ஓம் கிரியா பாபாஜி நம அஉம்.
அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,
கடந்த இரண்டு வாரங்களாக எந்தவொரு பதிவினையும் எம்மால் பதிவு செய்ய முடியவில்லை ஏனெனில் நாங்கள் அனைவரும் பாபாஜியின் குகை தரிசனத்திற்காக சென்றுவிட்டோம்.
"எதுவும் நம் கையில் இல்லை" என்பதருக்கு இந்த யாத்திரை ஒன்றே போதும் என்னும் அளவிற்கு சிறப்பாக அமைந்தது.
என்னதான் நாம் திட்டங்கள் போட்டு நடத்தினாலும் அவன் அருளின்றி எதுவும் நடைபெறுவதில்லை .
அவனின்றி அவன் தாள் வணங்கமுடியாது என்பதும் இந்த யாத்திரையின் மூலம் புரிந்தது .
கடுமையான நிலச்சரிவில் சிக்கிக்கொண்ட நாங்கள் எப்படி பாபாஜியின் மூலம் காப்பாற்றப்பட்டோம் என்றும் , அவர் எங்களிடம் எப்படி உரையாடினார் என்றும். அவர் எங்களுக்கு எப்படி அமுதளித்தார் என்றும் பின்வரும் நாளில் காணலாம் .
அவர் நடத்துகின்ற ஒவ்வொரு அற்புதத்தையும் நினைக்கும்போது என் நெஞ்சம் ......சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ....
இந்த இமயமலை யாத்திரை அவரின் விருப்பத்திற்கு ஏற்றார் போல நடந்தது. தாய் வீட்டுக்கு சென்று வந்தது போல இருந்தது .
பல ஜென்மங்கள் கூடவே இருந்து உரையாடிய உணர்வு எங்களுக்கு பல இடங்களில் ஏற்பட்டது . அவர் சூட்சமாக உலாவருவதை எம்மால் உணர முடிந்தது . அவரை நினைக்கும்போதெல்லாம் உடல் சிலிர்க்கும் .அவரை பார்க்க நினைக்கும்போது எங்களுக்கு முன்னால் அவர் சென்றதை நினைக்கும்போது உடல் சிலிர்க்கிறது .
அவரின் அருளோடு இந்த யாத்திரையின் சில பகுதிகளை வரும் நாள்களில் பகிர்ந்து கொள்கிறேன்..
"இதுவும் எமது குருநாதர் அகத்தியர் உத்தரவின் பெயராலே நடைபெற்றது ".
ஓம் கிரியா பாபாஜி நம அஉம்.
என்றும்-சிவனடிமை-பாலா.
வாழ்த்துக்கள் பாலா... தொடர்ந்து எழுதுங்கள்..
பதிலளிநீக்குhttp://anubhudhi.blogspot.com/
God (Baba) bless you
பதிலளிநீக்குதிரு பாலா அவர்களுக்கு
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.......