அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் ....
உங்களால் மனதில் உள்ள தீய எண்ணங்களை குறைக்கமுடியவில்லைஎன்றால் பதிநென்மர் சித்தர்களின் பாதங்களை இத்திருநாளில் சரணடையுங்கள் .
குரு யாரென்று தெரியாதவர்களுக்கும் ஆன்மிகம் என்றால் என்ன என்று தெரிய விரும்புவர்களும் சற்குரு அகத்தியரின் பாதங்களை சரணடையுங்கள் .
அவரை அடைய விரும்பும் உள்ளங்கள் கீழ்வரும் மந்திரங்களை கூறலாம் .
சத்தியமே அகத்தியம் ,அகத்தியமே சத்தியம் .
ஓம் அகத்தியரே போற்றி ஓம் .
ஓம் குருமுனியே போற்றி ஓம்
குருநாதரின் காயத்ரி மந்திரம் ..
ஓம் தத்புகுஷ்யா வித்மஹே
லோபமுத்ரா சமேதாயே தீமஹி
தன்னோ அகஸ்திய ப்ரோசோத்யாத்..
ஓம் அகத்தீசாய வித்மஹே
பொதிகை சஞ்சார தீமஹி
தன்னோ ஞானகுரு ப்ரோசோத்யாத்.
மேற்கண்ட மந்திரங்களை தினந்தோறும் 108 முறை காலையும் ,மாலையும் செபிப்பவர்களுக்கு வேண்டும் வரங்களை அள்ளி தருவார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இது அனுபவ வாக்காகும்.
கடந்த பதிவில் கூறிய கதவு என்பது லலாட கதவாகும். வாசி பயிற்சியை கொண்டு அந்த கதவினை திறந்தால் மரணமில்லா பெருவாழ்க்கையை நம்மால் அடைய முடியும் என்பது சித்தர்களின் கூற்றாகும் . இதனைப்பற்றி காகபுசண்டர் தமது பெருநூல் காவியம் -1000 த்தில் வெகு தெளிவாக கூறியுள்ளார்.
http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.
Thanks for sharing all your life - time experiences with Siththars of this land.
பதிலளிநீக்குஒம் தத் புகுஷ்யா அல்லது ஒம் தத் புருஷயா கரெக்டா சார் ப்ளீஸ்
பதிலளிநீக்கு