அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,
எனது கணினியில் தமிழ் மொழி மாற்றி சரிவர வேலை செய்யவில்லை .ஆகையால் என்னால் யாருக்கும் பின்னூட்டங்களையும் மற்றும் பதிவுகளையும் பதிவு செய்யமுடியவில்லை.
பட்டினத்து அடிகளின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக்கொள்ள இருக்கும் ஆன்மிக படிகளை இன்று காண்போம்.
கடந்த பதிவில் பதித்த பாடலில் எழுத்துபிழை உள்ளதென்று சுட்டிக்காட்டிய ஐயா ஜானகி ராமனுக்கு எனது மனதார நன்றிகள்.
"எல்லாப்பிழையும் பொருத்தருள் வாய்கச்சி ஏகம்பனே .."
யோகம் மற்றும் கிரியை என்றால் என்ன என்று இன்றைய பதிவில் காண்போம்.
யோகம் என்றால் யோகாசனம் என்று எல்லாரும் நினைத்து கொள்கிறார்கள் அது முற்றிலும் தவறு ஆகும். யோகத்தினால் நமக்கு என்ன நன்மை என்று முதலில் நாம் உணரவேண்டும்.
பொதுவாக நாம் வழிபடும் சித்தர்களும் மற்றும் முனிகளும், கடவுள்களும் பொதுவாக ஒரு ஆசனத்தில் அமர்ந்து தான் மக்களுக்கு ஆசி வழங்குவது போல் சித்தரிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
குருமுனி அகத்தியர் அமர்ந்து இருக்கும் ஆசனம் சித்த ஆசனம் என்று கூறுகிறார்கள் . பதஞ்சலி முனிவர் அமர்ந்து இருக்கும் ஆசனம் பத்மாசனம் என்று கூறுகிறார்கள். இது போன்ற ஆசனங்கள் எல்லாம் அவர்களை மேல்நிலைக்கு கொண்டு சென்ற ஆசனங்கள் ஆகும். இதனை குருவருளின் துணைகொண்டு நாமும் பயின்று வந்தால் நமது வாழ்க்கையும் அவர்களின் வாழ்க்கையை போல் மேம்படும்.
யோகம் என்பது ஒழுக்கம் ஆகும். மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று தத்துவத்தை நமது மூதாதையர்கள் அருமையாக சொல்லிவிட்டு சென்றுவிட்டார்கள் . எல்லாரும் எல்லாவித ஆசனங்களை செய்து கொண்டு தான் வருகிறார்கள் . பொதுவாக கோவிலுக்கு சென்று வந்தால்
அங்கு மக்கள் வழிபடும் எல்லா முறைகளும் ஆசன முறைகள் தான்.
இறைவனை எப்படி வழிபடுவது என்று முறையை நமது முன்னோர்கள் கோவில் என்ற மாபெரும் வெளிபொருளில் வைத்து அதன் மூலம் உள்ளத்தையும் உடலையும் நன்கு வளர்த்து வந்தார்கள் . உண்மையான தத்துவத்தை உணர்ந்த பின் அவர்கள் தம்முடைய உடலுக்கு தேவையான ஆசனத்தை மேற்கொண்டு ஞானத்தை அடைகிறார்கள்.
கடவுள் படைத்த இந்த உடல் ஒரு மாபெரும் சக்தி வாய்ந்த பொக்கிஷம் ஆகும். யோகத்தில் கூறும் இறுதி நிலை என்பது சமாதி ஆகும்.
சமாதி என்றால்..
சமம் + ஆதி = சமாதி .
ஆதியை உணர்ந்தவர்கள் மட்டுமே சமாதி நிலையை அடைய முடியும் .
எல்லாரும் ஒவ்வொரு நிலையாக தான் கடந்த இந்த நிலையை அடைய முடியும். ஆனால் இதற்க்கு சித்தர்கள் முற்றிலும் மாறுப்பட்டவர்கள் . அவர்கள் போகும் பாதையே வித்தியாசமாக இருக்கும்.
எந்தவித விருப்பு வெறுப்பின்றி ,இறைவன் கொடுத்த இந்த வாழ்க்கையை சந்தோசமாக ஏற்றுகொண்டு யாருக்கும் தீங்கு செய்யாமல் வாழ்ந்தாலே அவனை ஒரு யோகி என்றே கூறலாம்.
யோகாசனம் என்பது நாம் வாழும் இந்த உடலுக்கு மட்டும் தான் .
யோகம் என்பது நாம் வாழும் இந்த வாழ்க்கைக்கு தான் என்று பொருள் கொள்ளவேண்டும்.
மேற்கூறியது போல் பட்டினத்து அடிகளாரின் வாழ்வில் அவர் யாருக்கும் தீங்கு செய்ததாக நம்மால் எங்கும் காண முடியவில்லை .
தொடரும்...
என்றும்-சிவனடிமை-பாலா.
இந்த ஜீவாத்மாவின் ஜீவ சமாதியை தரிசிக்க எண்ணி உள்ளேன் பரம்பொருளே அருள் புரிய வேண்டும்
பதிலளிநீக்குதிருவொற்றியூர் உள்ளதாக தகவல்களை படித்துள்ளேன் வழி தெரியாத எனக்கு பட்டினத்தார் வழிகாட்டி தரிசனம் தந்தருள்வார் என்றே நினைக்கிறன் அவனின் எண்ணம் என்னவோ
அன்புள்ள சிவனருள் ஐயா ,
பதிலளிநீக்கு//திருவொற்றியூர் உள்ளதாக தகவல்களை படித்துள்ளேன் வழி தெரியாத எனக்கு பட்டினத்தார் வழிகாட்டி தரிசனம் தந்தருள்வார்//
நிச்சயம் தருவார். அவரின் ஜீவ சமாதி திருவொற்றியூரில் தான் உள்ளது. நீங்கள் தேரடி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி கொண்டு அங்கிருந்து ஐந்து நிமிட நடைபயணத்தில் அவரின் ஜீவ சமாதி உள்ள இடத்தை அடையலாம்.
ஆலயம் மதியம் 12 வரையிலும் திறந்து இருக்கும். பின் மாலை 4 மணிமுதல் 7 மணிவரை திறந்து இருக்கும்.
என்றும்-சிவனடிமை-பாலா.
யோகம் என்பதற்கு அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள்.
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி...
http://anubhudhi.blogspot.com/