வெள்ளி, 29 ஏப்ரல், 2011

ஊமை சாமியாரின் அருள்வாக்கு தொடர்ச்சி ...

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

நேற்றைய தொடர்ச்சி ,

சாமியார் ரொம்ப கோபமாக பக்கத்து கடையில் உட்கார்ந்து இருந்தார் .
அன்றைக்கு நான் சென்னைக்கு போக வேண்டிய காரணத்தினால் எப்படியும் அந்த சாமியாரை பார்த்தே ஆகவேண்டும் என்ற கொள்கையில் அங்கே இருந்தேன் .

அங்கு இருந்த ஒரு அன்பர், தம்பி கொஞ்ச நேரம் இங்கே இரு ,எப்படியும் சாமியார் சாதாரண நிலைக்கு வருவார். அதற்க்கு அப்புறமா நான் உனக்கு பரிந்துரை செய்கிறேன் என்று கூறினார்.

எனக்கு ஒரே சந்தேகம் ,இந்த சாமியாரை பார்க்க கூட பரிந்துரை தேவைபடுதே என்று ரொம்ப வேதனை பட்டேன். இருப்பினும் அவரின் பரிந்துரையை நான் ஏற்றுக்கொள்ளவில்லை . மனதில் என் தாய் சமயபுரத்து அம்மனை நினைத்து
"ஒம் சமயபுர மாரியம்மனே போற்றி "" என்று வேண்டிக்கொண்டு இருந்தேன் .
நான் வேண்டிக்கொண்டு இருக்கும்போது அந்த சாமியார் ரொம்ப கோபமாக இருந்தார் . நான் மனதில் பிரார்த்தினை செய்ய செய்ய அவரின் கோப முகம் கொஞ்சம் கொஞ்சம் மாறியது .

என்னைப்பார்த்து சிரித்து கொண்டு இங்கே வா என்று புன்முறுவலாக அழைத்தார் . எனக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது . நம்ம அவருக்கு அருள்வாக்கு கூற வேண்டும் என நினைத்தால் அவரே நம்மை கூப்பிடுகிறார் .

என்னிடம் உள்ள நோட் புக்கினை  வாங்கி கொண்டு, என்னைப்பற்றி எழுத ஆரம்பித்தார் ,என்னுடைய குடுமபத்தினை பற்றியும் , உடன் பிறந்தோர் பற்றியும் அழகாக எழுதினார் .

அவர் எழுதிய வரிகளில் சில ,

என்னைப்போல் உன்னிடம் ஞானசக்தி உள்ளது , வரும் வேளையில் அது உனக்கு வந்தே சேரும், இப்போது இதுப்போன்ற முயற்சியில் ஈடுபடாதே .
பெண்களிடம் சேர்க்கை கொள்ளாதே அது உன்னை வேறு பாதையில் அழைத்து செல்லும் .உன்னை உணரும் காலம் வரும்போது அனைத்தும் உனக்கு தெளிப்படும் .

இன்று நீ சென்னைக்கு செல்கிறாய் ,போகும் காரியம் ஜெயம் என்று எழுதி என்னை ஆச்சரயப்படுத்தினார் .

அவர் மேல் இருந்த கோபம் எல்லாம் மாறி அவரின் மேல் எனக்கு ஒரு நம்பிக்கை ஏற்பட்டது .

நம்ப முடியாத ஆச்சர்யம் . இந்த நிகழ்ச்சி தான் பிற்காலத்தில் நான் அருள்வாக்கு கூறும் போது அடிகடி நினைத்து பார்ப்பது .

உட்கார்ந்து இருக்கும் மனிதர்களின் மன ஓட்டத்தினை அறிவது ரொம்ப எளிமையான விஷயம். ஆனால் அதனால் நமது மனது ரொம்ப கஷ்டப்படும் .
பலருடைய மன ஓட்டங்களை அறிவதால் தேவை இல்லாமல் நமது மனமும் அதையே சிந்தித்து கொண்டு இருக்கும்.

அருள்வாக்கு என்ற பேரில் பலர் இன்றும் பணம் சம்பாதிக்கிறார்கள் . உண்மையிலே இது என்னைப்பொருத்து வரை ஒருவகையான இயற்க்கை விதி மீறலே ஆகும்.

ஒருவரின் குண நலனை தெரிந்து கொண்டு அவரிடம் முடிந்த வரை பணத்தை கறந்துகொள்ளும் பல ஜீவன்கள் இந்த பூமியில் உண்டு.

பரிகாரம் என்ற பெயரில் பலரின் வாழ்க்கை அழித்தவர்கள் பலரும் உண்டு .

இறைவன் படைத்த இந்த மானுடல் அதற்கென்று விதிக்கப்பட்ட பலாபலன்களை அனுபவித்து தான் ஆகவேண்டும் .  அதன் சூட்சமத்தை உணர்ந்து மதியால் விதியை வெல்லலாம்.

விதி என்பது நம்ம செய்த தவறோ அல்லது மூதாதையர்கள் செய்த தவறோ அதனால் இந்த பிறவியில் ஏற்படும் அனுபவங்கள் தான் .
அனுபவங்களை புரிந்து  கொண்டு அந்த தவறுக்கான விளக்கதை தெரிந்து  கொள்வது தான் பரிகாரம் ஆகும் .

மனதால் வருந்தி தம்மை திருத்தி கொள்ளாமல் பணத்தால் பரிகாரத்தை செய்வது அழகல்ல .

இதுபோன்ற சில அனுபவங்கள் மறக்க முடியாதவை .

நான் இந்த கலையை கற்றுக்கொண்டு செய்த சில மறக்க முடியாத  அனுபவங்களை பகிர்ந்து  கொள்கிறேன்.

என்றும்-சிவனடிமை-பாலா.

புதன், 27 ஏப்ரல், 2011

ஊமை சாமியாரின் அருள்வாக்கு .

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

எனது முதல் அனுபவம் ,

எங்கள் கிராமத்திற்கு ஒரு ஊமை சாமியார் வந்து தங்கி அருள்வாக்கு கூறிவந்தார்  . அவரால பேச முடியாது அதனால அவர பார்க்க போறவங்க எல்லாம் கையில் ஒரு நோட் புக் எடுத்துட்டு தான் போக வேண்டும் . 
சில சமயம் உடனே அருள்வாக்கு சொல்ல மாட்டார், அடுத்த வாரம் வாங்க என்று கூறிவிடுவார்.
அவர் சமயபுரம் மாரியம்மன் பக்தர், அம்மா வந்து அவர் உடலில் இறங்கியதும் ,
அங்குள்ள பக்தர்களை பார்த்து யாருக்கு அருள்வாக்கு கூறவேண்டும் என்று அவருக்கு உத்தரவு வந்ததோ அவர்களை  கூப்பிட்டு அவர்கள் கொண்டு வந்த நோட் புக் -ல் அவர்களின் வம்சம் முதல் தற்சமயம் உள்ள பிரச்சனை வரையும் தெள்ள தெளிவாக எழுதி கொடுப்பார் .நம்ம முடியாத ஆச்சர்யமாக எல்லாருக்கும்  இருந்தது .

நாளடைவில் அவரைப்பார்க்க கூட்டம் அலை மோதியது.  முன்னால் உட்கார்ந்து இருக்கும் நபரின் முகத்தினை பார்த்தே எல்லா விசயங்களையும் கூறுவதால் அவரின் புகழ் எங்கும் பரவியது . ஜாதகம் இல்லாமலே ,துல்லியாமாக கணிப்பதால் அவரை பார்க்க போக வேண்டும் என்று எனது உள் மனது துடித்தது .

அதற்க்கான நாளும் வந்ததது , என் கையில் ஒரு நோட் புக் எடுத்து கொண்டு அவரை பார்க்க சென்றேன் . ஏறக்குறைய ஒரு மணி நேரம் உட்கார்ந்து இருந்தேன் . பின் என்னை பார்த்து விட்டு ,அடுத்த வாரம் புதன் கிழமை வாங்க என்று எனது நோட் புக் -ல் எழுதிவிட்டார் . எனக்கு ஒரே ஏமாற்றம் . இருப்பினும் அடுத்த வாரம் புதன் கிழமைக்காக காத்து இருந்தேன் . 

என் நண்பன் ஒருவன் இதனை கேள்விப்பட்டு நானும் அவரைப்பார்க்கவேனும்  என்று ஒரே அடம்பிடித்தான் . சரி இருவரும் சேர்ந்து போகாலாம் என்று முடிவெடுத்து அவரைப்பார்க்க சென்றோம் . அந்த வேளையில் என் நண்பன் அருகில் இருந்த மது கடைக்கு சென்று ஒரு பீர் குடித்து விட்டு வந்தான்.
இது எனக்கு தெரியவில்லை ,நான் நினைத்தேன் அவன் டீ கடைக்கு போகிறான் என்று ,ஆனால் அவன் போன கடையோ அவன் வந்த பிறகு தான் தெரிந்தது .

அன்று நல்ல கூட்டம் ,நிறைய பெண்களும் வந்து இருந்தார்கள்  . சாமியார்கள் என்றாலே கிராம புறத்தில் பெண்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். இதற்க்கு எங்கள் வூரும் விதி விலக்கல்ல .

பொதுவாக அந்த சாமியார் ஊமை என்பதால் மெளனமாக தான் இருப்பார். யாரிடம் கோபமாக நடந்து கொள்ளமாட்டார் .ரொம்ப அமைதி அவர் கோபப்பட்டு  பார்ப்பதே அபூர்வம் . அப்படி உள்ள சாமியார் நாங்கள் இருவரும் உள்ளே நுழைந்தவுடன் , மிகவும் டென்ஷன் ஆகி விட்டார் . ஒரே கூச்சல் குழப்பம் அங்கு நீடித்தது . எங்களுக்கு ஒன்றும் புரிவில்லை என்ன நடக்குது என்று.

உள்ளே அமர்ந்து இருந்த  பெண்கள் எல்லாம் அவரின் கோர தாண்டவத்தைப் பார்த்து பயந்து அங்கு இருந்து ஓடிவிட்டார்கள் . உடனே அவரின் சீடர்கள் ஓடி வந்து எங்களைப்பார்த்து ,அம்மா ஆக்ரோசமாக இருக்காங்க ,இப்ப யாரையும் பார்க்க முடியாது, முதலில் இந்த இடத்த விட்டு போங்க என்று எங்களைப்பார்த்து சொன்னார்கள்.  

என் நண்பனைப்பார்த்து அவர் மிகவும் முறைத்து முடிந்த வரை கோபமாக ,ஆவேசமாக முடிந்த வரை திட்டினார் என்றே சொல்லலாம் , ஊமைகள் பேசும் பாஷைகள் நமக்கு புரியாது . அவரின் சீடர்கள் எங்களிடம் யாரோ குடித்துவிட்டு வந்து இருக்கிறார்கள் அதனால தான் சாமியார்  ரொம்ப கோபமாக இருக்கிறார் என்று எங்களிடம் கூறினார்கள் , இதனால் என் நண்பன் உடனே அந்த இடத்தை விட்டு சென்று விட்டான். 

இறுதியாக இன்று யாருக்கும் அருள் வாக்கு கிடையாது என்று கூறிவிட்டு அந்த கடையை சாத்தி விட்டார்கள்.  எனக்கு ரொம்ப ஏமாற்றம் ,என்னடா இது போன வாரம் வந்தா ,இந்த வாரம் வாங்க சொன்னார் ,இந்த வாரம் வந்த சாமி மலை ஏறிடுச்சி  என்று சொல்றாங்க, இந்த சாமியார்களே  இப்படி தான் என்று மனதில் திட்டிக்கொண்டு அந்த இடத்த விட்டு நகர்ந்தேன் . இருப்பினும் என் மனதில் ,இந்த சாமியாரும் மனிதர் தான் நம்மளும் மனிதர் தான், அவரும் மாரியம்மன் வழிபடுறாரு ,நானும் அந்த அம்மாவைத்தான் வழிபடுறேன் ,அப்படி இருக்க அவருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சக்தி என்று என் மனதில் ஆழமாக சிந்தித்தேன்.

சரி ஒரு சின்ன சோதனை செய்து பார்ப்போம் ,எல்லாம் போய்ட்டாங்க ,எல்லாரயும் அவர் கூப்பிட்டு அருள் வாக்கு கூறுவது போல அவர கூப்பிட்டு நம்ம அருள் வாக்கு கூறுவோம் என்று நினைத்தேன்.

அதற்க்கான முதல் முயற்சி தான் இது என்று அந்த சோதனையை  செய்து பார்த்தேன் .

என்ன நடந்தது என்று நாளைக்கு பார்ப்போம்.

என்றும்-சிவனடிமை-பாலா.

திங்கள், 25 ஏப்ரல், 2011

புண்ணிய ஆத்மாக்களின் தொடர்பு...


அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

ஏனோ தெரியவில்லை , பதிவுகளை சரிவர பகிர முடியவில்லை. காரணமும் யான் அறியேன் . அன்புக்குரிய சங்கர் குருசாமி யான் நினைப்பதையே ,அவரின் பதிவுகளாக நான் காண்பது எனக்கு மிக ஆச்சர்யமாக இருக்கிறது.

சித்தர்களின் பாத கமலங்களுக்கு வரும் முன் , பல வித வேட்கையுடன் ,பலரின் தரிசனம் கண்டும் நான் திருப்தி அடையாதவன்.

நம்மால் எப்படி அடுத்தவர்களின் வாழ்க்கை ரகசியத்தை தெரிந்து கொள்வது (அருள்வாக்கு கூறுவது). அதானால் அவர்களின் வாழ்க்கை தரத்தை எப்படி முன்னேற்றுவது என்ற வேட்கையில் பலரை தரிசனம் கண்டு அவர்கள் கூறியதை கண்டு ஆச்சர்ய பட்டவன்.

நம்மாலும் இதுப்போல் எப்படி கூறுவது போன்ற எந்தன் சிந்தனைக்கு
அந்த ஆதி சித்தன் கற்று கொடுத்த கலையின் ரகசியத்தை வரும்
நாள்களில் காணலாம்.

இறந்தபின் இந்த ஆத்மா எங்கே போகிறது.
உயிர் எங்கே இருக்கிறது ?
புண்ணியலோக ஆத்மாக்கள் உண்மையிலே உள்ளதா ?

போன்ற நிகழ்வுகளை வரும் நாள்களில் காணலாம் .


என்றும்-சிவனடிமை-பாலா.

புதன், 20 ஏப்ரல், 2011

9 வது பாரம்பரிய சித்த மூலிகை,வர்மா மற்றும் யோகா மாநாடு .

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு  ,

கடந்த இரண்டு வாரங்களாக என்னால் எந்தவொரு பதிவும் எழுத முடியவில்லை.ஏனெனில் தேர்தல் பணியில் என் இல்லாள் ஈடுபட்டு இருந்ததால் ,அவர்களுக்கு உதவி புரிந்தும் , கடந்த வாரம் தஞ்சாவூரில் நடைப்பெற்ற பாரம்பரிய மூலிகை சித்த மருத்துவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டமையாலும் என்னால் பதிவுகளை பகிர்வு  செய்ய முடியவில்லை.

பாரம்பரிய சித்தர் மூலிகைகளின் மாநாடு என் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை
ஏற்படுத்தியுள்ளது. நமது சித்த மருத்துவத்தில் கூறப்படாத விஷயங்கள் எதுவுமே இல்லை எனும் அளவுக்கு அந்த மாநாடு சிறப்பாக நடைபெற்றது.

படிப்பறிவு இல்லாத மருத்துவர்கள் கூறிய சிகிச்சை முறை அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது .

இந்த மாநாட்டில் வர்மாவைப்பற்றிய விளக்கம் ரொம்பவும் உபயோகமாக இருந்தது . இறக்கும் தருவாயில் உள்ளவரை எப்படி சிறிது நேரம் அவரின் இறப்பினை தள்ளிபோடுவது போன்ற உக்திகளும் , சாதரணமாக வரக்கூடிய தலைவலி ,முதுகுவலி,இடுப்பு வலி போன்றவைகளை நீக்கும் முறைகளும் எளிமையாக விளக்கப்பட்டது .

யோகாவைப்பற்றியும் சிறப்பு விளக்கம் கொடுக்கப்பட்டது .ஒரு வேலை மட்டும் உணவு உண்டு வாழ்வது எப்படி என்றும், உணவே உண்ணாமல் வாழ்வது எப்படி என்றும் அழகான விளக்கங்களை யோகாச்சியர்கள் தந்தார்கள் .

இயற்க்கை உணவினைப்பற்றிய விழிப்புணர்வு தரப்பட்டது . அலோபதி மருத்துவத்தால் கைவிடப்பட்ட பக்கவாத நோயாளிகள் தொக்கான முறையில் குணப்படுத்தபட்டவர்களின் அனுபவங்கள் நேரிடையாக கூறப்பட்டது .

முடிந்தால் வரும் நாட்களில் சில எளிய மருத்துவ முறைகளை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.


என்றும்-சிவனடிமை-பாலா.

புதன், 6 ஏப்ரல், 2011

அகத்தியர் ஞானம்‍ 9ல் 8,9

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு,


பாடல்:8
பாரப்பா வுலகுதனிற் பிறவி கோடி
    ப‌டைப்புக‌ளோ ப‌ல‌வித‌மாய்க் கோடா கோடி
வீர‌ப்பா அண்ட‌த்திற் பிற‌வி கோடி
   வெளியிலே யாடுத‌ப்பா வுற்றுப்பாரு
ஆர‌ப்பா அணுவெளியி லுள்ள‌ நீதான்
   ஆச்சரிய‌ம் புழுக்கூடு வ‌லைமோ த‌ப்பா
கூர‌ப்பா அண்ட‌த்திற் பிண்ட மாகும்
   குண‌விய வானான‌க்காற் சத்திய‌ மாமே.

பாட‌ல்:9
ச‌த்திய‌மே வேணும‌டா ம‌னித னானால்
   ச‌ண்டாள‌ஞ் செய்யாதே த‌வ‌றிடாதே
நித்திய‌க‌ர் மம் விடாதே  நேம‌ம் விட்டு
   நிட்டையுட‌ன் சமாதிவிட்டு நிலைபே ராதே
புத்திக்கெட்டுத் திரியாதே பொய்சொல் லாதே
   புண்ணிய‌த்தை ம‌ற‌வாதே பூசல் கொண்டு
க‌த்திய‌தோர் ச‌ள்ளிட்டுத் த்ர்க்கி யாதே
   கர்மியென்று ந‌ட‌வாதே க‌திர்தான் முற்றே.


விளக்கம்:

இந்த உலகத்தில் கோடி வகையான பிறவிகள் உண்டு என்றும்  ,
அதே வேளையில் இறைவனின் படைப்புகள் பல கோடி உண்டு என்றும்,
நாம் பார்க்கும் இந்த பிரபஞ்சத்தில் எண்ணற்ற வகையான மாற்றங்கள் அண்ட வெளியில் தினந்தோறும் நடைபெற்று கொண்டு இருக்கிறது. அதனை நன்றாக உற்றுப்பார் , அதனின் செயல்பாடுகளைப்பார்த்தல் உனக்கு எல்லாமே புரியும். அண்டத்தில் உள்ள எல்லா பொருள்களும் இந்த பிண்டத்திலும் உள்ளது . அதனை குருவின் அருளினால் உணர்ந்தாலே போதும் என கூறுகிறார்.


மனிதனாக இருக்கவேண்டுமெனில்,
கீழ்க்கண்ட வழிகளை பின்பற்றுமாறு அகத்தியர் கூறுகிறார்.
1)உண்மையாக இருக்கவேண்டும்.
2)துரோகம் செய்யக்கூடாது.
3)நித்தியகர்மங்களை கைவிடக்கூடாது.
4)கெட்ட‌வ‌ர்க‌ளின் ச‌க‌வாச‌ம் கொண்டு புத்திக்கொண்டு திரிய‌க்கூடாது.
5)பொய் சொல்ல‌ கூடாது.
6)புண்ணிய‌த்தை சேர்த்துக்கொள்ள‌வேண்டும்.
7)எல்லாருடன் சண்டை போட்டுக்கொண்டு தர்க்கி என்ற பெயரை எடுக்க கூடாது.
8)காமியென்று பெய‌ரை எடுக்காதே .


செவ்வாய், 5 ஏப்ரல், 2011

அகத்தியர் ஞானம்‍ 9ல் 6,7

அன்புள்ள சித்த உள்ள‌ங்க‌ளுக்கு,

பாடல் : 6

மோட்ச‌ம‌து பெறுவ‌த‌ற்குச் சூட்ச‌ங் கேளு
    முன்செய்த‌ பேர்க‌ளுட‌ன் குறியைக் கேளு
ஏய்ச்ச‌லது குருக்க‌ள‌து குல‌ங்க‌ள் கேளு
    எல்லாருங் கூட‌ழிந்த‌ தெங்கே கேளு
பேச்ச‌லது மாய்கைய‌ப்பா வொன்று மில்லை
  பித‌ற்றுவார‌ வ‌ரவ‌ரும் நிலையுங் காணார்
கூச்ச‌ல‌து பாளையந்தான் போகும் போது
  கூட்டோடே போச்சுத‌ப்பா மூச்சுத் தானே.

பாடல் : 7
மூச்சொட‌ங்கிப் போன‌விட‌ம் ஆருங்காணார்
    மோட்ச‌த்தின் ந‌ர‌காதி யிருப்புங்  காணார்
வாச்சென்றே வ‌ந்த‌வ‌ழி யேற்ற‌ங் காணார்
   வ‌ளிமாறி நிற்கும‌ணி வ‌ழியுங் காணார்
வீச்ச‌ப்பா வெட்ட‌வெளி ந‌ன்றாய்ப் பாரு
    வேத‌ங்க‌ள் சாத்திர‌ங்க‌ள் வெளியாய்ப் போச்சே
ஆச்ச‌ப்பா க‌ருவுத‌னில் அமைந்தாற் போலாம்
    அவ‌னுக்கே தெரியும‌ல்லா ல‌றிவாய்ப் பாரே

விள‌க்க‌ம்:
மோட்ச‌ம் பெறுவ‌த‌ற்க்கான சூட்சம வ‌ழிமுறையை என்ன‌வென்று ச‌ற்குருவிட‌ம் கேளுவென்றும்,
பொதுவாக‌ ந‌திமூல‌ம் ம‌ற்றும் ரிஷிமூல‌ம் பார்க்க‌கூடாது என்று சொல்வார்க‌ள்.
குருக்களின் குல‌த்தினையும்,அவ‌ர்க‌ளின் ஜீவசமாதி எங்கே என்றும் கேளு என‌ கூறுகிறார்.
இதுவெல்லாமே மாய்கைதான் என‌வும், உண‌மையான‌ நிலையை யாரும் அறிய‌ மாட்டார்க‌ள் என‌வும் கூறுகிறார். இந்த உடலோடு தான் மூச்சான‌து போச்ச‌த‌ப்பா என‌ கூறுகிறார்.

மூச்சொட‌ங்கிபோன‌ இட‌ம் யாருக்கும் தெரியாது என‌வும், மோட்ச‌த்தின் ந‌ர‌காதி இருப்பிட‌த்தையும் அவ‌ர்க‌ள் காணார் என‌வும், மூச்சான‌து வ‌ந்த‌ வ‌ழியே சென்றதையும், வ‌ழிமாறி நின்ற‌தையும் அவ‌ர்க‌ளால் அறிய‌முடியாது எனவும் கூறுகிறார். உண்மையான ப‌ர‌வெளியைப் பார்தாலே போதும் எந்த வித‌ வேத‌,சாஸ்திர‌ங்க‌ளும் ந‌ம‌க்கு தேவைப்படாது. இவ்வுட‌லில் உள்ள‌ நாத‌னுக்கே எல்லாம் தெரியும் என‌ கூறுகிறார்.


என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

திங்கள், 4 ஏப்ரல், 2011

அகத்தியர் ஞானம்‍ 9ல் 5

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு,

தானென்ற தானே தானொன்றே தெய்வம்
   தகப்பனுந்   தாயுமங்கே  புணரும்போது
நானென்று கருப்பிடித்துக் கொண்டு வந்த
   நாதனைநீ எந்நாளும் வணங்கி நில்லு

கோனென்ற திருடனுக்குந் தெரியுமப்பா
   கோடான கோடியிலே யொருவனுண்டு
ஏனென்றே மனத்தாலே யறிய வேணும்
  என் மக்காள்நிலை நிற்க மோட்சந்   தானே .

விளக்கம் :
தெய்வம் ஒன்றே என்று உணர்வதற்கு முதலில் தன்னை உணரவேண்டும் .
தன்னை தானே உணராதவனுக்கு தெய்வம் எப்போதும் வேறாக தான் தெரியும் . இவ்வுலகில் எல்லா உயிர்களும் ஆண் ,பெண் புணர்வதினால் மட்டுமே தோன்றமுடியும் . இது தான் இயற்க்கை நியதியும் கூட .

உலகில் தோன்றிய அனைத்து சித்த மக்களும், ரிஷிகளும்,முனிகளும் , ஏசு, மற்றும் முகமது நபி எல்லாரும் இவ்வழியே வந்தவர்கள் தான் ,இதனை யாராலும் மறுக்கவும் முடியாது . இவ்வாறு தோன்றிய அந்த கருவினை(நாதனை) நீ எந்நாளும் வணங்க வேண்டும். 

கருவில்லையே உருவில்லை என்பதற்கு ஏற்ப அந்த உயிரினை வணங்க வேண்டும் என கூறுகிறார்.

இந்த உண்மையின் தத்துவத்தை அவ்வளவு எளிதாக எல்லாராலும் புரிந்து
கொள்ள முடியாது. அப்படி புரிந்து கொள்பவர்கள் கோடியில் ஒருவர் தான் இருப்பார் என கூறுகிறார்.

இவ்வாறு இதனை உணர்வதற்கு நல்ல மனம் வேண்டும், அதே நேரம் கொஞ்சம் பகுத்தறிவும் வேண்டும். இந்த உண்மையின் தத்துவத்தை உணர்ந்து
அதற்க்கு ஏற்றார்போல வாழ தொடங்கினாலே நமக்கு மோட்சம் தான் என தெளிவு பட கூறுகிறார்.

"மக்களே உண்மையான  சூட்சமத்தை உணருங்கள் "-குருவின் அருளினால் .

பத்திரகிரியாரின் பாடலில்  
பாவியென்ற பேர்படைத்துப்  பாழ் நரகில் வீழாமல்
ஆவியென்ற சூத்திரத்தை யறிவதினி யெக்காலம் .....


என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

வெள்ளி, 1 ஏப்ரல், 2011

அகத்தியர் ஞானம்‍ 9ல் 4

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு,


பாடல் : 4

ஒருவனென்ற தெய்வத்தை வணங்க வேணும்
 உத்தமனாய்ப் பூமிதனிலிருக்க வேணும்
பருவமதிற் சேறுபயிர் செய்ய வேணும்
 பாழிலே மனத்தைவிடான் பரம ஞானி
திரிவார்கள் திருடரப்பா கோடா கோடி
 தேசத்திற் கள்ளரப்பா கோடாகோடி
வருவார்க ளப்பனே அநேகங் கோடி
 வார்த்தையினால் பசப்புவார் திருடர் தானே..



என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.