வியாழன், 5 மே, 2011

புண்ணிய ஆத்மாக்களின் தொடர்பில் விளைந்தவை....

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

ராமகிருஷ்ண பரஹம்சர் இறந்தபிறகு , அவரின் துக்கம் தாங்க இயலாமல்
சாரதா தேவி அம்மையார் தற்கொலை முயற்சி செய்யும் பொது அவர் அம்மையாரிடம் பின்வருமாறு  பேசியதாக ஒரு புத்தகத்தில் படித்தேன்.

தேவி நான் இந்த உடலை தான் உதறி இருக்கிறேன், என் ஆத்மாவை   இல்லை. இந்த உடல் அழியக்கூடியது ஆனால் இந்த ஆத்மா அழிவற்றது .
இதுபோன்ற காரியங்களை இனி செய்ய கூடாது என்று கூறினார்.

உதாராணத்திருக்கு நாம் ரேடியோவை  எடுத்துக்கொள்வோம்.  நாம் சரியான அலைவரிசையை தேர்ந்து எடுத்து நிகழ்சிகளை கேட்டு மகிழ்கிறோம் . அதுப்போல் புண்ணிய ஆத்மாக்களின் தரவரிசையை அறிந்துகொண்டு அவர்களின் மூலம் பல விசயங்களை தெரிந்து கொள்ளலாம் . 

சித்தர்களின் அலைவரிசை ரொம்ப அதிகம், ஒரு வேலை நமக்கு அதிர்ஷ்டம் இருந்து நமது அலைவரிசையும் அவர்களின் அலைவரிசையும் ஒத்துபோனால் பல வித அதிசயங்களை நம்மால் பண்ண முடியும்.

எனக்கு இந்த கலையை  கற்றுகொடுத்தவரின் வழிகாட்டி ஒரு சித்தர் ஆவார்.
  
இந்த கலையை கற்றுக்கொண்டு ,என்னால் முடிந்தவரை பலருக்கு நன்மையை செய்திருக்கிறேன்.

அவற்றில் சில ,

தொலைந்துபோன தங்க தோடு,மூக்குத்தி கண்டுபிடித்தல் .

குழந்தை இல்லாதவர்களுக்கு அதற்க்கான பரிகாரமுறையை கூறுதல்.

எல்லாவித நோய்களை குணபடுத்துதல்.

வேலை வாய்ப்பினை கூறுதல் -என் நண்பர்கள் அனைவருக்கும் இதன் மூலம் கணித்து வேலையே வாங்கி கொண்டார்கள்.

இறந்தவர்களின் வீட்டிருக்கு சென்று அவர்களின் கடைசி ஆசையை கேட்டு அதனை நிறைவேற்றுதல்.  -- இது ரொம்ப கஷ்டமாக இருக்கும். ஏனெனில் இறந்த ஆத்மா ரொம்ப ஆக்ரோசமாக இருக்கும்.

பூர்விக ஜென்மத்தை உணரசெய்தல் -- சிலர் புலம்புவாங்க நமக்கு மட்டும் ஏன் இது மாதிரி நடக்கிறது என்று. அதற்க்கான விளக்கத்தை கூறி அவர்களை நல்வழிப்படுத்துதல் .

இவைகள் எல்லாம் இரண்டு ஆண்டுகள் மட்டுமே என்னால் செய்ய முடிந்தது . பின் என் குல தெய்வம் ஆணைக்கேற்ப இதனை விட்டு விட்டேன்.

இதன் மூலம் எனக்கு எந்தவொரு நன்மை ஒன்றும் ஏற்படவில்லை .என்னை சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும்.
எனக்கு எந்தவொரு வருமானமும் இல்லை .ஏனெனில் இதனைக்கற்றுகொள்ளும்போது அந்த ஆதி சித்தனக்கும்  எனக்கும் உள்ள ஒரு உடன்படிக்கை , இதன் மூலம் வரும் பணத்தை நான் எனக்காக எடுக்க மாட்டேன் என்பது தான். அனைத்து பணமும் அன்னதானத்திருக்கு தான்
உபயோகபயன்பட்டது .

இதன் மூலம் குடும்பத்தில் நிம்மதி குறைவு. குடும்பத்திற்கு என்று எதுவும் என்னால் சம்பாதிக்க முடியவில்லை.  சொல்ல போனால் குடும்பத்தை பற்றி சிந்தனை செயும் அளவுக்கு 
எனக்கு நேரம் இல்லை.

இதன் மூலம் எனக்கு கடன் பிரச்சனை தான் அதிகமாக இருந்தது.
எல்லாருடைய பிரச்சனையும் நம்மால் தீர்க்க முடியும் . நம்ம பிரச்சனை
யார் தான் தீர்ப்பார்.

இதன் மூலம் என் காதலிலும் எனக்கு பிரச்சனை , ஏனென்றால் எந்த பெண்ணையும்  ஒரு முறை உற்றுப்பார்த்தால் அவர்களின் வாழ்க்கையில் நடந்த அத்தனை விசயமும் நமக்கு தெரிந்து விடும்.  இதனை நாம் அவர்களிடம் சொன்னால் சில சமயம் நமக்கே ஆபத்தாக முடிந்து விடும்.
பல பெண்கள் ,இதன் மூலம் என்னிடம் பேசவே பயப்படுவார்கள் .

இதுப்போன்ற தேவையில்லாத காரணத்தால் நான் மனவேதனை அடைந்ததுண்டு .

இவ்வுலகில் உயிர் வாழ நாம் நன்கு சம்பாதிக்கவேண்டும் நல்ல முறையில்
சம்பாதிக்கவேண்டும் என்று எண்ணத்தில்  இந்த தொழிலை விட்டுவிட்டு .
நான் படித்த கம்ப்யூட்டர் துறையில் கவனத்தை செலுத்தி வேலையை வாங்கினேன்.

இருப்பினும் நான் கடந்து வந்த பாதையை நினைத்து பார்க்கும்போது 
இந்த நிகழ்வுகள் ஞாபகம் வந்தது .

அன்றும்,
இன்றும் புண்ணிய ஆத்மாக்கள் எனக்கு தக்க சமயத்தில் 
தாங்களாகவே  உதவி புரிந்து கொண்டு இருக்கிறார்கள் . 

வரும் நாள்களில் சித்தர்களின் பாடல்களை கொஞ்சம் பார்ப்போம் .

என்றும்-சிவனடிமை-பாலா.

5 கருத்துகள்:

  1. வணக்கம் பாலா அவர்களே,

    Feed Burner - ஐ இணைத்தமைக்கு மிக்க நன்றி.
    இதனால் பலரும் பயன் பெறுவர்.

    சித்தர்களின் முழக்கத்தில் - பதிவுகளைப் பெற - பதிவு செய்து விட்டேன்.

    சிவயசிவ - வில் தாங்கள் குறிப்பிட்ட

    //இருப்பினும் பரம் பொருளான அந்த ஈசனை புரிந்து கொண்டால் இந்த உலகமே சொர்க்க லோகமாக மாறும்.//

    என்னும் இக்கருத்தை மட்டும் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை..

    மிக்க நன்றி ஐயா..

    பதிலளிநீக்கு
  2. அன்புள்ள பாலா, இந்த விஷயங்களை நாமாக தேடி அலைந்து கற்றுக் கொண்டு வாழ்வதற்கும், தானே ஒரு கடமைபோல அமைவதற்கும் மிகப் பெரிய வேறுபாடு இருக்கிறது.

    உதாரணமாக இது பரம்பரையாக வரும்பொழுது மட்டுமே நமக்கு ஓரளவுக்கு உபயோகப்படும். இல்லாவிட்டால், இதனால் வரும் வருமானத்தால்/ ஆதாயத்தால் நமக்கு அழிவே.

    இதை மிக குறுகிய காலத்தில் தாங்கள் உணர்ந்து கொண்டு அதனை விட்டு விட்டதாக தெரிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    ஆனால், நானறிந்தவரை, இது ஒரு புலிவால் போல. பிடிக்க மட்டுமே முடியும். விட முடியாது. இந்த செயல்பாடுகளை குறைத்துக் கொள்ள மட்டுமே முடியும். இதன் தாக்கம் ஏதாவது ஒரு வகையில் நம் வாழ்நாள் முழுவது தொடரும். இது என் அனுபவம்.

    தங்களின் அனுபவங்களின் பகிர்வுக்கு நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    பதிலளிநீக்கு
  3. அன்புள்ள பாலா அவர்களுக்கு ,
    நான் உங்களிடம் பேச விரும்புகிறேன் தயவு செய்து எம்மை தொடர்பு கொள்ளவும்.
    அன்புடன்,
    பாலாஜி பாலாமடை

    பதிலளிநீக்கு
  4. சங்கர் குருசாமியின் கருத்து மிகசரியாக எனக்கு படுகிறது. அவ்வாறு பணம் சம்பாதிப்பவர்கள் மிக நலமாக இருகிறார்கள என்று பார்த்தால் சந்தேகமே

    பதிலளிநீக்கு