சனி, 31 டிசம்பர், 2011

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்-2012

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

உலகில் உள்ள அனைத்து உள்ளங்களுக்கும்  எமது புத்தாண்டு நல்வாழ்த்துகள் .

பழையன கழிதலும் புதியன புகுதலும் -என்ற கோட்பாட்டில் வாழும் நாம் கடந்த ஆண்டில் நடந்த கசப்பான அனுபவங்களின் துணை கொண்டு இனி வரும் நாட்களில் அதுப்போன்ற அனுபவங்களை மீண்டும் ஏற்படுத்தி கொள்ளாமல் வாழ்ந்தால் போதும்.

குருவின் துணை கொண்டு தான் நாம் இந்த பிறவியை முடித்து பிறவா
வாழ்க்கையை  மேற்கொள்ளவேண்டும் .

பாம்பாட்டி சித்தரின் பாடல் -குருவணக்கம்

பொய்ம்மதங்கள்  போதனைசெய் பொய் குருக்களைப்
புத்தி  சொல்லி நன்னெறியிற் போக விடுக்கும்
மெய் மதந்தான் இன்னதென்றும் மேவ விளம்பும்
மெய்குருவின் பதம் போற்றி ஆடாய் பாம்பே

மதம் பிடிப்பது என்பது விலங்குகளுக்கு தான் மனிதர்களுக்கு அல்ல . மதங்களை தாண்டி மனித உள்ளங்களை  நேசித்தால் போதும் .  எல்லா  மதங்களும்   மனிதனால் உருவாக்கப்பட்டவை தான் .

உண்மையான மதத்தை நமக்கு விளக்கம் கூற சற்குருவினால் மட்டும்  தான் முடியும் .

இவ்வாண்டில் எந்தவித  சாதி  சண்டையும், மதக்கலவரங்களும் ஏற்படாமல்
இருக்க எல்லாவல்ல சித்தர்களின் பாதங்களை தொட்டு வணங்கி வேண்டி கொள்வோம் .

http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

3 கருத்துகள்:

 1. எமது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
  எல்லாம் நலமும் வளமும் பெற
  எல்லாம் வல்ல இறைவன் தாழ் இறைஞ்சும்
  தொண்டன் !!!!

  என்றும் நட்புடன்
  யுவராஜா .......

  திருச்சிற்றம்பலம் .

  பதிலளிநீக்கு
 2. இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

  http://anubhudhi.blogspot.com/

  பதிலளிநீக்கு