திங்கள், 30 மே, 2011

பட்டினத்து அடிகளின் பூரணமாலை ->1 - 10 .

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

பட்டினத்து அடிகள் ஞானம் அடைந்த பிறகு தாம் வந்த பாதை எத்தகையது என்பதனை
மற்றவர்களும் உணர்ந்து வாழ்க்கையின் பேரின்பத்தை அடையவேண்டும் என்ற மிகப்பெரிய
சிந்தனையால் தோன்றியது தான் இந்த பூரணமாலை ஆகும்.

இதற்க்கு நான் எந்தவொரு நூலினையும் துணைக்கு வைத்து கொள்ளாமல் அவரே துணை என்று இதனை எழுத ஆரம்பிக்கிறேன்.  முடிந்தவரை என்னால் இயன்ற  விளக்கம் தருகிறேன் .தவறு இருப்பின் அதனை சுட்டி காட்டவும்.


1 . மூலத்து உதித்தெழுந்த முக்கோணச் சக்கரத்துள்
     வாலைதனைப்  போற்றாமல் மதிமறந்தேன் பூரணமே !

2 . உந்திகமலத்து உதித்து நின்ற பிருமாவைச்
    சந்தித்து காணமல் தட்டழிந்தேன் பூரணமே !

3 . நாபிக் கமல நடுநெடுமால் காணாமல்
    ஆவிகெட்டு யானும் அறிவழிந்தேன் பூரணமே!

4 . உருத்திரனை இருதயத்தில் உண்மையுடன் பாராமல்
     கருத்தழிந்து நானும் கலங்கினேன் பூரணமே !

5  . விசுத்தி மகேசுவரனை விழி திறந்து பாராமல்
      பசித்துருகி நெஞ்சம் பதறினேன் பூரணமே !

6 . நெற்றி விழியுடைய நிர்மல சதாசிவத்தைப்
      புத்தியுடன் பாராமல் பொறி அழிந்தேன் பூரணமே !

7 . நாதவிந்து தன்னை நயமுடனே பாராமல்
     போதம் மயங்கிப் பொறி அழிந்தேன் பூரணமே !

8 . உச்சி வெளியை உறுதியுடன் பாராமல்
     அச்சமுடன் நானும் அறிவழிந்தேன் பூரணமே !

9 . மூக்கு முனையை முழித்திருந்து பாராமல்
    ஆக்கைகெட்டு நானும் அறிவழிந்தேன் பூரணமே !

10 . இடைபிங் கலையின் இயல்பறிய மாட்டாமல்
     தடையுடனே யானும் தயங்கினேன்  பூரணமே !


விளக்கம்: 
 
மேற்கண்ட பத்து பாடல்களும் நமது உடலில் உள்ள ஆறு ஆதாரங்களைப்  பற்றியும் அதற்க்கு மேல் உள்ள சக்தி கலங்களையும் கூறுகிறது.

தியான சக்தியின் மூலம் தான் ஞான சக்தியினை நாம் அடைய முடியும் . பட்டினத்து அடிகளுக்கு குருவென்று யாரும் கிடையாது அப்படி இருக்க அவருக்கு எப்படி இதுபோன்ற அனுபவங்கள்
கிடைத்தது என்பதனை நாளைய பதிவில் அறியலாம்.



என்றும்-சிவனடிமை-பாலா.

வெள்ளி, 27 மே, 2011

உங்களுக்கு ஞானம் கிடைக்கவேண்டுமா ?

அன்புள்ள  சித்த உள்ளங்களுக்கு ,

என்னுடைய கருத்துகளை தான் இங்கு எழுதிக்கொண்டு இருக்கிறேன் அந்த ஆதி சித்தன் அருளினால்.

நேற்றைய பதிவில் நான் பட்டினத்து அடிகளின் பூரனமாலையில் உள்ள பல ஞான பாடல்களை பதித்து விட்டு  இன்றோடு இந்த ஞானத்தை விட்டு விட்டு வேற ஏதாவது எழுதவேண்டும் என்ற எண்ணத்தில் அதனை பதிவு செய்து பார்த்த போது உண்மையிலே இரண்டு பாடல்கள் தான் வெளியாகிஉள்ளது. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. எல்லாம் அந்த சித்தனின்  செயல் என்று உணரப்பெற்றேன்.

இதனுடன் பட்டினத்து அடிகளின் ஞானத்தை முடிக்கவேண்டும் என்ற என்னுடைய எண்ணத்தை அவர் அடியோடு மாற்றிவிட்டார் என்றே எண்ண தோன்றுகிறது.

வரும் நாட்களில் அவருடைய பூரணமாலையில் உள்ள அனைத்து பாடல்களையும் தினந்தோறும் பத்து பாடல்களாக எல்லாருக்கும் புரியும் வகையில் எழுதலாம் என்ற எண்ணம் உதித்துள்ளது.


உங்களுக்கு ஞானம் கிடைக்கவேண்டுமா ?- அதற்க்கான வழியை பட்டினத்து அடிகள் பூரண மாலையில் பாடியுள்ளார்.

மிகவும் எளிய நடையில் அமைந்துள்ள அவரின் பாடல்களுக்கு விளக்கம் தேவை இல்லை என்றாலும் எனக்கு தெரிந்த கருத்துகளை கூறுகிறேன்.

"எதிர்பார்ப்பு என்று இருக்கும்போது தான் ஏமாற்றம் என்பது விளங்கும் ".

"ஏமாற்றம் என்பது நாம் ஏன் மாற்றம்(மனதளவில்) அடைந்தோம் என்றால்  விளங்கும் ".

"மனதளவில் மாற்றம் அடைந்தாலே போதும் மாற்றத்தை மாற்றாமலே நம்மால் வாழ முடியும் ".


பட்டினத்து அடிகளின் ஞானத்தை அள்ளி பருக விரும்புபவர்களுக்கு கிடைக்கும் பயன் .

பூரண மாலை தனை புத்தியுடன் ஒதினருக்கு
தாரணியில் ஞானம் தழைப்பிப்பாய் பூரணமே !...

வரும் நாட்களில் பூரண மாலையில் உள்ள பாடல்களை காண்போம்.

என்றும்-சிவனடிமை-பாலா.

வியாழன், 26 மே, 2011

பட்டினத்து அடிகளின் வாழ்வில் ஞானம்...

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,
இதுகாறும் யோகத்தை பார்த்து வந்த நமக்கு இன்று அடுத்த படியான ஞானம் என்ற நிலைக்கு செல்வோம்.

"கெட்டால் தான் அவன் ஞானி " -என்ற பழமொழியை நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம்.  இதனை நாம் எவ்வாறு எடுத்துக்கொள்ளவேண்டும்  என்றால் அனுபவங்களினால் மட்டும் தான் ஒருவன் ஞானி ஆக முடியும்.  ஒருவன் எல்லாவித கெட்ட பழக்கங்களை கொண்டு இருந்தால் அவன் ஞானியாக முடியாது.   உதாரணமாக கஞ்சா, மது, மாது...

"கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு "-என்று கூறுகிறோம் .இதனை நாம் எவ்வாறு எடுத்துக்கொள்ளவேண்டும் என்றால் அனுபவம் என்பது கற்பது என்று பொருள் கொள்ளவேண்டும்.  அனுபவத்தை எல்லாராலும் எளிதாக வாங்க முடியாது. அவன் அவன் விதித்த பாதையில் முறையாக சென்றாலே நல்ல அனுபவம் கிடைக்கும் .

"நதி மூலம் ,ரிஷி மூலம் பார்க்க கூடாது " -என்று கேள்வி பட்டு இருக்கிறோம் . இதனை நாம் எவ்வாறு எடுத்துக்கொள்ளவேண்டும் என்றால் அப்பொருளின் பயன் பாட்டினை கொண்டு அதனை வேண்டுமென்றால் எடுத்துகொள்ளலாம்.

உலகில் எல்லா மனிதர்களும் சரியை,கிரியை, யோகம்  என்ற மூன்று மார்க்கங்களையும் கடந்து வருகிறார்கள் .ஆனால் ஞானம் என்ற படியை பொதுவாக அவர்கள் தொடுவது கிடையாது. ஏனென்றால் அந்த நிலை வரும்போது அவர்களின் வயதும் அதிகரித்து விடுகிறது. தள்ளாத வயதில் ஞானம் கிடைக்கும் என்று எல்லாரும் நம்புகிறார்கள். ஒரு வேலை கிடைக்கலாம் ஆனால் அதனால் என்ன நன்மை கிடைக்கும் யாருக்கு கிடைக்கும் என்பதனை நாம் உணரவேண்டும்.

அனுபவகல்வியை சிலர் ஞானம் என்று கூறுவார்கள். அதுவும் கூட உண்மை தான் ஆனால் அது தொழில் சார்ந்த அனுபவமாக இருக்க கூடாது.

பொதுவாக அனைத்து சித்தர்களும் திருமணம் செய்து கொண்டு இல்வாழ்க்கையில் ஈடுபாடுகொண்டு அதேவேளையில் அந்த ஆதி சித்தனை பூசித்தும் ,பல இடங்களில் தரிசனம் செய்தும் , பலவகையான உழவார பணிகளை மேற்கொண்டும் இறுதியில் அவனை அடைந்து இருக்கிறார்கள்.  இதற்க்கு யாரும் விதி விளக்கல்ல . எல்லாராலும் இதனை செய்ய முடியும்.

நாமும் அவர்களைப் போல  தான் வாழ்ந்து வருகிறோம் ஆனால் இறைவனிடம் சென்று ஞானத்தை தவிர அனைத்தையும் கேட்டு வாங்கி கொள்கிறோம்.

கேட்டவுடனே ஞானம் கிடைக்குமா இல்லை கிடைத்தால் அதனை வைத்துக்கொண்டு நம்மால் தான் வாழ முடிமா ? . இதனைப் பின்பற்றுவதற்கு ரொம்ப கடினம் .

உதாரணத்திற்கு " நான் தான் கடவுள் "-என்று சொன்னால் இந்த உலகம் நம்மை என்ன சொல்லும். முதலில் இதனை நம்மால் தான் ஏற்றுக்கொள்ள முடியுமா ? முடியாது .
ஏனென்றால் அதற்க்கான பக்குவநிலை நம்மிடம் கிடையாது .

அப்பர் சுவாமிகள் இறந்து போன தன் பக்தனின்  பிள்ளைக்கு உயிர்கொடுத்து இந்த உலகில் சிவனின் பெருமையை நிலை நாட்டினார் . இந்த நிகழ்வினால் அப்பர் சுவாமிகள் கடவுளாக பார்க்கபடுகிறார் அவ்வளவு தான்.

ஏசு நாதர் மூன்று நாட்களுக்கு பிறகு உயிர்தெழுந்து வருகிறார். இதன் மூலம் அவர் பரமபிதாவின் மகன் என்ற தகுதியை பெறுகிறார்.

இதனைப்போல எண்ணிலடங்கா சித்தர்கள் இந்த புண்ணிய புவியில் இன்னும் இருந்து கொண்டு தமக்கு இடப்பட்ட பணிகளை செய்து வருகிறார்கள்.

ஆனால் அணைத்து சித்தர்களும் வாசியை கொண்டு தான் இந்த நிலையை அடைந்து இருக்கிறார்கள்.

"ஞானம் என்பது வெளியில் தேடுவது அல்ல.  அது பரவெளியை நோக்கி உள்ளே செல்வது" .

"அண்டத்தில் உள்ளது எல்லாம் பிண்டத்திலும் உள்ளது ".

கடந்து உள்ளே செல்ல செல்ல தான் உண்மையான அந்த ஆதியாய் உள்ள அந்த சித்தனை நாம் காண இயலும்.  அதற்க்கு முறையான முயற்சியும் ,பயிற்சியும் தேவை .

சிலர் ஞானத்தை தேடி எங்கெங்கோ செல்வார்கள் . இறுதியில் சிவனே என்று அமர்ந்து விடும்போது தான் அவர்களுக்கு அது எங்கு இருக்கும் என்று புலப்படும்.


பட்டினத்து அடிகள் இதற்க்கேற்றார்போல அனைத்து நிலைகளையும் கடந்து இறுதியில் ஞான நிலையை பெற்று திருவொற்றியூரில் பிறவா நிலையை அடைந்தவர்.

அவர் ஞானம் பெற்ற பிறகு பாடிய பாடல்கள் பூரண மாலை என்று அழைக்கப்பெறுகிறது  .

அவற்றில் சில உங்களுக்காக ....

நெற்றி விழியுடைய நிர்மல சதாசிவத்தைப்
புத்தியுடன் பாராமல் பொறி அழிந்தேன் பூரணமே!

உச்சி வெளியை உறுதியுடன் பாராமல்
அச்சமுடன் நானும் அறிவழிந்தேன் பூரணமே !


தொடரும்....
என்றும்-சிவனடிமை-பாலா.

புதன், 25 மே, 2011

பட்டினத்து அடிகளின் வாழ்வில் யோகம்....


அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

பட்டினத்து அடிகளின் வாழ்வில் யோகத்தை நாம் பார்த்து கொண்டு இருக்கிறோம்.  நேற்றைய தொடரில் கூறியது போல் , யோகசானம் நமது உடலை நன்கு பேணி காக்கும் ,யோகத்தில் ராஜயோகம் என்றும் ,கிரியா யோகம் என்றும் பல வகையில் பலர் இன்று சொல்லிகொடுத்து வருகிறார்கள்.

எல்லாராலும் கடினமான  யோகாசனம் செய்யமுடியாது.  நம்மால் முடிகிற ஆசனத்தில் அமர்ந்து கொண்டு அந்த சிவனை நினைத்துக்கொண்டு சும்மா இருந்தாலே போதும்.
எல்லாமும் கிடைக்கும் .எல்லாமும் என்றால் எல்லாமே தான்.

உலகில் சும்மா(அமைதியாய் ) இருப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை . அதனை சும்மா இருந்து பார்த்தால் தான் தெரியும்.

உலகில் எந்த யோகத்தை பயின்றாலும் இறுதியில் அது வந்து வாசி யோகத்தில் தான் முடியும்.
வாசி என்பது சிவா ஆகும்.
வாசி = சிவா .
வாசி என்பது சிவனை பூசிப்பது .எங்கு பூசிப்பது கோவிலிலா இல்லை நமது உள்ளத்திலா என்பது முதலில் நாம் உணர வேண்டும்.  சித்தர்கள் அனைத்தையும் மறைபொருளாகவே சொல்லிவிட்டு சென்றுவிட்டார்கள்.  நாம் எவ்வாறு கோவிலில் உள்ள சிவலிங்கத்தை பூசிக்கிறோமோ அதுபோல உள்ளத்தில் உள்ள  அந்த ஈசனையும் பூசிக்கவேண்டும். அப்போது தான் நமக்கு ஞானம் என்ற அடுத்த படிக்கு முன்னேற முடியும்.

வாசியை எப்படி கற்றுகொள்ளவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலே போதும். குரு உங்களை தேடி நிச்சயம் வருவார்.  எனக்கு அதுபோன்ற நிகழ்வு ஏற்பட்டு தற்சமயம் தான் அதனை  நான் கற்றுக்கொண்டு வருகிறேன்.

இறைவன் படைத்த இந்த உடல் தமக்கு தேவையான  எல்லா ஆசனங்களையும் தானே செய்து கொள்கிறது. ஆனால் இது தான் அதுவென்று நமக்கு தெரிவதில்லை.

எல்லா யோகத்தின் முடிவும் வாசியில் தான் முடியும். அந்த வாசி லயத்தால் தான் சமாதியை அடைய முடியும். அந்த சமாதி நிலையை அடைந்தால் தான் முக்தி என்ற பிறவா நிலையை அடைய முடியும்.

பட்டினத்து அடிகளின் பாடலில் சில ...

சரியை கிரியா யோகம் தான் ஞானம் பாராமல்
பரிதி கண்ட மதியது போல பயன் அழிந்தேன் பூரணமே ..!

வித்தை கற்கும் ஆசையது விட்டொழியேன் என்குதே
சித்து கற்கும் ஆசை சிதையேனே என்குதே...

வாசிதனைப் பார்த்து மகிழ்ந்து உனைத்தான் போற்றாமல்
காசிவரை போய்த் திரிந்து கால் அலுத்தேன் பூரணமே...

தொடரும்...

என்றும்-சிவனடிமை-பாலா.

செவ்வாய், 24 மே, 2011

பட்டினத்து அடிகளின் வாழ்வில் யோகம்....


அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

எனது கணினியில் தமிழ் மொழி மாற்றி சரிவர வேலை செய்யவில்லை .ஆகையால் என்னால் யாருக்கும் பின்னூட்டங்களையும்  மற்றும் பதிவுகளையும் பதிவு செய்யமுடியவில்லை.

பட்டினத்து அடிகளின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக்கொள்ள இருக்கும் ஆன்மிக படிகளை இன்று காண்போம். 

கடந்த பதிவில் பதித்த பாடலில் எழுத்துபிழை உள்ளதென்று சுட்டிக்காட்டிய ஐயா ஜானகி ராமனுக்கு எனது மனதார நன்றிகள்.

"எல்லாப்பிழையும் பொருத்தருள்  வாய்கச்சி ஏகம்பனே .."

யோகம் மற்றும் கிரியை என்றால் என்ன என்று இன்றைய பதிவில் காண்போம்.

யோகம் என்றால் யோகாசனம் என்று எல்லாரும் நினைத்து கொள்கிறார்கள் அது முற்றிலும் தவறு ஆகும்.  யோகத்தினால் நமக்கு என்ன நன்மை என்று முதலில் நாம்  உணரவேண்டும்.
பொதுவாக நாம் வழிபடும் சித்தர்களும் மற்றும் முனிகளும், கடவுள்களும் பொதுவாக ஒரு ஆசனத்தில் அமர்ந்து தான் மக்களுக்கு ஆசி வழங்குவது போல் சித்தரிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

குருமுனி அகத்தியர் அமர்ந்து இருக்கும் ஆசனம் சித்த ஆசனம் என்று கூறுகிறார்கள் . பதஞ்சலி முனிவர் அமர்ந்து இருக்கும் ஆசனம் பத்மாசனம் என்று கூறுகிறார்கள். இது போன்ற ஆசனங்கள் எல்லாம் அவர்களை மேல்நிலைக்கு கொண்டு சென்ற ஆசனங்கள் ஆகும்.  இதனை குருவருளின் துணைகொண்டு நாமும் பயின்று வந்தால் நமது வாழ்க்கையும் அவர்களின் வாழ்க்கையை போல் மேம்படும்.

யோகம் என்பது ஒழுக்கம் ஆகும். மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று தத்துவத்தை நமது மூதாதையர்கள் அருமையாக சொல்லிவிட்டு சென்றுவிட்டார்கள் . எல்லாரும் எல்லாவித ஆசனங்களை செய்து கொண்டு தான் வருகிறார்கள் . பொதுவாக கோவிலுக்கு சென்று வந்தால்
அங்கு மக்கள் வழிபடும் எல்லா முறைகளும் ஆசன முறைகள் தான்.

இறைவனை எப்படி வழிபடுவது என்று முறையை நமது முன்னோர்கள் கோவில் என்ற மாபெரும் வெளிபொருளில் வைத்து அதன் மூலம் உள்ளத்தையும் உடலையும் நன்கு வளர்த்து வந்தார்கள் .   உண்மையான தத்துவத்தை உணர்ந்த பின் அவர்கள் தம்முடைய உடலுக்கு தேவையான ஆசனத்தை மேற்கொண்டு ஞானத்தை அடைகிறார்கள்.

கடவுள் படைத்த இந்த உடல் ஒரு மாபெரும் சக்தி வாய்ந்த பொக்கிஷம் ஆகும்.  யோகத்தில் கூறும் இறுதி நிலை என்பது சமாதி ஆகும். 

சமாதி என்றால்..
சமம் + ஆதி = சமாதி .

ஆதியை உணர்ந்தவர்கள் மட்டுமே சமாதி நிலையை அடைய முடியும் .
எல்லாரும் ஒவ்வொரு நிலையாக தான் கடந்த இந்த நிலையை அடைய முடியும்.  ஆனால் இதற்க்கு சித்தர்கள் முற்றிலும் மாறுப்பட்டவர்கள் . அவர்கள் போகும் பாதையே வித்தியாசமாக இருக்கும்.

எந்தவித விருப்பு வெறுப்பின்றி ,இறைவன் கொடுத்த இந்த வாழ்க்கையை சந்தோசமாக ஏற்றுகொண்டு  யாருக்கும் தீங்கு செய்யாமல் வாழ்ந்தாலே அவனை ஒரு யோகி என்றே கூறலாம். 
யோகாசனம் என்பது நாம் வாழும் இந்த உடலுக்கு மட்டும் தான் .
யோகம் என்பது நாம் வாழும் இந்த வாழ்க்கைக்கு தான் என்று பொருள் கொள்ளவேண்டும்.

மேற்கூறியது போல் பட்டினத்து அடிகளாரின் வாழ்வில் அவர் யாருக்கும் தீங்கு செய்ததாக நம்மால் எங்கும் காண முடியவில்லை .

தொடரும்...

என்றும்-சிவனடிமை-பாலா.

வெள்ளி, 20 மே, 2011

பட்டினத்து அடிகளாரின் வாழ்வில் சரியை மற்றும் கிரியை.

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

நேற்றைய பதிவில் சரியை மற்றும் கிரியை பார்த்தோம் .  
பட்டினத்து அடிகள் சிவன் மீது தீவிர பக்தி உடையவர்.ஆகையால் தான் சிவனே அவருக்கு மகனாக அவதரித்ததாக வரலாறு உண்டு. இது உண்மையும் கூட .  உண்மையிலே சிவனிடம் அன்பு கொண்ட எவரும் வாழ்வில் தோற்று போனதாக சரித்திரம் இல்லை.

உலக வாழ்வின் உண்மையை எடுத்து கூறுபவன்.
நிலையாமை எடுத்து கூறுபவன்.
அன்பின் திருவுருவம் என்று அவனை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். அதற்க்கு நமது வாழ்நாள் போதாது .

சிவனின் மீது பித்து கொண்டு கோவில் கோவிலாக சுற்றி திரிந்தவர் தான் இவர். சிவனே கதி என்று உலக வாழ்க்கையை துறந்து கோவணம் கட்டிக்கொண்டு வீதி வீதியாக திரிந்தவர்.
நம்முடைய சட்டையில் ஒரு சின்ன கிழியல் இருந்தால் கூட நாம் அதனை போட விரும்புவதில்லை . ஆனால் அவரோ ஒரு மிகப்பெரிய வைர வியாபாரி. 
ஒருவன் ஞானத்தை அடையும் வழியை கண்டு கொண்டால் அவன் இந்த உலகபந்தங்களை கண்டு கொள்ளமாட்டான். உலகம் தான் அவனை கண்டு பயம் கொள்ளும். உலகம் என்றால் இயற்க்கை என்று விளக்கம்.

இங்கு சரியை என்பது அவர் சிவன் மீது கொண்ட பற்றினால் கோவிலுக்கு சென்று சிவலிங்கத்தை வழிபடுவது.

இங்கு கிரியை என்பது அவர் சிவன் மேல் கொண்ட பற்றினால் பாடிய பாடல்களும் அவர் கூறி வரும் மந்திரங்களும் ஆகும்.

அதற்க்கு தகுந்தாற்போல் உள்ள பாடல்களில் சிலவற்றைக் இங்கு  காணலாம்.

நினைமின் மனனே ! நினைமின் மனனே
சிவபெருமானைச் செம்பொனம் பலவனை
 
நினைமின் மனனே ! நினைமின் மனனே

கல்லாப்பிழையுங் கருதாப்பிழையுங் கசிந்துருகி
நல்லாப்பிழையும் நினையாப் பிழையும் நின் அஞ்செழுத்தை
சொல்லாப் பிழையுந் துதியாப் பிழையுந் தொழாப் பிழையும்
எல்லாப்பிழையும் பொருத்தருள்  வாய்கச்சி ஏகம்பனே ..

அடியார்க்கு எளியவர் அம்பலவாணர் அடிபணிந்தால்
மடியாமல் செல்வ வரம் பெறலாம் , வையம் எழளந்த
நெடியோனும் வேதனுங் காணாத நித்த நிமலன் அருள்
குடிகானும் நாங்கள் ! அவர் காணும் எங்கள் குலதெய்வமே..

அத்தனை முப்பத்து முக்கோடி தேவர்க் கதிபதியை
நித்தனை  அம்மை சிவகாம சுந்தரி நேசனை எம்
கத்தனை  பொன்னம்பலத்தாடும்  ஐயனைக் காணக்கண்
எத்தனை ......


என்றும்-சிவனடிமை-பாலா.

வியாழன், 19 மே, 2011

பட்டினத்து அடிகளாரின் வாழ்வில் சரியை,கிரியை,யோகம் மற்றும் ஞானம்...

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,
பட்டினத்து அடிகளாரின் பாடல்கள் மிக எளிமையாகவும் அதே நேரம் உட்கருத்து பொருந்தியதாகவும்  இருக்கும் .  ஒரு மனிதன் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதற்கு அவரின் வாழ்க்கையே ஒரு சிறந்த உதாரணமாகும் .
செல்வம் உள்ளபோது மனிதனின்  நிலை எப்படி இருக்கும் ?
ஞானம் அடைந்த போது மனிதனின்  நிலை எப்படி இருக்கும் ?
இறுதியில் முத்தியை வேண்டி நிற்கும் போது மனிதனின்  நிலை எப்படி இருக்கும் ?
இது போன்ற நிகழ்வுகளை அவரின் பாடல்கள் மூலம் நாம் எளிதாக அறிய இயலும்.

சரியை , கிரியை, யோகம், ஞானம்  என்று எல்லாரும் சொல்வார்கள் . இது ஒரு ஏணியை போன்றது . ஒவ்வொரு படியாக தான் நாம் எறிவரவேண்டும். இதைப்பற்றி பலர் பலவிதமாக சொன்னாலும் எமக்கு தெரிந்த கருத்தினை இங்கு கூறுகிறேன்.

இந்த நான்கு நிலையையும் ஒவ்வொரு மனிதனும் தமது வாழ்கையில் கடந்தே வருகிறான். ஆனால் இது தான் அதுவென்று அவனுக்கு புரிவதில்லை. எந்தவொரு காரியத்தையும் புரிந்து பண்ணினால் அதற்க்குண்டான மகிழ்வே தனி தான்.

சரியை - உருவ வழிபாடு மூலம் இறைவனை அடைவது ...
             இங்கு உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் ஏதுனும் ஒரு வகையில் உருவத்தினை வழிபடுகிறார்கள் . உருவவழிபாடு இல்லாத மதம் எதுவும் இவ்வுலகில் இல்லை.
உதாரணமாக
இந்துக்கள் : சிவன், சக்தி, முருகன், .......
கிறிஸ்தவர்கள் : இயேசு ,மேரியம்மா ,அந்தோனியார்
முகமதியர்கள் : இவர்கள் உருவ வழிப்பாடு இல்லை என்று கூறுவார்கள் ஆனால் வானில் உள்ள பிறையை வழிபடுபவர்கள் மற்றும் ஏதுனும் ஒரு திசையை நோக்கி தான் வணங்குவார்கள் .

இதன் மூலம் அனைத்து மக்களும் ஏதுனும் ஒருவகையில் தமது வாழ்க்கையை உருவழிப்பாட்டில் தான் ஆரம்பிக்கிறார்கள் . இந்த நிகழ்வு பொதுவாக எல்லாருக்கு மழலை பருவத்தில் தான் ஆரம்பிக்கிறது .

கிரியை : மந்திரங்கள் மூலம் இறைவனை அடைவது ...
             எல்லா மதத்தினரும் பல வித மந்திரங்களை கொண்டு இறைவனை அடைய முயற்சி செய்க்கிறார்கள் . மனதின் திறம் அறிந்து அதனை வலுப்படுத்தவே மந்திரங்கள் தோன்றியது.
உதாரனத்திற்க்கு  இந்துகள் கூறும் மந்திரங்கள் அவர்களின் தாய் மொழியிலே அதிகமாக காணபடுகிறது . சமஸ்கிரதம் தெரிந்தவர்கள் அதன் மூலம் உச்சரித்து பயன் பெறுகிறார்கள் .
தமிழர்களோ இனிய தமிழ் மொழியிலே கோடிகணக்கில் பாடல்களை எழுதி இறைவனை வழிப்பட்டு அவரின் பாதங்களை அடைந்தார்கள் என்பதற்கு நாயன்மார்களும் , ஆழ்வார்களுமே
சாட்சியாகும் .

மனிதன் எப்போது துன்பத்தை அடைகிறானோ அப்போது தான் இறைவனை பற்றிய எண்ணம் அவன் மனதில் உருவாகும். துன்பம் வருகிறது என்றால் கடவுள் நமக்கு ஒரு படிப்பினையை தருகிறார் என்றே என்னவேண்டும் .அதைவிட்டுவிட்டு அவனை குறை கூற கூடாது .
வாழ்க்கையே துன்பம் என்றால் அதனை இன்பமாக மாற்றுவதற்கான  வழிமுறையை தேடவேண்டும் அதைவிட்டுவிட்டு கடவுள் அருள் செய்வார் என்று இருந்தால் எப்படி செய்வார்.
அவர் ஒருபோதும் சோம்பேறிகளுக்கு  துணை புரிய மாட்டார் . பொதுவாக சாமியார்களை சோம்பேறிகள் வேலை வெட்டி இல்லாமல் பிச்சை எடுத்து சந்தோசாமாக வாழ்ந்து கொண்டு வருகிறார்கள் என்ற எண்ணம் பரவலாக உள்ளது.  இது முற்றிலும் தவறு.
அவர்களின் நிலையில் இருந்து பார்த்தால் தான் அதன் அனுபவம் தெரியும்.


எனக்கும் பிச்சை எடுத்த அனுபவம் உண்டு வாழ்வில் மறக்க முடியாத அனுபவம் .அதுவும் சொந்த கிராமத்தில் காவியை அணிந்து கொண்டு ,கையில் அலுமினிய தட்டினை ஏந்திக்கொண்டு  வீடு வீடாக பிச்சை எடுத்த அனுபவம் எனக்கும் உண்டு...

சித்தர்களின் வாழ்வில் இந்த நான்கு நிகழ்வுகளும் கண்டிப்பாக நடைபெற்றுள்ளது. இந்த அனுபவித்தின் மூலம் தான் அவர்கள் தம்மை உணர்ந்து மக்களுக்கு சேவை செய்து மரணம் இல்லாத பெரு வாழ்க்கையை பெற்று இன்றும் வாழ்ந்து வருகிறார்கள் ..

தொடரும்....

என்றும்-சிவனடிமை-பாலா.

செவ்வாய், 17 மே, 2011

சிவவாக்கியரின் பாடல்களில் ஆதியைப்பற்றி சில பாடல்கள் ...

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

குருபெயர்ச்சி எல்லாருக்கும் நன்றாக இருக்கும் என நம்புவோம்.
குருபெயர்ச்சி எனக்கு இடப்பெயற்சியாக அமைந்ததால் . எனக்கு பணி மாற்றம் மற்றும் இட மாற்றம் மற்றும் அலுவலக நேரம் மாற்றம் போன்றவை நிகழ்ந்தையால் ஒண்ணுமே புரியல .

தற்சமயம் இந்த புதிய இடமாற்றம் கொஞ்சம் எனக்கு  இயல்பாகி விட்டதால் .மீண்டும் என் கருத்துகளை உங்கள் முன்னிலையில் வைக்கிறேன்.

சிவவாக்கியரின் பாடல்களில் சில...

ஆதியில்லை  அந்தமில்லை யானநாலு வேதமில்லை
சோதியில்லை சொல்லுமில்லை சொல்லிருந்த தூவெளி
நீதியில்லை நேசமில்லை நிச்சயப் படாததும்
ஆதிகண்டு  கொண்டபின்  அஞ்செழுத்தும் இல்லையே .

---உன்னை உணர்ந்த பின் உனக்கு எதுவும் தேவையில்லை ......

நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை
நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாய்கை மாயகையே
அனைத்துமாய் அகண்டமாய் அநாதிமுன்  அனாதியாய்
நினைக்குள் நாநெக்குள் நீ நினைக்குமாறு எங்ஙனே...

--உன்னையன்றி எதுவும் இல்லை எல்லாமே நீ தான் ---------

கருகலந்த காலமே கண்டுநின்ற காரணம்
உருகலந்த போதலே உன்னை நானுணர்ந்தது
விரிக்கிலென் மறைக்கிலென் வினைக்கிசைந்த போதெல்லாம்
உருகலந்து நின்ற பொது நீயும் நானும் ஒன்றலோ ....

--நீயின்றி நானில்லை----------

என்றும்-சிவனடிமை-பாலா.

வியாழன், 5 மே, 2011

புண்ணிய ஆத்மாக்களின் தொடர்பில் விளைந்தவை....

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

ராமகிருஷ்ண பரஹம்சர் இறந்தபிறகு , அவரின் துக்கம் தாங்க இயலாமல்
சாரதா தேவி அம்மையார் தற்கொலை முயற்சி செய்யும் பொது அவர் அம்மையாரிடம் பின்வருமாறு  பேசியதாக ஒரு புத்தகத்தில் படித்தேன்.

தேவி நான் இந்த உடலை தான் உதறி இருக்கிறேன், என் ஆத்மாவை   இல்லை. இந்த உடல் அழியக்கூடியது ஆனால் இந்த ஆத்மா அழிவற்றது .
இதுபோன்ற காரியங்களை இனி செய்ய கூடாது என்று கூறினார்.

உதாராணத்திருக்கு நாம் ரேடியோவை  எடுத்துக்கொள்வோம்.  நாம் சரியான அலைவரிசையை தேர்ந்து எடுத்து நிகழ்சிகளை கேட்டு மகிழ்கிறோம் . அதுப்போல் புண்ணிய ஆத்மாக்களின் தரவரிசையை அறிந்துகொண்டு அவர்களின் மூலம் பல விசயங்களை தெரிந்து கொள்ளலாம் . 

சித்தர்களின் அலைவரிசை ரொம்ப அதிகம், ஒரு வேலை நமக்கு அதிர்ஷ்டம் இருந்து நமது அலைவரிசையும் அவர்களின் அலைவரிசையும் ஒத்துபோனால் பல வித அதிசயங்களை நம்மால் பண்ண முடியும்.

எனக்கு இந்த கலையை  கற்றுகொடுத்தவரின் வழிகாட்டி ஒரு சித்தர் ஆவார்.
  
இந்த கலையை கற்றுக்கொண்டு ,என்னால் முடிந்தவரை பலருக்கு நன்மையை செய்திருக்கிறேன்.

அவற்றில் சில ,

தொலைந்துபோன தங்க தோடு,மூக்குத்தி கண்டுபிடித்தல் .

குழந்தை இல்லாதவர்களுக்கு அதற்க்கான பரிகாரமுறையை கூறுதல்.

எல்லாவித நோய்களை குணபடுத்துதல்.

வேலை வாய்ப்பினை கூறுதல் -என் நண்பர்கள் அனைவருக்கும் இதன் மூலம் கணித்து வேலையே வாங்கி கொண்டார்கள்.

இறந்தவர்களின் வீட்டிருக்கு சென்று அவர்களின் கடைசி ஆசையை கேட்டு அதனை நிறைவேற்றுதல்.  -- இது ரொம்ப கஷ்டமாக இருக்கும். ஏனெனில் இறந்த ஆத்மா ரொம்ப ஆக்ரோசமாக இருக்கும்.

பூர்விக ஜென்மத்தை உணரசெய்தல் -- சிலர் புலம்புவாங்க நமக்கு மட்டும் ஏன் இது மாதிரி நடக்கிறது என்று. அதற்க்கான விளக்கத்தை கூறி அவர்களை நல்வழிப்படுத்துதல் .

இவைகள் எல்லாம் இரண்டு ஆண்டுகள் மட்டுமே என்னால் செய்ய முடிந்தது . பின் என் குல தெய்வம் ஆணைக்கேற்ப இதனை விட்டு விட்டேன்.

இதன் மூலம் எனக்கு எந்தவொரு நன்மை ஒன்றும் ஏற்படவில்லை .என்னை சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும்.
எனக்கு எந்தவொரு வருமானமும் இல்லை .ஏனெனில் இதனைக்கற்றுகொள்ளும்போது அந்த ஆதி சித்தனக்கும்  எனக்கும் உள்ள ஒரு உடன்படிக்கை , இதன் மூலம் வரும் பணத்தை நான் எனக்காக எடுக்க மாட்டேன் என்பது தான். அனைத்து பணமும் அன்னதானத்திருக்கு தான்
உபயோகபயன்பட்டது .

இதன் மூலம் குடும்பத்தில் நிம்மதி குறைவு. குடும்பத்திற்கு என்று எதுவும் என்னால் சம்பாதிக்க முடியவில்லை.  சொல்ல போனால் குடும்பத்தை பற்றி சிந்தனை செயும் அளவுக்கு 
எனக்கு நேரம் இல்லை.

இதன் மூலம் எனக்கு கடன் பிரச்சனை தான் அதிகமாக இருந்தது.
எல்லாருடைய பிரச்சனையும் நம்மால் தீர்க்க முடியும் . நம்ம பிரச்சனை
யார் தான் தீர்ப்பார்.

இதன் மூலம் என் காதலிலும் எனக்கு பிரச்சனை , ஏனென்றால் எந்த பெண்ணையும்  ஒரு முறை உற்றுப்பார்த்தால் அவர்களின் வாழ்க்கையில் நடந்த அத்தனை விசயமும் நமக்கு தெரிந்து விடும்.  இதனை நாம் அவர்களிடம் சொன்னால் சில சமயம் நமக்கே ஆபத்தாக முடிந்து விடும்.
பல பெண்கள் ,இதன் மூலம் என்னிடம் பேசவே பயப்படுவார்கள் .

இதுப்போன்ற தேவையில்லாத காரணத்தால் நான் மனவேதனை அடைந்ததுண்டு .

இவ்வுலகில் உயிர் வாழ நாம் நன்கு சம்பாதிக்கவேண்டும் நல்ல முறையில்
சம்பாதிக்கவேண்டும் என்று எண்ணத்தில்  இந்த தொழிலை விட்டுவிட்டு .
நான் படித்த கம்ப்யூட்டர் துறையில் கவனத்தை செலுத்தி வேலையை வாங்கினேன்.

இருப்பினும் நான் கடந்து வந்த பாதையை நினைத்து பார்க்கும்போது 
இந்த நிகழ்வுகள் ஞாபகம் வந்தது .

அன்றும்,
இன்றும் புண்ணிய ஆத்மாக்கள் எனக்கு தக்க சமயத்தில் 
தாங்களாகவே  உதவி புரிந்து கொண்டு இருக்கிறார்கள் . 

வரும் நாள்களில் சித்தர்களின் பாடல்களை கொஞ்சம் பார்ப்போம் .

என்றும்-சிவனடிமை-பாலா.

செவ்வாய், 3 மே, 2011

தொழுநோயை குணபடுத்திய ஆன்மாக்கள்...

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

எனக்கு பல சீடர்கள் இந்த துறையில் இருந்தார்கள். என்னிடம் ஒரு முறை அருள்வாக்கு பார்க்க வந்தால், அவர்கள் விரும்பினால் அவர்களுக்கும் இந்த கலையை கற்றுகொடுத்து இந்த கலையை வளர்த்து வந்தேன்.

ஒருமுறை என்னை பார்க்க ஒரு நண்பர்  வந்தார், அவர் வந்தவுடன் அவருக்கு உள்ள பிரச்சினையும் ,வந்த நோக்கத்தையும் நான் கூறினேன்.
என் மேல அவருக்கு ரொம்ப நம்பிக்கை வந்தது ,  பின் ஐயா நானும் இதனை
கற்றுக்கொள்கிறேன் என்று கேட்டார் . எனது வழிகாட்டியை அழைத்து நான்
விளக்கம் கேட்டபோது இவன் கற்றுக்கொள்வான் என்று கூறினார்.  அதற்க்கான தட்சணை எவ்வளவு  என்று  என்னிடம் எனது வழிக்காட்டி கூறினார்.

வந்த நண்பரோ , என்னிடம் வெறும் 100  ரூபாய் தான் உள்ளது என்று கூறினார். நானோ உன்னிடம் ஆறு 50  ரூபாய் உள்ளது மொத்தம் தட்சணை
ரூபாய் 300  என கூறினேன்.
 உடனே  அவர் என்னைப்பாத்து மன்னித்து விடுங்கள்  எனக் சொன்னார்.
நான் சொன்னேன்  எனக்கு ஒன்றும் தெரியாது தம்பி ,எனக்கு வந்து விபரம் தான் இது, தயவு செய்து உன் சட்டைப்பையில் உள்ள பணத்தை எண்ணிப்பார்
எனக் கூறினேன்.   எண்ணிப்பார்த்தால் சரியாக சொன்ன தொகை இருந்தது.

பின் அந்த நண்பருக்கு மந்திரம் உபதேசித்து ,
ரொம்ப நிதானமாகவும் ,அன்பு கலந்த மரியாதையுடனும் ஆன்மாக்களை அழைக்க சொன்னேன் . சிறிது நேரத்தில் அந்த நண்பரின் கையில் உள்ள புத்தகத்தில் எழுத்துகள் வர ஆரம்பித்தன .  இதில் ஒரு விஷயம் என்னவென்றால் அந்த நண்பரின் இறந்துபோன தாத்தாவே அவனுக்கு வழிக்காட்டியாக வந்துவிட்டார்.

சில மணி துளி உரையாடலுக்கு பின் அவருக்கு உள்ள நோய் என்னவென்று கேட்டபோது வெண்குஷ்டம் என்று வந்தது . அவர் அதை ஒப்புக்கொண்டு அவரின் உடலை திறந்து காட்டினார்.

மாதம் கை நிறைய சம்பாதித்தாலும் இந்த நோயினை பார்த்த எந்த பெண்ணும் அந்த பையனுடன் பேசுவதில்லை. அண்ணே எப்படியாவது இந்த
நோயை குணப்படுத்தணும் என்று என்னை கெஞ்சி கேட்டார் இல்லையென்றால் என் வாழ்க்கை வீண் என அழுதார் . அவர் மேல் இறக்கம் கொண்ட வழிக்காட்டி கன்னியாகுமரியில் உள்ள ஒரு மருத்தவரின் விலாசத்தை தெளிவாக எழுதி காட்டினார்.


எனக்கு இந்த விசயத்தில் உடன்பாடில்லை ஏனென்றால் அந்த நண்பர் கன்னியாகுமரிக்கு சென்றதே கிடையாது அந்த தெருவின் பெயர், வீட்டின் தோற்றம் போன்றவை தெளிவாக வழிக்காட்டியின் மூலம் அவருக்கு தரப்பட்டது .எனக்கு நம்பிக்கையும் இல்லை இந்த நோய் குணமாகும் என்று.  வந்த நண்பர் கொடுத்த பணத்தை அவரிடமே கொடுத்து இந்த தொகைக்கு தயிர் சாதம் அல்லது சாப்பாட்டினை வாங்கி அன்ன தானம் செய்யுங்கள் என்று கூறிவிட்டேன் அவரும் அவ்வாறே செய்தார் .

அருள்வாக்கின் மூலம் சம்பாதித்த பணத்தை நான் தொடுவதே கிடையாது .
அவர்களின் மனதினை அறிந்து அவர்களின் மூலமே அன்னதானம் செய்வது
தான் எனது இயல்பு. இது சத்தியம்.  இதன் மூலமோ என்னவோ தெரியவில்லை  அந்த ஆதி சித்தன் பல கலைகளை எனக்கு கற்றுகொடுக்கிறான்.

சரியாக 3 மாதங்களுக்கு பிறகு அந்த நண்பர் என்னை பார்க்க வந்தபோது .
எனக்கு நம்ப முடியாத ஆச்சர்யம் அவரின் நோய் முற்றிலும் குணமாகி இருந்தது.

அனுபவத்தில் பல விஷயங்கள் நம்ப முடியாதவை.

பல நேரங்களில் ,எனது வழிக்காட்டி அவர்களை சிவதலங்களுக்கு அழைத்து சென்று அவர்களையும் சிவ அபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செய்து இருக்கிறேன்.

ஆன்மாக்கள் எங்கும் உலவும் எதிலும் உலவும்.  அவர்களால் தன்னிச்சையாக எந்தவொரு காரியத்தையும் செய்ய முடியாது. ஆகையால் தான் அவர்கள் மனிதர்களின் மூலம் பல நல்ல காரியங்களை செய்து அவர்களின் பாவங்களை குறைத்து கொள்கிறார்கள்.

இறந்து போன எல்லா ஆன்மாக்களும் நம்மிடம் பேசிக்கொண்டு தான் இருக்கின்றன ஆனால் அவர்கள் பேசுவதை நம்மால் தான் புரிந்து கொள்ள முடியவில்லை .

இதற்க்கு ஒரு சிறந்து உதாரணம் நாளைய பதிவில் காணலாம்.

என்றும்-சிவனடிமை-பாலா.

திங்கள், 2 மே, 2011

புண்ணிய ஆத்மாக்களின் தொடர்பு- அனுபவம் - 1

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

என்னகத்துள் என்னை நானெங்கு நாடி ஓடினேன்
என்னகத்துள் என்னை நானறிந்திலாத தாகையால்
என்னகத்துள் என்னை நானறிந்ததுமே தெரிந்தபின்
என்னகத்துள் என்னையன்றி யாது மொன்றுமில்லையே....

எளிமையான இந்த பாடல் எனது வாழ்க்கை காட்டி சிவவாக்கியரின் பாடல் ஆகும். இந்த பாடலுக்கான விளக்கம் எனது இந்த அனுபவித்தில் உள்ளது . 

சாப்பாடுக்கே கஷ்டப்பட்ட நேரத்தில் தான் எனக்கு ஆவிகளுடன் பேச வேண்டும் என்ற எண்ணமும்  அதன் மூலம் ஒரு நல்ல சேவையை(எதிர்காலத்தில்) மக்களுக்கு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த கலையை கற்றுக்கொள்ள அந்த ஆதி சித்தன் -திருவேட்டீஸ்வரின் பாதங்களை பிடித்து கொண்டு அழுதேன் . அதற்குரிய நாளும் வந்தது , அதற்க்கான விளம்பரத்தை பார்த்து அதை சொல்லிகொடுப்பவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது , வாருங்கள் கற்று தருகிறோம் , கட்டணம் ரூபாய் 300  என்று கூறினார்கள்.

கையில் பணம் சுத்தமாக இல்லை , என் நண்பன் ராமுவிடம் கடனாக பணத்தை வாங்கி  கொண்டு அந்த நபரை சந்தித்தேன் . அவர் பெயர் அரிசி ஸ்ரீராம். அவர் ஒரு நாத்திகவாதி அதே வேலை நல்ல குணவாதியும் கூட  ,அவர்  முதுகலை படிப்பில் இரண்டு தங்கபதக்கம்   வாங்கியவர்.

அவரின் அறிமுகம் கிடைத்தவுடன், நான் ஒரு  அறைக்கு  அழைத்து  செல்லப்பட்டேன்.  அங்கு என்னைப்போல் இரண்டு  மாணவர்களும்  ஒரு மாணவியும் இருந்தார்கள் , மொத்தமாக ஐந்து நபர்கள் மட்டும் அங்கு இருந்தோம்.

நான் எனது டைரியை கொண்டு போயிருந்தேன் . எனக்கு முதலில் ஆதி சித்தனின் மந்திரம் அங்கு தான் தீட்சையாக தரப்பட்டது . அப்பொழுதுதான் எனக்கு தமிழ் மந்திரத்தின் மகிமை புரிய ஆரம்பித்தது . இரண்டாவதாக
தமிழ் கடவுளாம் முருக பெருமானின் மந்திரம் தீட்சை தரப்பட்டது .
மூன்றாவதாக புண்ணிய ஆத்மாக்களை அழைக்கும் மந்திரம் தீட்சையாக தரப்பட்டது .

மேற்கூறிய மந்திரங்களை மூன்று முறை கூறியதும் , என் கையில் ஒருவித சக்தி பாய்ந்தது. எனக்கு சுய நினைவு இருக்கிறது ஆனால் , என் மனதில் எண்ணற்ற எண்ணங்கள் ஓட ஆரம்பித்தது . எனது கையை யாரோ இயக்குவதாக உணர ஆரம்பித்தேன் .  எனது டைரியில் முதலில் எழுத்துகள் சரிவர வரவில்லை ஏதோ சிறுப்பிள்ளை 
கிறுக்குவது போல்  இருந்தது .

கொஞ்ச நேரம் கழித்து ,என்னுடன் இருந்தவர் ஒரு 12  கேள்விகளை கேட்டார். அவர் கேட்க கேட்க பதில் தானாக  வந்தது.  இறுதியில் சில சத்திய
பிரமாணங்கள் செய்ய சொல்லி எனக்கு வழிகாட்டியாக இருக்குமாறு வினவினார்கள் அதற்க்கு அந்த ஆத்மா சரி என்று சொல்லி சத்தியம் செய்தது .

எல்லாருக்கும் ஒரே ஆச்சர்யம் ,ஏனெனில் இந்த கலையை அவ்வளவு எளிதாக யாரும் கற்று கொள்ள முடியாது . அந்த ஆதி சித்தன் அருள் கொஞ்சமாவது வேண்டும் .

அதற்க்கு அப்புறமாக பல கேள்வி பதில்கள் எனக்கும் எனது வழிக்காட்டிக்கும் நடைபெற்றது.  இதனை சுருக்கமாக சொல்லப்போனால்
இன்டர்நெட்டில் நாம் எப்படி சாட் செய்கிறோமோ அதைபோலவே இருக்கும்.

ஒரு மணி நேர வகுப்புக்கு பிறகு , என்னை சோதிக்க அங்குள்ளவர்கள் விரும்பினார்கள், அப்போது அங்கு வந்த ஒரு நபரின் குடும்பத்தையும். அவருக்கு உள்ள நோயினையும் ,எவ்வளவு நாளாக அந்த நோய் உள்ளது என்றும் கேட்டார்கள் . எனது வழிக்காட்டியின் பதில் மிக துல்லியமாக இருந்தது ,அதனைக்கேட்டு எல்லாரும் என்னை பாரட்டினார்கள்.

அங்குள்ள ஒவ்வொருவரின் முகத்தினைப் பார்த்து அவர்களின் குண நலன்கள் அவர்களின் மன ஓட்டம் ,வந்த காரியம் ஆகியவற்றை கூறினேன்.

எனக்கு சொன்ன கட்டளை , இந்த பயிற்சியை குறைந்தது இரண்டு வருடங்கள் கற்ற பிறகு உன் அருள்வாக்கு வித்தையை தொடரு என்று.

ஏனெனில் வழிக்காட்டிக்கு  நமது மீது முழு நம்பிக்கை வரவேண்டும். வழிக்காட்டி இல்லையென்றால் நம்மால் ஒன்றும் சொல்லமுடியாது.

இளங்கன்று பயமறியாது போல ,இதனை கற்று கொண்டு செய்த சில விசயங்களை பகிர்ந்து கொள்கிறேன்.

ஆசை அறுபது நாள் ,மோகம் முப்பது நாள்  போல இந்த வித்தையின்  மேலும் வெறுப்புற்று இந்த தொடர்பினை துண்டித்து ஏறக்குறை 8  ஆண்டுகள் ஆகிவிட்டது .

இங்கு எனது அனுபவங்கள் தான் கூறபடுகிறது . எந்த வித கட்டுகதையோ, கற்பனையோ அல்ல என்பதனை தெளிவு பட கூறுகிறேன்.


என்றும்-சிவனடிமை-பாலா.