வியாழன், 27 அக்டோபர், 2011

பதினெண்பேரை காணும் மந்திரம்...

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,
    
"பதினெண்பேரை காணும் மந்திரம்" என்றதும் நமக்கு ஞாபகம் வருவது நமது பதினெட்டு சித்தர்களை தான் அதில் நமக்கு எந்தளவும் சந்தேகம் இல்லை.  இருப்பினும் இந்த பதினெட்டு என்பதில் பலவித கருத்துகள் உள்ளன.  இவற்றை கடந்தவர்கள் தான் சித்தர்கள் என்று ஒரு சாரர் கூறுவார். ஆகையால் தான் ஐயப்பசுவாமிக்கு பதினெட்டு படிகள் அமைத்தனர் . இந்த பதினெட்டு படியின் தன்மையை உணர்ந்தால் தான் ஐயப்ப சுவாமி போல் மரணமில்லா பெருவாழ்வை நம்மால் அடையமுடியும் என்ற தத்துவத்தை தான் நமது மூதாதையார்கள் செய்துவிட்டு போயிருக்கிறார்கள். ஆனால் அதனை உணர்ந்தவர்கள் வெகு சிலரே இவ்வுலகில் உள்ளனர்.

தமிழர்களின் ஞான பொக்கிஷமான ஞானக்கோவையில் இருந்து பதினெட்டு சித்தர்களை தரிசிக்கும் முறையை நிஜானந்த போதம் பின்வருமாறு கூறுகிறது.

நிஜானந்த போதம் : 41 

செய்ததமிழ் தனையறிந்து  பதினெண் பேரைச்
   செம்மையுடன் காண்பதற்கு மூலங் கேளு
சைதன்ய மானதொரு தன்னைப் போற்றிச்
   சதாகாலம் ஓம் சிங்ரங் அங்சிங் கென்று
மெய்தவறாப் பூரணமா யுருவே செய்தால்
   வேதாந்த சித்தரைத்தான் வசமாய்க் காண்பாய்
உய்தமுடன் அவர்களைத்தான்  வசமாய்க் கண்டால்
   உத்தமனே சகலசித்துக் குதவியாமே...


"ஓம் சிங்ரங் அங்சிங் " -என்று குறிப்பிட்டு உள்ளார்கள் .

முயற்சித்து பார்ப்போம் சித்தர்களை காண. ....

 
என்றும்-சிவனடிமை-பாலா.

9 கருத்துகள்:

  1. நல்ல தகவல்.. இதை வேற எங்கியோ படிச்ச ஞாபகமும் இருக்கு..

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    பதிலளிநீக்கு
  2. இந்த சுட்டியில் சற்று விளக்கமாகவே இருக்கிறது..

    http://www.livingextra.com/2011/08/blog-post_25.html

    பதிலளிநீக்கு
  3. இது சத்தியமான மந்திரங்கள் நாம் சத்தியமாக நம்பினால் !!

    இது என் அனுபவம் ., உண்மை

    பதிலளிநீக்கு
  4. ஐயா நான் தங்கள் பதிவுகள் சில படித்தான் மிகவும் ஆருமை

    பதிலளிநீக்கு
  5. pooranam enral ennavenru theriya venum. piragu pooranathil ninru jebika venum . thiru. chennai

    பதிலளிநீக்கு
  6. அது ஞான கோவையாஅல்லது பெரிய ஞான கோவையா? நான் சமீபத்தில் பெரிய ஞானகோவை வாங்கி படிக்கிறேன் அதில் நீங்கள் சொல்லும் நிஜானந்த போதம் : 41 என்ற ஒரு தலைப்பு இல்லை.

    பதிலளிநீக்கு
  7. மாந்த்ரீகம் கற்க வேண்டுமா ?

    manthrigam.blogspot.com

    பதிலளிநீக்கு