

 http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

7 கருத்துகள்:

  1. அருமை..

    தன்னை அடைந்தார்க்கு பின்னை என்னான் எம்பெருமான் அடிகளே..

    வாழ்த்துக்கள்.

    http://sivaayasivaa.blogspot.com

    சிவயசிவ

    பதிலளிநீக்கு
  2. மகாலிங்கத்துக்கு எனது உளம் கனிந்த வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  3. அந்த இறைவன் பொருள்களே உலகில் உள்ள அனைத்தும்,அவருடையதை அவருக்கு கொடுத்து மீண்டும் நீங்கள் எடுத்து வந்துவிட்டேன் என்று சொல்லியிருக்கிறீர்களே.எல்லாம் இறைவன் பொருட்களே! இதில் நமது என்பது ஏதுமில்லை நம் உயிர் உட்பட.நீங்கள் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் நாமெல்லோருமே இறைவனின் சொத்துக்களே.இந்த இறைவனின் சொத்தான இந்த பூமியில் உலவ வந்திருக்கும் விருந்தினர்களே!நமக்கே இது எத்தனை நாளென்று தெரியாமல் இருக்கும் போது இந்தப் பிறவியில் ஏற்பட்டுள்ள பந்தங்களைப் பற்றி கவலை கொள்ளவே தேவையில்லை.தவறாகக் கொள்ள வேண்டாம்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்
    http://machamuni.blogspot.com/
    http://kavithaichcholai.blogspot.com

    பதிலளிநீக்கு
  4. அன்புள்ள சாமி ஐயப்பன் ஐயா அவர்களே ,

    தங்களின் கருத்துகள் மிக அருமை .

    // நாமெல்லோருமே இறைவனின் சொத்துக்களே.இந்த இறைவனின் சொத்தான இந்த பூமியில் உலவ வந்திருக்கும் விருந்தினர்களே!நமக்கே இது எத்தனை நாளென்று தெரியாமல் இருக்கும் போது இந்தப் பிறவியில் ஏற்பட்டுள்ள பந்தங்களைப் பற்றி கவலை கொள்ளவே தேவையில்லை.//

    தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி .

    என்றும்-சிவனடிமை-பாலா.

    பதிலளிநீக்கு
  5. அன்புள்ள ரத்னவேல் மற்றும் பாலாஜி ஐயா அவர்களே ,

    தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி .

    என்றும்-சிவனடிமை-பாலா.

    பதிலளிநீக்கு
  6. அன்புள்ள ஜானகி ராமன் ஐயா அவர்களே,

    சரணாகதியே தான் மிக உயர்ந்தது .

    தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி .

    என்றும்-சிவனடிமை-பாலா.

    பதிலளிநீக்கு
  7. நாமே மஹாலிங்கத்தின் குழந்தைகள் என்னும்போது நம் குழந்தைகள் அவரின் பேரன்கள் தானே.... :-)

    தங்கள் மகனுக்கு எங்கள் வாழ்த்துக்கள்...

    http://anubhudhi.blogspot.com/

    பதிலளிநீக்கு