அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,
நேற்றைய பதிவில் சரியை மற்றும் கிரியை பார்த்தோம் .
பட்டினத்து அடிகள் சிவன் மீது தீவிர பக்தி உடையவர்.ஆகையால் தான் சிவனே அவருக்கு மகனாக அவதரித்ததாக வரலாறு உண்டு. இது உண்மையும் கூட . உண்மையிலே சிவனிடம் அன்பு கொண்ட எவரும் வாழ்வில் தோற்று போனதாக சரித்திரம் இல்லை.
உலக வாழ்வின் உண்மையை எடுத்து கூறுபவன்.
நிலையாமை எடுத்து கூறுபவன்.
அன்பின் திருவுருவம் என்று அவனை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். அதற்க்கு நமது வாழ்நாள் போதாது .
சிவனின் மீது பித்து கொண்டு கோவில் கோவிலாக சுற்றி திரிந்தவர் தான் இவர். சிவனே கதி என்று உலக வாழ்க்கையை துறந்து கோவணம் கட்டிக்கொண்டு வீதி வீதியாக திரிந்தவர்.
நம்முடைய சட்டையில் ஒரு சின்ன கிழியல் இருந்தால் கூட நாம் அதனை போட விரும்புவதில்லை . ஆனால் அவரோ ஒரு மிகப்பெரிய வைர வியாபாரி.
ஒருவன் ஞானத்தை அடையும் வழியை கண்டு கொண்டால் அவன் இந்த உலகபந்தங்களை கண்டு கொள்ளமாட்டான். உலகம் தான் அவனை கண்டு பயம் கொள்ளும். உலகம் என்றால் இயற்க்கை என்று விளக்கம்.
ஒருவன் ஞானத்தை அடையும் வழியை கண்டு கொண்டால் அவன் இந்த உலகபந்தங்களை கண்டு கொள்ளமாட்டான். உலகம் தான் அவனை கண்டு பயம் கொள்ளும். உலகம் என்றால் இயற்க்கை என்று விளக்கம்.
இங்கு சரியை என்பது அவர் சிவன் மீது கொண்ட பற்றினால் கோவிலுக்கு சென்று சிவலிங்கத்தை வழிபடுவது.
இங்கு கிரியை என்பது அவர் சிவன் மேல் கொண்ட பற்றினால் பாடிய பாடல்களும் அவர் கூறி வரும் மந்திரங்களும் ஆகும்.
அதற்க்கு தகுந்தாற்போல் உள்ள பாடல்களில் சிலவற்றைக் இங்கு காணலாம்.
நினைமின் மனனே ! நினைமின் மனனே
சிவபெருமானைச் செம்பொனம் பலவனை
நினைமின் மனனே ! நினைமின் மனனே
கல்லாப்பிழையுங் கருதாப்பிழையுங் கசிந்துருகி
நல்லாப்பிழையும் நினையாப் பிழையும் நின் அஞ்செழுத்தை
சொல்லாப் பிழையுந் துதியாப் பிழையுந் தொழாப் பிழையும்
எல்லாப்பிழையும் பொருத்தருள் வாய்கச்சி ஏகம்பனே ..
அடியார்க்கு எளியவர் அம்பலவாணர் அடிபணிந்தால்
மடியாமல் செல்வ வரம் பெறலாம் , வையம் எழளந்த
நெடியோனும் வேதனுங் காணாத நித்த நிமலன் அருள்
குடிகானும் நாங்கள் ! அவர் காணும் எங்கள் குலதெய்வமே..
அத்தனை முப்பத்து முக்கோடி தேவர்க் கதிபதியை
நித்தனை அம்மை சிவகாம சுந்தரி நேசனை எம்
கத்தனை பொன்னம்பலத்தாடும் ஐயனைக் காணக்கண்
எத்தனை ......
என்றும்-சிவனடிமை-பாலா.
நல்ல கருத்துகள் பாலா அவர்களே,
பதிலளிநீக்குபாடல்களில் எழுத்துப் பிழை உள்ளது.. தயவு செய்து
கவனமாக அச்சிட வேண்டுகிறேன்.
பிழைபடின் பொறுத்தருள்க.
நன்றி..
http://sivaayasivaa.blogspot.com
சிவனை சிந்தித்தோர் கைவிடப்படார்...
பதிலளிநீக்குஅருமையான கருத்துகள். பகிர்வுக்கு நன்றி.
http:/anubhudhi.blogspot.com/