திங்கள், 30 மே, 2011

பட்டினத்து அடிகளின் பூரணமாலை ->1 - 10 .

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

பட்டினத்து அடிகள் ஞானம் அடைந்த பிறகு தாம் வந்த பாதை எத்தகையது என்பதனை
மற்றவர்களும் உணர்ந்து வாழ்க்கையின் பேரின்பத்தை அடையவேண்டும் என்ற மிகப்பெரிய
சிந்தனையால் தோன்றியது தான் இந்த பூரணமாலை ஆகும்.

இதற்க்கு நான் எந்தவொரு நூலினையும் துணைக்கு வைத்து கொள்ளாமல் அவரே துணை என்று இதனை எழுத ஆரம்பிக்கிறேன்.  முடிந்தவரை என்னால் இயன்ற  விளக்கம் தருகிறேன் .தவறு இருப்பின் அதனை சுட்டி காட்டவும்.


1 . மூலத்து உதித்தெழுந்த முக்கோணச் சக்கரத்துள்
     வாலைதனைப்  போற்றாமல் மதிமறந்தேன் பூரணமே !

2 . உந்திகமலத்து உதித்து நின்ற பிருமாவைச்
    சந்தித்து காணமல் தட்டழிந்தேன் பூரணமே !

3 . நாபிக் கமல நடுநெடுமால் காணாமல்
    ஆவிகெட்டு யானும் அறிவழிந்தேன் பூரணமே!

4 . உருத்திரனை இருதயத்தில் உண்மையுடன் பாராமல்
     கருத்தழிந்து நானும் கலங்கினேன் பூரணமே !

5  . விசுத்தி மகேசுவரனை விழி திறந்து பாராமல்
      பசித்துருகி நெஞ்சம் பதறினேன் பூரணமே !

6 . நெற்றி விழியுடைய நிர்மல சதாசிவத்தைப்
      புத்தியுடன் பாராமல் பொறி அழிந்தேன் பூரணமே !

7 . நாதவிந்து தன்னை நயமுடனே பாராமல்
     போதம் மயங்கிப் பொறி அழிந்தேன் பூரணமே !

8 . உச்சி வெளியை உறுதியுடன் பாராமல்
     அச்சமுடன் நானும் அறிவழிந்தேன் பூரணமே !

9 . மூக்கு முனையை முழித்திருந்து பாராமல்
    ஆக்கைகெட்டு நானும் அறிவழிந்தேன் பூரணமே !

10 . இடைபிங் கலையின் இயல்பறிய மாட்டாமல்
     தடையுடனே யானும் தயங்கினேன்  பூரணமே !


விளக்கம்: 
 
மேற்கண்ட பத்து பாடல்களும் நமது உடலில் உள்ள ஆறு ஆதாரங்களைப்  பற்றியும் அதற்க்கு மேல் உள்ள சக்தி கலங்களையும் கூறுகிறது.

தியான சக்தியின் மூலம் தான் ஞான சக்தியினை நாம் அடைய முடியும் . பட்டினத்து அடிகளுக்கு குருவென்று யாரும் கிடையாது அப்படி இருக்க அவருக்கு எப்படி இதுபோன்ற அனுபவங்கள்
கிடைத்தது என்பதனை நாளைய பதிவில் அறியலாம்.



என்றும்-சிவனடிமை-பாலா.

2 கருத்துகள்:

  1. மிக அருமையான பாடல்கள். தியானத்தில் தெளிய வேண்டியவற்றை பற்றி அருமையாக விளக்கி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    http://anubhudhi.blogspot.com/

    பதிலளிநீக்கு
  2. ஆழ்ந்த விளக்கங்களுக்குப் பாராட்டுக்க்ள்.

    பதிலளிநீக்கு