புதன், 20 ஏப்ரல், 2011

9 வது பாரம்பரிய சித்த மூலிகை,வர்மா மற்றும் யோகா மாநாடு .

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு  ,

கடந்த இரண்டு வாரங்களாக என்னால் எந்தவொரு பதிவும் எழுத முடியவில்லை.ஏனெனில் தேர்தல் பணியில் என் இல்லாள் ஈடுபட்டு இருந்ததால் ,அவர்களுக்கு உதவி புரிந்தும் , கடந்த வாரம் தஞ்சாவூரில் நடைப்பெற்ற பாரம்பரிய மூலிகை சித்த மருத்துவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டமையாலும் என்னால் பதிவுகளை பகிர்வு  செய்ய முடியவில்லை.

பாரம்பரிய சித்தர் மூலிகைகளின் மாநாடு என் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை
ஏற்படுத்தியுள்ளது. நமது சித்த மருத்துவத்தில் கூறப்படாத விஷயங்கள் எதுவுமே இல்லை எனும் அளவுக்கு அந்த மாநாடு சிறப்பாக நடைபெற்றது.

படிப்பறிவு இல்லாத மருத்துவர்கள் கூறிய சிகிச்சை முறை அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது .

இந்த மாநாட்டில் வர்மாவைப்பற்றிய விளக்கம் ரொம்பவும் உபயோகமாக இருந்தது . இறக்கும் தருவாயில் உள்ளவரை எப்படி சிறிது நேரம் அவரின் இறப்பினை தள்ளிபோடுவது போன்ற உக்திகளும் , சாதரணமாக வரக்கூடிய தலைவலி ,முதுகுவலி,இடுப்பு வலி போன்றவைகளை நீக்கும் முறைகளும் எளிமையாக விளக்கப்பட்டது .

யோகாவைப்பற்றியும் சிறப்பு விளக்கம் கொடுக்கப்பட்டது .ஒரு வேலை மட்டும் உணவு உண்டு வாழ்வது எப்படி என்றும், உணவே உண்ணாமல் வாழ்வது எப்படி என்றும் அழகான விளக்கங்களை யோகாச்சியர்கள் தந்தார்கள் .

இயற்க்கை உணவினைப்பற்றிய விழிப்புணர்வு தரப்பட்டது . அலோபதி மருத்துவத்தால் கைவிடப்பட்ட பக்கவாத நோயாளிகள் தொக்கான முறையில் குணப்படுத்தபட்டவர்களின் அனுபவங்கள் நேரிடையாக கூறப்பட்டது .

முடிந்தால் வரும் நாட்களில் சில எளிய மருத்துவ முறைகளை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.


என்றும்-சிவனடிமை-பாலா.

3 கருத்துகள்:

  1. இப்படிப்பட்ட அபூர்வமான, நம் சித்த மருத்துவ முறைகளை மிக ரகசியகமாக வைத்திருக்கும் வைத்தியர்களும் இது பிரபலமாகாமல் இருப்பதற்குக் காரணம்.

    இதில் மேலும் போலிகளும் அரைகுறை மருத்துவர்களும் குட்டையைக் குழப்பி சித்த மருத்துவம் என்றாலே ஒரு வித அலர்ஜியை மக்கள் மனதில் ஏற்படுத்தி விடுகிறார்கள்.

    இப்போதைக்கு சித்த மருத்துவம் என்றாலே சிட்டுக் குருவி லேகியம் விற்பவர்களும் போலிகளுமே ஞாபகத்துக்கு வருகிறார்கள்.

    இந்த அபூர்வ மருத்துவத்தை மீட்டெடுக்க சித்தர்கள் நிச்சயம் மனது வைத்து ஏதாவது செய்யவேண்டும்...

    அவர்களிடம் இதுபற்றி பிரார்த்திப்பதைத் தவிர என்னால் செய்ய முடிவது ஏதொன்றும் இல்லை.

    பகிர்வுக்கு நன்றி...

    http://anubhudhi.blogspot.com/

    பதிலளிநீக்கு
  2. பாலா, கமெண்ட் போடும்போது வரும் word verification - ஐ எடுத்துவிட்டால் இன்னும் வசதியாக இருக்குமே...

    நன்றி..

    பதிலளிநீக்கு
  3. அன்புள்ள சங்கர் குருசாமி ஐயா ,

    //அபூர்வ மருத்துவத்தை மீட்டெடுக்க சித்தர்கள் நிச்சயம் மனது வைத்து ஏதாவது செய்யவேண்டும்//


    நிச்சயம் செய்கிறார்கள் .

    தங்களின் விருப்பதிற்கேற்ப //கமெண்ட் போடும்போது வரும் word verification - ஐ//-நீக்கிவிட்டேன் .

    http://gurumuni.blogspot.com/
    என்றும்-சிவனடிமை-பாலா.

    பதிலளிநீக்கு