அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,
பட்டினத்து அடிகளின் வாழ்வில் யோகத்தை நாம் பார்த்து கொண்டு இருக்கிறோம். நேற்றைய தொடரில் கூறியது போல் , யோகசானம் நமது உடலை நன்கு பேணி காக்கும் ,யோகத்தில் ராஜயோகம் என்றும் ,கிரியா யோகம் என்றும் பல வகையில் பலர் இன்று சொல்லிகொடுத்து வருகிறார்கள்.
எல்லாராலும் கடினமான யோகாசனம் செய்யமுடியாது. நம்மால் முடிகிற ஆசனத்தில் அமர்ந்து கொண்டு அந்த சிவனை நினைத்துக்கொண்டு சும்மா இருந்தாலே போதும்.
எல்லாமும் கிடைக்கும் .எல்லாமும் என்றால் எல்லாமே தான்.
உலகில் சும்மா(அமைதியாய் ) இருப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை . அதனை சும்மா இருந்து பார்த்தால் தான் தெரியும்.
உலகில் எந்த யோகத்தை பயின்றாலும் இறுதியில் அது வந்து வாசி யோகத்தில் தான் முடியும்.
வாசி என்பது சிவா ஆகும்.
வாசி = சிவா .
வாசி என்பது சிவனை பூசிப்பது .எங்கு பூசிப்பது கோவிலிலா இல்லை நமது உள்ளத்திலா என்பது முதலில் நாம் உணர வேண்டும். சித்தர்கள் அனைத்தையும் மறைபொருளாகவே சொல்லிவிட்டு சென்றுவிட்டார்கள். நாம் எவ்வாறு கோவிலில் உள்ள சிவலிங்கத்தை பூசிக்கிறோமோ அதுபோல உள்ளத்தில் உள்ள அந்த ஈசனையும் பூசிக்கவேண்டும். அப்போது தான் நமக்கு ஞானம் என்ற அடுத்த படிக்கு முன்னேற முடியும்.
வாசியை எப்படி கற்றுகொள்ளவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலே போதும். குரு உங்களை தேடி நிச்சயம் வருவார். எனக்கு அதுபோன்ற நிகழ்வு ஏற்பட்டு தற்சமயம் தான் அதனை நான் கற்றுக்கொண்டு வருகிறேன்.
இறைவன் படைத்த இந்த உடல் தமக்கு தேவையான எல்லா ஆசனங்களையும் தானே செய்து கொள்கிறது. ஆனால் இது தான் அதுவென்று நமக்கு தெரிவதில்லை.
எல்லா யோகத்தின் முடிவும் வாசியில் தான் முடியும். அந்த வாசி லயத்தால் தான் சமாதியை அடைய முடியும். அந்த சமாதி நிலையை அடைந்தால் தான் முக்தி என்ற பிறவா நிலையை அடைய முடியும்.
பட்டினத்து அடிகளின் பாடலில் சில ...
சரியை கிரியா யோகம் தான் ஞானம் பாராமல்
பரிதி கண்ட மதியது போல பயன் அழிந்தேன் பூரணமே ..!
வித்தை கற்கும் ஆசையது விட்டொழியேன் என்குதே
சித்து கற்கும் ஆசை சிதையேனே என்குதே...
வாசிதனைப் பார்த்து மகிழ்ந்து உனைத்தான் போற்றாமல்
காசிவரை போய்த் திரிந்து கால் அலுத்தேன் பூரணமே...
தொடரும்...
என்றும்-சிவனடிமை-பாலா.
எளிய நடையில் அருமையான விளக்கங்கள்.
பதிலளிநீக்குவாசி என்பது எல்லோராலும் செய்ய முடியக்கூடியதா என்று தெரியவில்லை. சில உடல் உபாதைகள் உடையவர்கள் செய்ய தடை இருப்பதுபோல் தெரிகிறது.
பதிலளிநீக்குதற்காலத்தில் வாசி பற்றி நன்கு அறிந்தவர்கள் மிக அபூர்வமே. என்வே பெரும்பாலானோர் கற்பதற்கும் தடங்கல் இருக்கிறது.
இருந்தாலும் ஒருவரின் கற்கும் ஆர்வமும் விடா முயற்சியும் அவருக்கு என்றாவது ஞான மார்க்கம் காட்டும்.
அருமையான கருத்துக்கள். பகிர்வுக்கு நன்றி.
http://anubhudhi.blogspot.com/