வெள்ளி, 29 ஏப்ரல், 2011

ஊமை சாமியாரின் அருள்வாக்கு தொடர்ச்சி ...

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

நேற்றைய தொடர்ச்சி ,

சாமியார் ரொம்ப கோபமாக பக்கத்து கடையில் உட்கார்ந்து இருந்தார் .
அன்றைக்கு நான் சென்னைக்கு போக வேண்டிய காரணத்தினால் எப்படியும் அந்த சாமியாரை பார்த்தே ஆகவேண்டும் என்ற கொள்கையில் அங்கே இருந்தேன் .

அங்கு இருந்த ஒரு அன்பர், தம்பி கொஞ்ச நேரம் இங்கே இரு ,எப்படியும் சாமியார் சாதாரண நிலைக்கு வருவார். அதற்க்கு அப்புறமா நான் உனக்கு பரிந்துரை செய்கிறேன் என்று கூறினார்.

எனக்கு ஒரே சந்தேகம் ,இந்த சாமியாரை பார்க்க கூட பரிந்துரை தேவைபடுதே என்று ரொம்ப வேதனை பட்டேன். இருப்பினும் அவரின் பரிந்துரையை நான் ஏற்றுக்கொள்ளவில்லை . மனதில் என் தாய் சமயபுரத்து அம்மனை நினைத்து
"ஒம் சமயபுர மாரியம்மனே போற்றி "" என்று வேண்டிக்கொண்டு இருந்தேன் .
நான் வேண்டிக்கொண்டு இருக்கும்போது அந்த சாமியார் ரொம்ப கோபமாக இருந்தார் . நான் மனதில் பிரார்த்தினை செய்ய செய்ய அவரின் கோப முகம் கொஞ்சம் கொஞ்சம் மாறியது .

என்னைப்பார்த்து சிரித்து கொண்டு இங்கே வா என்று புன்முறுவலாக அழைத்தார் . எனக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது . நம்ம அவருக்கு அருள்வாக்கு கூற வேண்டும் என நினைத்தால் அவரே நம்மை கூப்பிடுகிறார் .

என்னிடம் உள்ள நோட் புக்கினை  வாங்கி கொண்டு, என்னைப்பற்றி எழுத ஆரம்பித்தார் ,என்னுடைய குடுமபத்தினை பற்றியும் , உடன் பிறந்தோர் பற்றியும் அழகாக எழுதினார் .

அவர் எழுதிய வரிகளில் சில ,

என்னைப்போல் உன்னிடம் ஞானசக்தி உள்ளது , வரும் வேளையில் அது உனக்கு வந்தே சேரும், இப்போது இதுப்போன்ற முயற்சியில் ஈடுபடாதே .
பெண்களிடம் சேர்க்கை கொள்ளாதே அது உன்னை வேறு பாதையில் அழைத்து செல்லும் .உன்னை உணரும் காலம் வரும்போது அனைத்தும் உனக்கு தெளிப்படும் .

இன்று நீ சென்னைக்கு செல்கிறாய் ,போகும் காரியம் ஜெயம் என்று எழுதி என்னை ஆச்சரயப்படுத்தினார் .

அவர் மேல் இருந்த கோபம் எல்லாம் மாறி அவரின் மேல் எனக்கு ஒரு நம்பிக்கை ஏற்பட்டது .

நம்ப முடியாத ஆச்சர்யம் . இந்த நிகழ்ச்சி தான் பிற்காலத்தில் நான் அருள்வாக்கு கூறும் போது அடிகடி நினைத்து பார்ப்பது .

உட்கார்ந்து இருக்கும் மனிதர்களின் மன ஓட்டத்தினை அறிவது ரொம்ப எளிமையான விஷயம். ஆனால் அதனால் நமது மனது ரொம்ப கஷ்டப்படும் .
பலருடைய மன ஓட்டங்களை அறிவதால் தேவை இல்லாமல் நமது மனமும் அதையே சிந்தித்து கொண்டு இருக்கும்.

அருள்வாக்கு என்ற பேரில் பலர் இன்றும் பணம் சம்பாதிக்கிறார்கள் . உண்மையிலே இது என்னைப்பொருத்து வரை ஒருவகையான இயற்க்கை விதி மீறலே ஆகும்.

ஒருவரின் குண நலனை தெரிந்து கொண்டு அவரிடம் முடிந்த வரை பணத்தை கறந்துகொள்ளும் பல ஜீவன்கள் இந்த பூமியில் உண்டு.

பரிகாரம் என்ற பெயரில் பலரின் வாழ்க்கை அழித்தவர்கள் பலரும் உண்டு .

இறைவன் படைத்த இந்த மானுடல் அதற்கென்று விதிக்கப்பட்ட பலாபலன்களை அனுபவித்து தான் ஆகவேண்டும் .  அதன் சூட்சமத்தை உணர்ந்து மதியால் விதியை வெல்லலாம்.

விதி என்பது நம்ம செய்த தவறோ அல்லது மூதாதையர்கள் செய்த தவறோ அதனால் இந்த பிறவியில் ஏற்படும் அனுபவங்கள் தான் .
அனுபவங்களை புரிந்து  கொண்டு அந்த தவறுக்கான விளக்கதை தெரிந்து  கொள்வது தான் பரிகாரம் ஆகும் .

மனதால் வருந்தி தம்மை திருத்தி கொள்ளாமல் பணத்தால் பரிகாரத்தை செய்வது அழகல்ல .

இதுபோன்ற சில அனுபவங்கள் மறக்க முடியாதவை .

நான் இந்த கலையை கற்றுக்கொண்டு செய்த சில மறக்க முடியாத  அனுபவங்களை பகிர்ந்து  கொள்கிறேன்.

என்றும்-சிவனடிமை-பாலா.

6 கருத்துகள்:

 1. உண்மையிலேயெ ஒரு ஞானியை சந்தித்திருக்கிறீர்கள்.

  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. மனதால் வருந்தி தம்மை திருத்தி கொள்ளாமல் பணத்தால் பரிகாரத்தை செய்வது அழகல்ல .
  அருமையான கருத்து.

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் பாலா சார்,

  அற்புதமான வலைத்தளத்தை இன்றுதான் கண்னுற்றேன்
  மிக்க மகிழ்ச்சி...

  இதை யாவரும் பெற்றுய்வதற்கு தங்களது தளத்தில்
  FEED BUNER EMAIL SUBSCRIPTION என்ற வசதியை இணைக்கவும் .

  வாய்ப்பிருக்கும் போது எமது ஆன்மிக வலைத்தளமாகிய

  http://sivaayasivaa.blogspot.com

  விற்க வாருங்கள்,

  நன்றி.

  பதிலளிநீக்கு