ஞாயிறு, 25 டிசம்பர், 2011

நெஞ்சறி விளக்கம்-எண்ணத்தின் வலிமை

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

கீழ்காணும் பாடலில் தெளிவான விளக்கங்கள் உள்ளதால்
எமது விளக்கம் தேவைப்படாது என நினைக்கிறேன்.


குளத்திலே கிடக்கும் ஆமை குளக்கரை முட்டையிட்டு
குளத்துநீர்க்  குள்ளிரிந்து குறிப்புடன் நினைக்கும்போது
குளத்திலே புதைத்த முட்டை கருவுரு வானாற் போலுன்
உளத்திலே நாகை நாதர் உருவறிந்து உணர்வாய் நெஞ்சே .


மருவிய சிலந்திப் பூச்சி வயிற்றினில் நூலுண்டாக்கி
உருவுடன் கூடுக்கட்டி உகந்ததிலிருக்கு மாபோல்
குருபர னுனது கூட்டில் குடியிருப்பதனைப் பார்த்துப்
பெருவெளி நாகை நாதர் பெருமை கண்டருள் சேர்  நெஞ்சே . 

தண்ணீரிலிருக்கும் மீன்கள் தண்ணீரிற் கருவைப்பித்திக்
கண்ணினாற் பார்க்கும்போது கயலுருவானாற் போல
நண்ணிய குருவைக்கண்டு  நாதனல் லுருவைச் சேர்த்து
விண்ணின்மேல் நாகை நாதர் மெல்லடி வெளியார் நெஞ்சே.


எண்ணம் போல் வாழ்க்கை என்பது உண்மை தான் . உயிர்கள் உருவாகும் விதத்தை உவமையாக கூறிய நமது சித்தர்களை நம்மால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை .

பதிநென்மர் சித்தர் பாதம் போற்றி ...
http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

2 கருத்துகள்:

  1. எண்ணம் போல் வாழ்க்கை என்பது உண்மை தான் . உயிர்கள் உருவாகும் விதத்தை உவமையாக கூறிய நமது சித்தர்களை நம்மால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை .

    பதிலளிநீக்கு
  2. சிறந்த கருத்துக்கள்.. பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    பதிலளிநீக்கு