அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,
பிறந்த நாள் வாழ்த்து அனுப்பிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
முகம் தெரியாத எத்தனை முகங்களின் உண்மையான அன்பினை கண்டு
மனம் உண்மையிலே தான் நெகிழ்ந்து போகிறது .
இதுவரை சாதித்தது என்னவென்று பார்த்தால் ஒன்றும் இல்லை .
ஆன்மிகத்திற்கு வயது தேவையில்லை அவன் அருள் ஒன்று இருந்தாலே போதும்.
பொறுமையாக இருக்கவேண்டும் என்பதற்காக எதையும் பயிற்சி செய்யாமால் இருந்தால் எதுவும் கிடைக்காது .
பெற்றோர்களின் அரவணைப்பு இல்லாத எல்லா குழந்தைகளும் அனாதைகள் தான் இதில் நானும் ஒன்று.
சித்தர்கள் விளையாடும் விளையாட்டுகளில் இதுவும் ஒன்று .
பாசம் என்பது எவ்வளவு கொடியது என்பது பாசத்தில் இருந்து விடுபடும்
ஒருவனுக்கு தான் தெரியும் . எல்லாவற்றையும் கடந்து தான் வரவேண்டும் என்பது சித்தர்களின் கொள்கையாக கூட இருக்க தோன்றுமே என்று எனது மனம் கூறுகிறது.
உயிர் என்ற தத்துவத்தை உணர்ந்தவனுக்கு இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர்களும் சமம் தான் இதில் அவனுக்கு எந்தவொரு பேதமும் இல்லை .
பாம்பாட்டி சித்தர் பாடலில் இருந்து
மணக்கோலங் கொண்டும் மிக மனமகிழ்ந்துமே
மக்கள் மனை சுற்றத்தோடு மயங்கி நின்றாய்
பிணக்கோலங் கண்டு பின்னுந் துறவாவிட்டால்
பிறப்புக்கே துணையா மென்றாடாய் பாம்பே ...
பட்டினத்து அடிகளின் பாடலில் இருந்து
தாய் தந்தை பெண்டுபிள்ளை தானென் றிரங்கிநித்தம்
காய் பறிக்கிராயே கனியிருக்க ---தாய் தந்தை
எத்தனைபேர் பெற்றாரோ என் மனமே நாமுந்தான்
எத்தனைபேரைப் பெற்றோமோ இங்கு .....
பத்திரகிரியாரின் பாடலில் இருந்து
தந்தை தாய் மக்கள் சகோதரரும் பொய்யெனவே
சிந்தை தனிற் கண்டு திருக்கறுப்ப தெக்காலம் ....
என்றும்-சிவனடிமை-பாலா.
மனம் வருந்ததிர் அவன் அருளும் குரு அருளும்
பதிலளிநீக்குஎங்கள் அன்பும் உள்ளவரை நீங்கள் அனாதையல்
உங்களை நான் அண்ணா
என்று குப்பிடலாமா?
சற்று தாமதமானாலும் - பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. எல்லா நலன்களும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறோம். அந்த ஆண்டவன் அனுபூதி எப்போதும் தங்களுக்கு இருக்கட்டும்.
பதிலளிநீக்குhttp://anubhudhi.blogspot.com/
என் உளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஇறைவன் உங்களுக்கு நிறைந்த அன்பும், அமைதியும், பேரின்பமும் வாழ் நாள் முழுவதும் அருள்வராக.
என்றும் அன்புடன்,
பாலாஜி
belated happy birthday wishes sir
பதிலளிநீக்கு