அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,
பிருகு முனிவரின் மாந்திரிகம் பாடல்களில் பொய் மாந்திரிகர்களின் குணம் ...
பொய் மாந்திரிகர்களின் இன்றைய நிலையை பின்வருமாறு கூறுகிறார்.
ஒணங்காத மாந்திரிகர் உலகில் மெத்த
மகிதலமும் என்வசமே என்று சொல்லுவார்
கணங்களெல்லாம் எந்தனுக்கு சித்தியென்பார்
கண்ணதில் கண்டோமோ தெய்வமென்பார்
குணமான சக்கரத்தின் மாறல் எல்லாம்
குறிக்கண்டு மாறவல்லோம் என்று சொல்லுவார்
இணங்காதே கோடி கோடி யுறுவே செய்தோம்
என்றெல்லாம் எடுத்துரைப்பார் மட்டிமாடே .
விளக்கம் :
நல்ல மாந்திரிகரைகாட்டிலும் பொய் மாந்திரிகர்கள் உலகில் அநேகம் உள்ளனர்கள்.
இவர்கள் கூறும் வார்த்தை ஜாலங்களால் மக்கள் மதி மயங்கி அவர்களிடம் எல்லாத்தையும் இழக்கிறார்கள் .
ஈரேழு புவனங்களும் என் வசம் என்றும், சகல பூதகணங்களும் என்வசம் என்றும் கூறுவார்.
அணைத்து பூதங்களுக்கும் தலைவனாக உள்ள தெய்வங்களை கண்டு அவர்களிடம் உரையாடினோம் என்றும் கூறுவார். அது மட்டுமல்லாமல் சூரிய ,சந்திரிய ரகசியங்களைய அறிவோம் என்றும், பல கோடி முறை மந்திரங்களை உச்சாடனம் செய்து சக்தி வைத்துள்ளோம்
என்றும் கூறுவார்.
தொடரும்...

என்றும்-சிவனடிமை-பாலா.
நல்ல தகவல்கள்... இருந்தாலும் இன்னும் ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள்..
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி
http://anubhudhi.blogspot.com/