வியாழன், 20 அக்டோபர், 2011

குரு என்பவர் யார் ?

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு  ,

குரு என்பவர் யார் ? என்ற கேள்வியை பார்க்கும்போதே எனக்கு தலை சுற்றுகிறது. எனக்கு தெரிந்த கருத்துகளை மட்டும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

யாரையும் நாம்  தரக்குறைவாக  பேசக்கூடாது . ஏனென்றால் நமக்கு தெரிந்த விசயங்களை விட நமக்கு தெரியாத விஷயங்கள் தான் இவ்வுலகில் அதிகம் உள்ளது.

இதை தான் அவ்வை அம்மையாரும் அழகாக கூறுவார் //கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு //.

பொதுவாக நதிமூலம் ரிஷி மூலம் பார்க்க கூடாது என்று கூறுவார்கள் . இதற்க்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தினை கூறுவார்கள் .  நதி என்பது மலைகளில் தோன்றி பல நாடு நகரங்களை வளம் கொழிக்க வைத்துவிட்டு இறுதியில் கடலில் கலக்கிறது.
மலையில் அதன் குணம் மூலிகை நிறைந்ததாக இருக்கும் . நகரங்களில் அது மாசுப்பட்டு இருக்கும் இறுதியில் எப்படி இருக்கும் என்பதை நம்மால்  கணிக்க முடியாது.

இதனை ஏன் ரிஷிகளுடன் ஒப்பிட்டு பார்த்தார்கள் என்று பார்த்தால் நமக்கு ஆச்சர்யமாக தான் இருக்க செய்கிறது .   ஒருவன் எப்படி வாழ்ந்தான் ?எப்படி வாழ்ந்து கொண்டு இருக்கிறான் ? எப்படி வாழ்வான் ? போன்ற கேள்விகளுக்கு விடை தெரிந்தாலே போதும் ரிஷி என்பது என்னவென்று புரியும் .

நதி -பாரபட்சமின்றி எல்லா இடத்தில் பாய்ந்து அனைவரையும் வாழ வைக்கும்.
ரிஷி -பாரபட்சமின்றி எல்லா மக்களையும் நேசித்து அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவேண்டும்.

இவ்வுலகில் எல்லாரும் கூறும் மந்திரம் ...

       மாதா பிதா குரு தெய்வம்.- இதனை எந்த மதத்தினாராலும் மறுக்க முடியாது.

மாதா -இவ்வுலகில் நம்மை முதலில் அறிமுக படுத்துபவள் .
பிதா  -இவ்வுலகில் நமக்கு வெளியுலக வாழ்க்கையை அறிமுக படுத்துபவர் .
குரு   -இவ்வுலகில் தெய்வம்/வாழ்க்கை  என்ற தத்துவத்தை விளக்குபவர் .
தெய்வம் - குருவின் அருளோடும் துணையோடும் தெய்வத்துடன் ஒன்றி போதல் .

//ஒன்றும் இல்லாத பரவெளியே தெய்வம்//

ஆகையால் தான் இவ்வுலகில் பிறக்கும் எல்லாரும்  முதலில் அம்மா என்றும் பின் அப்பா என்றும் கூறி பிற்காலத்தில் படிக்கும் காலத்தில் ஐயா என்று வணங்கி இறுதியில் சிவசிவ என்றோ கோவிந்தா என்றோ வாழ்க்கை முடித்து கொள்கிறோம்.
அம்மா -> அப்பா -> ஐயா ->இறைவா
மேற்கூறியதில் ஒன்று குறைந்தாலும் கூட நமக்கு சிக்கல் தான் .

நமது வாழ்க்கை எப்படி ஒத்து போகிறது என்று நீங்களே பாருங்கள் . இதில் இடையில் வரும் "குரு " என்பது தான் பிரச்சனையே . எப்படி இந்த பிரச்னையை சமாளிப்பது என்பது தான் மதி.

கல்லூரிக்கு செல்லும் பிள்ளைகளை நினைத்து பெற்றோர்கள் அஞ்சுவார்கள் ஏனென்றால் ரெண்டாம்கெட்ட வயசு என்னவேண்டுமானாலும் நடக்கலாம் என்று .  அதுபோல தான் குருவை தேர்ந்து எடுப்பதிலும் நமக்கு நிறைய பயம். என்னவேண்டுமானாலும் நடக்கலாம்.

இன்று எந்த செய்தித்தாளை எடுத்தாலும் போலி சாமியார்கள் கைது , கற்பழிப்பு வழக்கு , கொலை வழக்கு போன்ற செய்திகள் தான் நமது கண்களில் படுகிறது.  அப்படி இருக்க எப்படி உண்மையான குருவினை எப்படி  கண்டுபிடிப்பது ? ரொம்ப கஷ்டமான கேள்வி .

"கதவை திற காற்று வரட்டும் "- என்ற வார்த்தையில் பல அர்த்தங்கள் உண்டு. இதில் எந்த கதவு என்பது தான் பிரச்சனையே !. ஆக மொத்தம் கதவை திறக்க வேண்டும்.

நாளை திறக்கலாம் ...


http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

2 கருத்துகள்:

 1. ரிஷியும் குருவும் ஒன்றாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை..

  குரு ரிஷியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

  இன்று ரிஷியாக இருப்பவர்கள் நாளை ரிஷியாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை..

  ஆனால் ஒரு குரு என்பவர் எப்போதும் குருவாகவே இருக்க வேண்டும். எனவே ரிஷிகளின் சுதந்திரம் அவர்கள் குருவானவுடன் போய் விடுகிறது.

  ஒருவர் குரு என்று ஆகிவிட்டால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற நியதிக்கு ஆளாகிறார். அதை தொடர்ந்து செய்ய முடியாதபோது தோல்வி அடைகிறார். அதுவே நாம் இன்று சந்திக்கும் போலி சாமியார்கள் / குருமார்கள்..

  மேலும் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

  பகிர்வுக்கு நன்றி..

  http://anubhudhi.blogspot.com/

  பதிலளிநீக்கு
 2. Thanks...


  திருவடி தீக்ஷை(Self realization)
  இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.
  நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
  சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.


  Please follow
  http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk (PART-1)
  (First 2 mins audio may not be clear... sorry for that)

  http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4 (PART-2)

  http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo (PART-3)

  Online Books
  http://www.vallalyaar.com/?p=409


  Contact guru :
  Shiva Selvaraj,
  Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
  17/49p, “Thanga Jothi “,
  Kalaignar kudi-iruppu – Madhavapuram,
  Kanyakumari – 629702.
  Cell : 92451 53454

  பதிலளிநீக்கு