அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,
மந்திரம் என்றால் என்ன ? என்ற கேள்விக்கு பொருள் கூறுவது கொஞ்சம் கடினமாக தான் இருக்கிறது. இருப்பினும் என் சிற்றறிவுக்கு எட்டியதை இங்கு பகிர்கிறேன்.
என் குருநாதர் அகத்தியர் சொல்கிறார் .
"மனமது செம்மையானால் மந்திரம் செபிக்கவேண்டாம் . "
இந்த வரிகளை பார்க்கும் போது நமக்கு எதுக்கு வம்பு என்று மந்திரம் செபிக்காமல் ஒதுங்கி கொள்வதும் உண்டு. ஏனென்றால் மனம் எங்கே இருக்கிறது என்பதை சொல்வதற்கு யாருமில்லை அப்படி இருந்தாலும் அந்த மனதை செம்மையாக எப்படி வைத்து கொள்வது என்பதற்கான பயிற்சி முறையை யார் தான் நமக்கு கற்றுகொடுப்பார் என்ற எண்ணமும் என் மனதில் ஏற்பட்டதுண்டு .
ஆகையால் முதலில் மனம் என்ற சொல்லை ஆராய்ந்து பின் மந்திரத்தை பற்றி ஆராய்ச்சி செய்யலாம் என்ற எண்ணத்திற்கு வந்து விட்டேன். மற்றும் பொருள் தெரியாமல் கூறும் மந்திரத்தால் பயன் எதுவும் இல்லை என்ற எண்ணத்தினால் பொதுவாக சமஸ்க்ருத மொழியில் உள்ள மந்திரங்களை நான் படிப்பதும் இல்லை உபயோகிப்பதும் இல்லை .ஏனெனில் மந்திரங்களை தவறாக கூறினால் அதற்க்குண்டான விளக்கம் மாறி நாம் கூறும் மந்திரம் நமக்கே திரும்பி வந்து விடும் என்ற எண்ணமும் எனக்கு உண்டு.( சமஸ்க்ருத மொழிக்கு எதிரிகள் நாங்கள் அல்ல .ஏனென்றால் அதன் பலன் ,சூட்சமம் ,அதனை உச்சரிக்கும் முறை போன்றவற்றை எல்லாருக்கும் கிடைக்காமல் சிலர் செய்துவிட்டார்கள் )
மந்திரங்களை செபித்தால் ஏற்படும் பலன்கள் மிக அதிகம் என்று பல நூல்களில் நமது முன்னோர்கள் கூறியுள்ளார்கள் . அப்படி இருக்க நமது ஆலயங்களில் தினந்தோறும் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்கள் அனைத்துவித பலன்களையும் பெற்றவர்களாக தானே இருக்கவேண்டும். அதற்கு மாறாக அவர்களும் நம்மை போலவே தான் வாழ்ந்து வறுமையில் உழல்கிறார்கள்.
பொதுவாக சிவன் கோவில் அர்ச்சகரை பார்த்தாலே தெரியும் அவருடைய உடலில் உள்ள எலும்புகள் தெரியும் அளவிருக்கு ஒல்லியாக இருப்பார்கள் . இதருக்கு மாறாக பெருமாள் கோவில் உள்ள அர்ச்சகரை பார்த்தால் நன்று வாட்ட சாட்டமாக கழுத்தில் தங்க நகை தொங்கும் அளவிருக்கு வசதி படைத்தவர்களாக இருப்பார்கள்(பொதுவாக) .
இதற்க்கு காரணம் என்ன ? என்று வினவினால் பதில் சொல்வது கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கிறது. இதற்க்கு மந்திரமும் ஒரு காரணமாக இருக்கலமா என்ற எண்ணமும் எனக்கு தோன்றுகிறது .
சிவனை கும்பிட்டால் முதலில் ஞானம் கிடைக்கும் பின் சித்தி அதற்குபின் முக்தி கிடைக்கும். ,
பெருமாளை கும்பிட்டால் பொன்னும் பொருளும் கிடைக்கும் பின் முக்தி கிடைக்கும்.
ஆக மந்திரங்கள் மனிதனின் வாழ்வில் சில மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற எண்ணத்திருக்கு
நாம் வந்து தான் ஆகவேண்டும்.
அன்பு சித்தரை( இயேசு கிறிஸ்து ) வழிபடும் மக்களும் எல்லா நன்மைகளையும் பெற்று நன்றாக தான் வாழ்ந்து வருகிறார்கள் . நமது தமிழகத்தில் உள்ள எல்லா தேவாலயங்களிலும் அழகான தமிழ் மொழியிலே தான் திருப்பலியை அவர்கள் நடத்துகிறார்கள் .
"அல்லா' -வை வழிபடும் முகமதிய மக்களும் சீரும் சிறப்பாக தான் வாழ்ந்து வருகிறார்கள் .
அப்படி இருக்க மந்திரங்கள் எப்படி அவர்களுக்கு உதவி செய்யும். அவர்கள் உருது மொழியில் அல்லவா இறைவனை வழிபடுகிறார்கள் .
உலகில் கடவுள் என்றால் என்ன என்று தெரியாத மக்களும் பல நாடுகளில்(ஆப்ரிக்க) வாழ்ந்து வருகிறார்கள் . அப்படி இருக்க மந்திரங்களை நாம் எப்படி கண்டு பிடித்தோம் ,யார் கண்டு பிடித்தார்கள் என்ற விபரமும் நம்மிடம் இல்லை(அதிகாரபூர்வமாக ).
இதன் மூலம் இறைவனை அடைவதற்கு பல மொழிகளில் பல வகையான மந்திரங்கள் உள்ளது என்ற முடிவிற்கு நம்மால் வர முடிகிறது.
நமக்கு தெரிந்த தாய் மொழியில் இறைவனை வழிப்பட்டால் போதும் என்ற எண்ணத்திற்கு நான் வந்து விட்டேன்.
இருப்பினும் சித்தர்களின் பார்வையில் இந்த கருத்தை எடுத்து வைப்பது கொஞ்சம் கடினம் தான்.
மந்திரங்களினால் பயன் ஏதும் இல்லை என்று கூறும் சித்தர்களே பலவகையான மந்திரங்களை எழுதி அதன் பயன்களையும் நமக்கு விளக்கி உள்ளார்கள் .
அலசல் தொடரும்....
என்றும்-சிவனடிமை-பாலா.