வியாழன், 19 மே, 2011

பட்டினத்து அடிகளாரின் வாழ்வில் சரியை,கிரியை,யோகம் மற்றும் ஞானம்...

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,
பட்டினத்து அடிகளாரின் பாடல்கள் மிக எளிமையாகவும் அதே நேரம் உட்கருத்து பொருந்தியதாகவும்  இருக்கும் .  ஒரு மனிதன் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதற்கு அவரின் வாழ்க்கையே ஒரு சிறந்த உதாரணமாகும் .
செல்வம் உள்ளபோது மனிதனின்  நிலை எப்படி இருக்கும் ?
ஞானம் அடைந்த போது மனிதனின்  நிலை எப்படி இருக்கும் ?
இறுதியில் முத்தியை வேண்டி நிற்கும் போது மனிதனின்  நிலை எப்படி இருக்கும் ?
இது போன்ற நிகழ்வுகளை அவரின் பாடல்கள் மூலம் நாம் எளிதாக அறிய இயலும்.

சரியை , கிரியை, யோகம், ஞானம்  என்று எல்லாரும் சொல்வார்கள் . இது ஒரு ஏணியை போன்றது . ஒவ்வொரு படியாக தான் நாம் எறிவரவேண்டும். இதைப்பற்றி பலர் பலவிதமாக சொன்னாலும் எமக்கு தெரிந்த கருத்தினை இங்கு கூறுகிறேன்.

இந்த நான்கு நிலையையும் ஒவ்வொரு மனிதனும் தமது வாழ்கையில் கடந்தே வருகிறான். ஆனால் இது தான் அதுவென்று அவனுக்கு புரிவதில்லை. எந்தவொரு காரியத்தையும் புரிந்து பண்ணினால் அதற்க்குண்டான மகிழ்வே தனி தான்.

சரியை - உருவ வழிபாடு மூலம் இறைவனை அடைவது ...
             இங்கு உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் ஏதுனும் ஒரு வகையில் உருவத்தினை வழிபடுகிறார்கள் . உருவவழிபாடு இல்லாத மதம் எதுவும் இவ்வுலகில் இல்லை.
உதாரணமாக
இந்துக்கள் : சிவன், சக்தி, முருகன், .......
கிறிஸ்தவர்கள் : இயேசு ,மேரியம்மா ,அந்தோனியார்
முகமதியர்கள் : இவர்கள் உருவ வழிப்பாடு இல்லை என்று கூறுவார்கள் ஆனால் வானில் உள்ள பிறையை வழிபடுபவர்கள் மற்றும் ஏதுனும் ஒரு திசையை நோக்கி தான் வணங்குவார்கள் .

இதன் மூலம் அனைத்து மக்களும் ஏதுனும் ஒருவகையில் தமது வாழ்க்கையை உருவழிப்பாட்டில் தான் ஆரம்பிக்கிறார்கள் . இந்த நிகழ்வு பொதுவாக எல்லாருக்கு மழலை பருவத்தில் தான் ஆரம்பிக்கிறது .

கிரியை : மந்திரங்கள் மூலம் இறைவனை அடைவது ...
             எல்லா மதத்தினரும் பல வித மந்திரங்களை கொண்டு இறைவனை அடைய முயற்சி செய்க்கிறார்கள் . மனதின் திறம் அறிந்து அதனை வலுப்படுத்தவே மந்திரங்கள் தோன்றியது.
உதாரனத்திற்க்கு  இந்துகள் கூறும் மந்திரங்கள் அவர்களின் தாய் மொழியிலே அதிகமாக காணபடுகிறது . சமஸ்கிரதம் தெரிந்தவர்கள் அதன் மூலம் உச்சரித்து பயன் பெறுகிறார்கள் .
தமிழர்களோ இனிய தமிழ் மொழியிலே கோடிகணக்கில் பாடல்களை எழுதி இறைவனை வழிப்பட்டு அவரின் பாதங்களை அடைந்தார்கள் என்பதற்கு நாயன்மார்களும் , ஆழ்வார்களுமே
சாட்சியாகும் .

மனிதன் எப்போது துன்பத்தை அடைகிறானோ அப்போது தான் இறைவனை பற்றிய எண்ணம் அவன் மனதில் உருவாகும். துன்பம் வருகிறது என்றால் கடவுள் நமக்கு ஒரு படிப்பினையை தருகிறார் என்றே என்னவேண்டும் .அதைவிட்டுவிட்டு அவனை குறை கூற கூடாது .
வாழ்க்கையே துன்பம் என்றால் அதனை இன்பமாக மாற்றுவதற்கான  வழிமுறையை தேடவேண்டும் அதைவிட்டுவிட்டு கடவுள் அருள் செய்வார் என்று இருந்தால் எப்படி செய்வார்.
அவர் ஒருபோதும் சோம்பேறிகளுக்கு  துணை புரிய மாட்டார் . பொதுவாக சாமியார்களை சோம்பேறிகள் வேலை வெட்டி இல்லாமல் பிச்சை எடுத்து சந்தோசாமாக வாழ்ந்து கொண்டு வருகிறார்கள் என்ற எண்ணம் பரவலாக உள்ளது.  இது முற்றிலும் தவறு.
அவர்களின் நிலையில் இருந்து பார்த்தால் தான் அதன் அனுபவம் தெரியும்.


எனக்கும் பிச்சை எடுத்த அனுபவம் உண்டு வாழ்வில் மறக்க முடியாத அனுபவம் .அதுவும் சொந்த கிராமத்தில் காவியை அணிந்து கொண்டு ,கையில் அலுமினிய தட்டினை ஏந்திக்கொண்டு  வீடு வீடாக பிச்சை எடுத்த அனுபவம் எனக்கும் உண்டு...

சித்தர்களின் வாழ்வில் இந்த நான்கு நிகழ்வுகளும் கண்டிப்பாக நடைபெற்றுள்ளது. இந்த அனுபவித்தின் மூலம் தான் அவர்கள் தம்மை உணர்ந்து மக்களுக்கு சேவை செய்து மரணம் இல்லாத பெரு வாழ்க்கையை பெற்று இன்றும் வாழ்ந்து வருகிறார்கள் ..

தொடரும்....

என்றும்-சிவனடிமை-பாலா.

5 கருத்துகள்:

  1. வணக்கம் பாலா அவர்களே,

    “விரும்பும் சரியைமுதல் மெய்ஞ்ஞானம் நான்கும்
    அரும்பு மலர் காய் கனிபோல அன்றோ பராபரமே"

    என்று ‘தவராஜசிங்கம்' தாயுமானவர் அருளிச் செய்துள்ளார்.

    அத்தகைய நால்வகை மார்க்கங்களை பட்டினத்தாரோடு பொருத்திக் காட்ட துவங்கியருக்கிறீர்கள்.. மகிழ்ச்சியோடு எதிர்நோக்குகிறோம்..

    நன்றி..

    பதிலளிநீக்கு
  2. \\அதுவும் சொந்த கிராமத்தில் காவியை அணிந்து கொண்டு ,கையில் அலுமினிய தட்டினை ஏந்திக்கொண்டு வீடு வீடாக பிச்சை எடுத்த அனுபவம்\\

    நீங்கள் எழுதுவதில் நிறைய பொருள் உள்ளது

    பதிலளிநீக்கு
  3. ஆன்மீகத்தின் படிகளை அழகாக விளக்கி உள்ளீர்கள். வாழ்த்துகள். மேலும் விளக்கங்களை ஆவலுடன் எதிர் நோக்கி உள்ளோம்.

    நன்றி.

    http://anubhudhi.blogspot.com/

    பதிலளிநீக்கு
  4. ஆன்மீகப் படிகளின் விளக்கங்கள் தெளிவாக விளக்கிய பதிவுக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  5. "எனக்கும் பிச்சை எடுத்த அனுபவம் உண்டு வாழ்வில் மறக்க முடியாத அனுபவம் .அதுவும் சொந்த கிராமத்தில் காவியை அணிந்து கொண்டு ,கையில் அலுமினிய தட்டினை ஏந்திக்கொண்டு வீடு வீடாக பிச்சை எடுத்த அனுபவம் எனக்கும் உண்டு..."

    ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறதே உங்களில் இந்த வரிகள் விளக்கமாக சொல்ல முடியுமா?

    பதிலளிநீக்கு