அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,
இமயமலையில் நடைபெற்ற அனுபவங்களை தொகுத்து எழுத நினைக்கும்போதெல்லாம் ஏதோ ஒருமாதிரியாக இருக்கிறது .
எங்களுடைய யாத்திரை பல வித மாறுதலுக்கு உட்பட்டு இருந்தது (கடைசி நேரம்வரையில்) . எங்களுடைய குழுவின் திட்டம் முதலில் ஹரித்வார் சென்றுவிட்டு பிறகு பாபாஜி குகைக்கு செல்வதாக மட்டும் தான்இருந்தது.
செல்வராஜ் என்ற ஆன்மிக நண்பரின் ஆலோசனையின் பெயரில் ,
முதலில் ரயில் மூலம் "காத்கோடம்" சென்றுவிட்டு பின் "நைனிட்டால்" சுற்றி பார்த்துவிட்டு பிறகு பாபாஜி குகைக்கு செல்லலாம் வரும்போது ஹரித்வார் மற்றும் ரிஷிகேஷை
சுற்றிப்பார்க்கலாம் என்று கூறினார். இதன் மூலம் நமக்கு இரண்டு நாட்கள் மிச்சம், அந்த இரண்டுநாட்களில் நாம் பத்ரிநாத் சென்று தரிசனம் செய்து வரலாம் என்று கூறினார் .
எல்லார்க்கும் ஒரே சந்தோசம் ஏனெனில் ஒரே கல்லில் இரண்டு மாங்கனிகள் போல இருந்தது .
ஆனால் இதில் ஒரு சின்ன பிரச்சனை என்னவென்றால் நாங்கள் பதிவு செய்த விமானம் இரவு 9 :30 மணிக்கு தான் டெல்லி வந்தடையும் . ராணிக்கெட் எக்ஸ்பிரஸ் ரயிலோ இரவு 10 :40 மணிக்கு பழைய டெல்லியில் இருந்து புறப்பட்டுவிடும் . இது சாத்தியமா என்று எங்களுக்கு தெரியவில்லை இருப்பினும் பாபாஜியின் மேல் பாரத்தை போட்டுவிட்டு நாங்கள் சரி என்று ஒப்புகொண்டோம் . பின் எங்களுக்கு ரயில் டிக்கெட் எடுத்து தருவதாக சொல்லி எங்கள் விபரங்களை வாங்கிக்கொண்டார் .
நான், என் மனைவி மற்றும் என் குழந்தை மற்றும் என் நண்பர்கள் இரண்டு பேர் சேர்த்து மொத்தம் ஐந்து நபர்கள் பிரயாணம் பண்ணவேண்டியதாக இருந்தது.
நாங்கள் புறப்படவேண்டிய நாள் 19 ந் தேதி வெள்ளிகிழமை ஆகையால் புதன் கிழமை தக்கால் மூலம் டிக்கெட் எடுத்து தருவதாக சொன்னவரிடம் இருந்து எந்தவொரு பதிலும் வியாழகிழமை வரை வரவில்லை.
எனக்கு ஒரே சந்தேகம் இன்னும் எந்தவொரு பதிலும் செல்வராஜ் அன்பரிடம் வரவில்லையென்று . பிறகு அவரை தொடர்பு கொண்டபோது "வைட்டிங் லிஸ்ட் " தான் இருந்தது அதனால் நான் புக்கிங் பண்ணலப்பா என்று கூலாக ஒரு பதில் இருந்தது .
என்னடா சோதனை என்று மனம் நொந்து நான் தக்கால் மூலம் வியாழக்கிழமை அன்று எங்கள் குழுவினர் எல்லாருக்கும் சேர்த்து டிக்கெட் புக்கிங் பண்ணிவிட்டேன். அப்போது வைட்டிங் லிஸ்ட் 80 ஆக இருந்தது.
வெள்ளிகிழமை அன்று காலை வைட்டிங் லிஸ்ட் 50 ஆக இருந்தது . எனக்கு ஒரே சந்தோசம் எப்படியும் நமக்கு டிக்கெட் உறுதியாகிவிடும் என்று. நாங்கள் விமான நிலையத்திருக்கு புறப்படும்போது வைட்டிங் லிஸ்ட் 15 ஆக இருந்தது. எப்படியோ நமக்கு டிக்கெட் உறுதியாகிவிடும் அதற்க்கு பின் எப்படி நாம் ராணிகேட் எக்ஸ்பிரஸ்-யை பிடிப்பது என்ற எண்ணம் மனதில் அடிக்கடி தோன்ற ஆரம்பித்து விட்டது . ஏனெனில் டெல்லி ஏர்போர்ட்க்கும் பழைய டெல்லி ரயில் நிலையத்திருக்கும் குறைந்தது ஒரு மணிநேரம்மாவது ஆகும் என்று எல்லாரும் கூறினார்கள் அதே வேலை விமானம் இறங்குவதற்கு கொஞ்சம் நேரமானாலும் நம்மால் அந்த ரயில புடிக்க முடியாது என்றும் கூறினார்கள் .
ஓம் கிரியா பாபாஜி நம அஉம் என்று மனதில் உச்சரித்து விட்டு பயணத்தை வீட்டில் இருந்து தொடங்க ஆரம்பித்தோம்.
என்ன நடந்தது என்று நாளைய பதிவில் காணலாம்.
என்றும்-சிவனடிமை-பாலா.
ஓம் கிரியா பாபாஜி நமஹ..
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி..
http://anubhudhi.blogspot.com/