அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,
நேற்றைய தொடர்ச்சி ,
சரியாக மாலை 6 மணிக்கு விமானத்தில் ஏறுவதற்கு தயாராக இருந்தபோது ,எதுக்கும் செல்வராஜ் அன்பர்க்கு தொடர்ப்பு கொண்டு பார்ப்போம் என்று எண்ணி அவரை தொடர்பு கொண்டேன்.
அவர் கூலாக ஒரு பதில் சொன்னார் ,தம்பி பொறுமையாக வாங்க நம்ம புரோக்ராம் மாற்றம் அடைந்துள்ளது என்று சொன்னார்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை . என்ன சொல்றிங்க என்ற கேட்டபோது
"காத்கோடம்" போற வழியில பாலம் ஒன்று உடைஞ்சி போச்சி , அதனால நாம் ஹரித்வார் போயிட்டு அப்புறமா பாபாஜி குகைக்கு போகலாம் என்று சொன்னார் .
எங்களுடைய ரயில் டிக்கெட் வைட்டிங் லிஸ்ட் 5 ஆக இருந்தது . எனக்கு ஒரு சந்தேகம் எப்படியும் நம்ம டிக்கெட் உறுதியாகி விடும், கேன்ஸல் பண்ணினாலும் பணம் ஒன்னும் கிடைக்காது என்று நினைத்துகொண்டு , என் நண்பனுக்கு போன் பண்ணி எங்களுடைய டிக்கெட்டை கேன்சல் பண்ண சொன்னோம். அவனும் உடனே செய்ததால் எங்களுக்கு முழு பணமும் கிடைத்து. இல்லையென்றால் ஒரு சிறிய தொகையை நாங்கள் இழக்க வேண்டியதாக இருக்கும். பாபாஜியின் அருளினால் இந்த ஒரு நிகழ்வு நடந்தது.
நாங்கள் டெல்லியில் இறங்கி சரியாக 10 :30 மணிக்கு பழைய ரயில் நிலையத்திருக்கு சென்று எங்கள் குழுவினரை சந்தித்து எங்கள் பயணத்தை ஆரம்பித்தோம்.
இதில் இருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் ...
எதுவும் நம் கையில் இல்லை ,
டிக்கெட் கன்பார்ம் ஆகனும் என்று வேண்டிய எனது மனம் இந்த நிகழ்வுக்கு பிறகு எப்படியாவது டிக்கெட்டை கேன்ஸல் பண்ணனும் என்று வேண்டி கொண்டதை நினைத்தை பார்க்கும்போது ஆச்சரியமாக தான் இருக்கிறது.
விதிப்படி பயணம் என்பது எவ்வளவு ஆழ்ந்த கருத்து என்பதை இதன்மூலம் நான் உணர்ந்தேன்.
என்றும்-சிவனடிமை-பாலா.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக