செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழா...

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

பலவேறு பணிகளுக்கு இடையில் என்னால் பதிவுகளை பதிவு செய்ய முடியவில்லை. கடந்த ஆடி அமாவாசை திருவிழா மிக விமர்சையாக சதுரகிரியில் நடைபெற்றது.  தற்சமயம் இருக்கும் பணியில் விடுப்பு கிடைக்காதலால் வெள்ளிகிழமை அன்று தான் எனது பயணம் சென்னையில் இருந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் மூலம் ஆரம்பித்தது .

மதுரைக்கு வந்தடைந்ததுபோது சரியாக அதிகாலை மணி 2 ஆகும் . பிறகு தானிபாறைக்கு செல்லும் பேருந்தில்  இருந்து சதுரகிரிக்கு புறப்பட்டேன்.  வரும் வழியில் சதுரகிரி மலையில் காட்டு தீ பிடித்து எரிந்து கொண்டு இருந்ததை கண்டு மிகவும் மன வேதனை பட்டேன் .
நாங்கள் சென்ற பேருந்து தானிபாறையில் இருந்து  10 மைலுக்கு முன்னால் நிறுத்தப்பட்டது .

ஏறக்குறைய நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் அங்கு நிறுத்தப்பட்டது .  பிறகு நான் எனதுநடைபயணத்தை ஆரம்பித்தேன் .எனது பயணம் 10 கிலோ மீட்டர் தூரத்தை  ஒன்னே கால் மணி நேரத்தில்  நடந்தே  கடந்து விட்டேன் . சரியாக 6 :25 க்கு தானிபாறையை வந்தடைந்தபோது   அங்கு இருந்த மக்கள் கூட்டத்தை பார்த்து வியந்து போனேன் . ஏறக்குறைய ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கூட்டம் அங்கு நிரம்பி இருந்தது.   

எங்கும் காவல் அதிகாரிகள் நிரம்பி இருந்தார்கள் ,யாரையும் அவர்கள் மலை ஏறுவதற்கு அனுமதிக்கவில்லை . இரவு 11 மணி  முதல் மலை ஏறுவதற்கு யாருக்கும் அனுமதி இல்லை ஏனெனில் காட்டு தீ மக்கள் நடந்து செல்லும் பாதைக்கு அருகில் வந்துவிட்டதால் யாருக்கும் அனுமதி இல்லை என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்கள் .

மிகவும் மனசோர்வு அடைந்து விட்டேன் . "என்ன மகாலிங்கம் இவ்வளவு தூரம் நடந்து வந்து இப்படி பண்ணிட்டியே " என்று மனதில் அவரை நினைத்து கொண்டேன் .  காவல் அதிகாரிகளோ காட்டு தீ அணைந்தால் தான் நாங்கள் மலை ஏற அனுமதிப்போம் அதுவரை அமைதியாக இருங்கள் என்று கூறிவிட்டனர் . வேறு வழியில்  போகவேண்டுமானால் அது ரொம்ப சிரமமாக இருக்கும் என்று நினைத்து கொண்டு அருகில் இருந்த ஒரு பாறையில் அமர்ந்து கொண்டு சிந்தித்துக் கொண்டு இருந்தேன் .

அந்த பாறையில் அமர்ந்திருந்த கூட்டம் திடீரென ஒரு பாதைக்குள் செல்ல ஆரம்பித்தது . நானும் அவர்களை தொடர்ந்து அந்த பாதையில் சென்றேன் . அந்த பாதை சரியாக ஆசிர்வாத பிள்ளையார் இருக்கும் இடத்தை வந்தடைந்தது. எங்கள் எல்லாருக்கும் ரொம்ப சந்தோசம். எப்படியோ மலை ஏறுவதருக்கு ஒரு வழி கிடைத்து விட்டது என்று சந்தோஷ பட்டோம் .

காலை 6 : 45 மணிக்கு மலை ஏற ஆரம்பித்தேன் ,என்னால் நடக்கவே முடியவில்லை ஏனெனில் அதிகாலை 4 மணிக்கே நடக்க ஆரம்பித்ததால் .எப்படியோ மகாலிங்கத்தின் அருளால் காலை 9 மணிக்கு சந்தன மகாலிங்கத்தை அடைந்தேன் . நான் எப்படி மலை ஏறிவந்தேன் என்று எனக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் ஆச்சர்யமாக இருந்தது .

அவனின்றி ஆவது ஒன்றும் இல்லை ......

என்றும்-சிவனடிமை-பாலா.

5 கருத்துகள்:

  1. வேதனையையும், சோதனையையும்
    தாண்டியது சாதனைதான்.

    அந்த மகாலிங்கம் எனக்கும் விரைவில் அருள்புரிய வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. அவனருளால் அவன் தாள் வணங்கி என சொல்வது இதுதானோ...

    சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா...

    http://anubhudhi.blogspot.com/

    பதிலளிநீக்கு
  3. அன்புள்ள அய்யாவிற்கு , நான் சென்னையில் உள்ளேன் நான் சதுரகிரி மலைக்கு செல்ல வேண்டும். அனுபவம் மிக்கவர்கள் வழிகாட்டுங்கள். எப்படி செல்ல வேண்டும். சென்னையில் இருந்து எந்த ரயில் ஏறி எங்கு இறங்க வேண்டும். தங்கும்வசதி முதல் கொண்டு எனக்கு வழி காட்டுங்கள் அய்யா.
    அன்புடன்
    மதி

    My Email ID. mathish0610@gmail.com

    பதிலளிநீக்கு
  4. அவனின்றி ஆவது ஒன்றும் இல்லை ......//

    சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா...
    சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா...

    பதிலளிநீக்கு