புதன், 21 செப்டம்பர், 2011

ஞானம் கிடைக்க என்ன செய்ய வேண்டும் ?

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு  ,

ஞானம் கிடைக்க என்ன செய்ய வேண்டும் ? என்று பிருகு முனிவர் பின்வருமாறு கூறுகிறார் .

பாடல் : 39 

ஆச்சப்பா இதைவென்றால் ஞானங் கூடும்
    அல்லாட்டால்  தேறுதருக்கு ஏது மார்க்கங்
காச்சப்பா கோபத்தை ஞானத்தீயால்
    கண்மணியே என்போலே  யார்தான் சொல்வார்
போச்சப்பா பிறவிதான் ஞானம் நின்றால்
     பொல்லாத பிறப்பிறப்பு மழிந்து போகும்
பாச்சப்பா மனந் தன்னை மந்திரத்தில்
    பகடில்லா சித்தி பெற்றால் தெளிவுண்டாமே !

விளக்கம் :
                    காமமும், கோபமும், மிகுந்த போகமும் மனிதனை நரகத்தில் கொண்டு போய் சேர்க்கும் . காமத்தையும் ,கோபத்தையும் வென்றால் ஞானமுண்டாகும் .
ஞானம் பெற்றால் பிறப்பும் ,இறப்பும்  அகலும் . எனவே காமத்தையும் கோபத்தையும் ஞானம் என்ற தீயால் சுட்டு அழித்துவிடு என்று கூறுகிறார் .

எப்படி இந்த காமத்தையும் கோபத்தையும் மனதில் இருந்து அழிப்பது என்று நீ கேட்பாயாகில் அதற்க்கான விளக்கத்தையும் ,மந்திர முறைகளையும் உனக்கு சொல்கிறேன்.  அதன் மூலம் நீ சித்தியும் முத்தியும் அடையலாம்  என்று சீடனுக்கு கூறுவதாக கூறுகிறார்.

தாம் கூற இருக்கும் மந்திரங்களை சொல்வதினால் நமக்கு கிடைக்கும் பயன்களை பின்வருமாறு கூறுகிறார் .

சகல சித்திகளும் கிடைக்கும் என்றும் ,
சரிரத்தில் திவ்வியமான ஒருவித ஒளிவுன்டாகும் என்றும்,
கர்ம வினைகளும் ,சூனியமும் ,ஏவல் , பிசாசு ,துர்தேவதைகள் போன்றவை மந்திரத்தை செபித்த மாத்திரத்திலே விலகி ஓடும் என்றும் ,
வேதாந்த பொருளான பரம்பொருள் நம் முன்னே பிரகாசிக்கும் என்றும் கூறுகிறார்.

அவர் கூற இருக்கும் மந்திரங்களை  நாளைய பதிவில் காணலாம்( உத்தரவு இருப்பின் ).


 என்றும்-சிவனடிமை-பாலா.

4 கருத்துகள்:

  1. காத்திருக்கிறோம்... விரைவில் பகிருங்கள்..

    நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்!
    காமத்தையும் கோபத்தையும் அடக்கும் மந்திரத்தை தெரிவிக்கவும்! காத்திருக்கிறேன்! சித்தி என்பது பூர்வ ஜென்ம பலனுக்குதான் வரும் என்கிறார்கள்! நாங்கள் காமத்தையும் கோபத்தையும் அடக்க வழி தெரியட்டுமே!

    அன்புடன்...
    டவுசர்பாண்டியன்
    ஓம் சிவசிவ ஓம்

    வாழ்க அறமுடன்! வளர்க அருளுடன்!

    பதிலளிநீக்கு
  3. கர்ம வினைகளும் ,சூனியமும் ,ஏவல் , பிசாசு ,துர்தேவதைகள் போன்றவை மந்திரத்தை செபித்த மாத்திரத்திலே விலகி ஓடும் என்றும் ,
    வேதாந்த பொருளான பரம்பொருள் நம் முன்னே பிரகாசிக்கும் என்றும் கூறுகிறார். what is manra very helpful me all of u

    பதிலளிநீக்கு