வியாழன், 11 ஆகஸ்ட், 2011

சதுரகிரியில் உடல் பூமியை விட்டு கிளம்ப ஆரம்பித்தல் ......

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு , 

நேற்றைய தொடர்ச்சி ,

           இரவு ஒன்பது மணிக்கே தூங்க ஆரம்பித்து விட்டேன் . எல்லாம் மகாலிங்கத்தின் செயல் என்று நினைத்து கொண்டு தூங்க ஆரம்பித்து விட்டேன். எனக்கு மனதில் எப்படியும் இந்த வருடம் அந்த நட்சத்திர தரிசனம் பார்த்தே ஆகவேண்டும் என்று தோன்றியது .   இருப்பினும் மகாலிங்கம் நல்ல உணவினை கொடுத்து எம்மை  தூங்க வைத்துவிட்டார் . 

 என்னுடன் உள்ள நண்பர்கள் எல்லாரும் மகாலிங்கத்தின் பெருமைகளை பற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள் . அதனை கேட்டு கொண்டே நான் என்னை மறந்து தூங்க ஆரம்பித்தேன் .  திடீரென என் உடலில் ஒரு மாற்றம் ஏற்படுவதை  உணர்ந்தேன் . நாங்கள் தூங்கிய இடம் சிவா சித்தரின் ஜீவசமாதி ஆகும்.   ஆகையால் இது அவரின் வேலையாக இருக்குமோ என்ற சந்தேகம் எனக்கு தோன்றியது .

நான் ஒரு கட்டிலில் உறங்குவது போல கனவு கண்டேன் , ஒரு மிகப்பெரிய நல்ல பாம்பு ஒன்று எனது கட்டிலுக்கு அடியில் வந்து என்னை பார்த்தது . என் மனமோ நம்மை பாம்பு கடித்தால் நமக்கு  பிடித்த பீடைகள் விளங்கும் என மனது நினைத்தது. ஆனால் அது என்னை உற்றுப்பார்த்து விட்டு பின் அதன் தலையால் என்னை தூக்க அது முயற்சித்தது .

அதனால் என்னை தூக்கமுடியவில்லை . திடீரென அதன் உருவம் அதிகரித்து எனது பாதத்தில் இருந்து ஒவ்வொரு பகுதியாக என்னை தூக்க தூக்க எனது உடலும் பாம்பு தூக்குவதுர்க்கு ஏற்றார்போல வளைந்து கொடுத்து வந்தது . கொஞ்சம் நேரம் கழித்து எனது உடல் எனது கட்டப்பாட்டில் இல்லை . கடலில் வரும்  அலைகள் போல் எனது உடல் அசைந்து அசைந்து ஆடி கொண்டு இருந்தது .பாம்பு எப்படி நெளிந்து ஓடுமோ அதுபோல எனது உடல் நெளிய ஆரம்பித்தது .

பின் எனது உடல் மெதுவாக மேலே கிளம்புவதற்கு தயாராக இருந்தது .இதுவெல்லாம்  நடப்பது எனக்கு நன்றாக தெரிந்தும் ,என்னால் எனது உடலை கட்டுபடுத்த முடியவில்லை  .

நான் சுதாரித்து கொண்டு குருநாதரின் மந்திரத்தை கூறியபோது ,எனது உடல் மெதுவாக கீழே இறங்கியது . அகத்தியரின் மந்திரத்தை கூறிக்கொண்டே எழுந்திரித்தேன் . அப்போது சரியாக இரவு  மணி 12  ஆகும் . கண் திறந்து பார்த்தபோது வானில் அந்த நட்சரத்தை பார்த்தேன்.  பின்  குருவே நீயே துணை என்று  கூறிவிட்டு படுத்துவிட்டேன்.

அதற்குபின் எனக்கு தூக்கம் வரவில்லை ,மனதில் ஒரே குழப்பம் ,ஏன் இதுமாதிரி கனவும் நினைவும் உணர்வும் சேர்ந்து வருகின்றது .

எனது உடல் பாம்பு போல நெளிந்து ,பின் ஆகாயத்தில் பறப்பதற்கு தயாராக இருந்ததை  இப்ப நினைத்தாலும் கொஞ்சம் பயமாகவும் அதே நேரம்ஆச்சர்யமாகவும் இருக்க  தான் செய்கிறது .  


இதன் விளக்கம் என்னவென்று  எனக்கு தெரியவில்லை . தெரிந்தவர்கள் விளக்கம் கொடுத்தால் ரொம்ப நன்றாக இருக்கும்.

சித்தர்களின் விளையாட்டா ? 
ஆதி சித்தனின் விளையாட்டா ?
இல்லை என் மனதின் விளையாட்டா ?


மறுநாள் சாப்டூர் பாதையில் பயணித்து  இந்த பயணத்தை முடித்து கொண்டேன்.  இந்த பாதை கொஞ்சம் கடினம் தான் இருந்தாலும் கைலாயத்திற்கு போயிட்டு வந்த மாதிரி ஒரு மன திருப்தி ஏற்பட்டது .


எங்கும்  நிறைந்த சிவன் எல்லாமாகவும் இருக்கிறான் .
புரிந்தும் புரியாமாலும் தெரிந்தும் தெரியாமாலும் நடக்கின்ற ஒவ்வொரு  செயலும் நமக்கு நன்மையே செய்கிறது .
என்றும்-சிவனடிமை-பாலா.

8 கருத்துகள்:

 1. பாலா., இதற்குப்பின் உங்கள் உடலிலும் மனதிலும் தெளிவும் உற்சாகமும் மிக நிறைவாக இருநதிருக்க வேண்டும்.

  சூக்கும உடலின் தன்மையை, உங்கள் உடலும் மனமும் இணைந்து இயங்கி, உணர்ந்ததே இந்த நிகழ்வு.,

  இது சாதரணமாக நிகழக்கூடியதே.. ஆன்மீக யோகப்பயிற்சிகளை தொடர்ந்து செய்வதால் சாத்தியம்.

  உங்களுக்கு இது உணர்த்தப்பட்டது மகாலிங்கத்தின் கருணையாலும் சித்தர் சிவாவின் ஜீவசமாதியின் ஆற்றலாலும் ஆகும்.

  பதிலளிநீக்கு
 2. இது சாதரணமாக நிகழக்கூடியது அல்ல என திருத்தி வாசிக்கவும்:))

  எல்லோருக்கும் இது கிடைக்காது.:))

  பதிலளிநீக்கு
 3. அன்புள்ள ஐயா ,

  தங்களின் பின்னோட்டம் கண்டு மனமகிழ்ந்தேன் . கருத்துக்கு மிக்க நன்றி .

  சாப்டூர் பாதை பற்றி ஒரு பதிவு செயலாம் என இருக்கிறேன் அவன் அருள் இருந்தால் பதிவு செய்கிறேன்.


  என்றும்-சிவனடிமை-பாலா.

  பதிலளிநீக்கு
 4. நல்ல அனுபவம்...சித்தர்கள் அனுகூலம் இருப்பவர்களுக்கு மட்டுமே இதுபோல நடக்கும்...

  பகிர்வுக்கு நன்றி..

  http://anubhudhi.blogspot.com/

  பதிலளிநீக்கு
 5. மேலும் சித்த அனுபவங்கள் தொடரட்டும்.
  ஆசியுடன் கூடிய வாழ்த்துக்கள்.

  http://siddharkal.blogspot.com

  பதிலளிநீக்கு
 6. மேலே (நிகழ்காலத்தில்...)
  அன்பர் சொன்னதை ஆமோதிக்கின்றேன்.
  எனக்கும் இவைபோன்ற அனுபவங்கள் நடைபெற்றுள்ளது.
  சித்தர்கள் நாக வடிவத்தில் வருவது உண்டு.
  எனது குருநாதர் கதசசிகார சித்தர் சுருளிமலையில் நாகவடிவத்தில் உலவுவதாக எனக்கு தெரியவந்துள்ளது. இது உண்மை.

  பதிலளிநீக்கு