வியாழன், 26 மே, 2011

பட்டினத்து அடிகளின் வாழ்வில் ஞானம்...

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,
இதுகாறும் யோகத்தை பார்த்து வந்த நமக்கு இன்று அடுத்த படியான ஞானம் என்ற நிலைக்கு செல்வோம்.

"கெட்டால் தான் அவன் ஞானி " -என்ற பழமொழியை நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம்.  இதனை நாம் எவ்வாறு எடுத்துக்கொள்ளவேண்டும்  என்றால் அனுபவங்களினால் மட்டும் தான் ஒருவன் ஞானி ஆக முடியும்.  ஒருவன் எல்லாவித கெட்ட பழக்கங்களை கொண்டு இருந்தால் அவன் ஞானியாக முடியாது.   உதாரணமாக கஞ்சா, மது, மாது...

"கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு "-என்று கூறுகிறோம் .இதனை நாம் எவ்வாறு எடுத்துக்கொள்ளவேண்டும் என்றால் அனுபவம் என்பது கற்பது என்று பொருள் கொள்ளவேண்டும்.  அனுபவத்தை எல்லாராலும் எளிதாக வாங்க முடியாது. அவன் அவன் விதித்த பாதையில் முறையாக சென்றாலே நல்ல அனுபவம் கிடைக்கும் .

"நதி மூலம் ,ரிஷி மூலம் பார்க்க கூடாது " -என்று கேள்வி பட்டு இருக்கிறோம் . இதனை நாம் எவ்வாறு எடுத்துக்கொள்ளவேண்டும் என்றால் அப்பொருளின் பயன் பாட்டினை கொண்டு அதனை வேண்டுமென்றால் எடுத்துகொள்ளலாம்.

உலகில் எல்லா மனிதர்களும் சரியை,கிரியை, யோகம்  என்ற மூன்று மார்க்கங்களையும் கடந்து வருகிறார்கள் .ஆனால் ஞானம் என்ற படியை பொதுவாக அவர்கள் தொடுவது கிடையாது. ஏனென்றால் அந்த நிலை வரும்போது அவர்களின் வயதும் அதிகரித்து விடுகிறது. தள்ளாத வயதில் ஞானம் கிடைக்கும் என்று எல்லாரும் நம்புகிறார்கள். ஒரு வேலை கிடைக்கலாம் ஆனால் அதனால் என்ன நன்மை கிடைக்கும் யாருக்கு கிடைக்கும் என்பதனை நாம் உணரவேண்டும்.

அனுபவகல்வியை சிலர் ஞானம் என்று கூறுவார்கள். அதுவும் கூட உண்மை தான் ஆனால் அது தொழில் சார்ந்த அனுபவமாக இருக்க கூடாது.

பொதுவாக அனைத்து சித்தர்களும் திருமணம் செய்து கொண்டு இல்வாழ்க்கையில் ஈடுபாடுகொண்டு அதேவேளையில் அந்த ஆதி சித்தனை பூசித்தும் ,பல இடங்களில் தரிசனம் செய்தும் , பலவகையான உழவார பணிகளை மேற்கொண்டும் இறுதியில் அவனை அடைந்து இருக்கிறார்கள்.  இதற்க்கு யாரும் விதி விளக்கல்ல . எல்லாராலும் இதனை செய்ய முடியும்.

நாமும் அவர்களைப் போல  தான் வாழ்ந்து வருகிறோம் ஆனால் இறைவனிடம் சென்று ஞானத்தை தவிர அனைத்தையும் கேட்டு வாங்கி கொள்கிறோம்.

கேட்டவுடனே ஞானம் கிடைக்குமா இல்லை கிடைத்தால் அதனை வைத்துக்கொண்டு நம்மால் தான் வாழ முடிமா ? . இதனைப் பின்பற்றுவதற்கு ரொம்ப கடினம் .

உதாரணத்திற்கு " நான் தான் கடவுள் "-என்று சொன்னால் இந்த உலகம் நம்மை என்ன சொல்லும். முதலில் இதனை நம்மால் தான் ஏற்றுக்கொள்ள முடியுமா ? முடியாது .
ஏனென்றால் அதற்க்கான பக்குவநிலை நம்மிடம் கிடையாது .

அப்பர் சுவாமிகள் இறந்து போன தன் பக்தனின்  பிள்ளைக்கு உயிர்கொடுத்து இந்த உலகில் சிவனின் பெருமையை நிலை நாட்டினார் . இந்த நிகழ்வினால் அப்பர் சுவாமிகள் கடவுளாக பார்க்கபடுகிறார் அவ்வளவு தான்.

ஏசு நாதர் மூன்று நாட்களுக்கு பிறகு உயிர்தெழுந்து வருகிறார். இதன் மூலம் அவர் பரமபிதாவின் மகன் என்ற தகுதியை பெறுகிறார்.

இதனைப்போல எண்ணிலடங்கா சித்தர்கள் இந்த புண்ணிய புவியில் இன்னும் இருந்து கொண்டு தமக்கு இடப்பட்ட பணிகளை செய்து வருகிறார்கள்.

ஆனால் அணைத்து சித்தர்களும் வாசியை கொண்டு தான் இந்த நிலையை அடைந்து இருக்கிறார்கள்.

"ஞானம் என்பது வெளியில் தேடுவது அல்ல.  அது பரவெளியை நோக்கி உள்ளே செல்வது" .

"அண்டத்தில் உள்ளது எல்லாம் பிண்டத்திலும் உள்ளது ".

கடந்து உள்ளே செல்ல செல்ல தான் உண்மையான அந்த ஆதியாய் உள்ள அந்த சித்தனை நாம் காண இயலும்.  அதற்க்கு முறையான முயற்சியும் ,பயிற்சியும் தேவை .

சிலர் ஞானத்தை தேடி எங்கெங்கோ செல்வார்கள் . இறுதியில் சிவனே என்று அமர்ந்து விடும்போது தான் அவர்களுக்கு அது எங்கு இருக்கும் என்று புலப்படும்.


பட்டினத்து அடிகள் இதற்க்கேற்றார்போல அனைத்து நிலைகளையும் கடந்து இறுதியில் ஞான நிலையை பெற்று திருவொற்றியூரில் பிறவா நிலையை அடைந்தவர்.

அவர் ஞானம் பெற்ற பிறகு பாடிய பாடல்கள் பூரண மாலை என்று அழைக்கப்பெறுகிறது  .

அவற்றில் சில உங்களுக்காக ....

நெற்றி விழியுடைய நிர்மல சதாசிவத்தைப்
புத்தியுடன் பாராமல் பொறி அழிந்தேன் பூரணமே!

உச்சி வெளியை உறுதியுடன் பாராமல்
அச்சமுடன் நானும் அறிவழிந்தேன் பூரணமே !


தொடரும்....
என்றும்-சிவனடிமை-பாலா.

2 கருத்துகள்:

  1. கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு "

    பதிலளிநீக்கு
  2. ஞானத்தைப் பற்றி அருமையான விளக்கங்கள்.

    பகிர்வுக்கு நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    பதிலளிநீக்கு