அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு,
பாடல்:8
பாரப்பா வுலகுதனிற் பிறவி கோடி
படைப்புகளோ பலவிதமாய்க் கோடா கோடி
வீரப்பா அண்டத்திற் பிறவி கோடி
வெளியிலே யாடுதப்பா வுற்றுப்பாரு
ஆரப்பா அணுவெளியி லுள்ள நீதான்
ஆச்சரியம் புழுக்கூடு வலைமோ தப்பா
கூரப்பா அண்டத்திற் பிண்ட மாகும்
குணவிய வானானக்காற் சத்திய மாமே.
பாடல்:9
சத்தியமே வேணுமடா மனித னானால்
சண்டாளஞ் செய்யாதே தவறிடாதே
நித்தியகர் மம் விடாதே நேமம் விட்டு
நிட்டையுடன் சமாதிவிட்டு நிலைபே ராதே
புத்திக்கெட்டுத் திரியாதே பொய்சொல் லாதே
புண்ணியத்தை மறவாதே பூசல் கொண்டு
கத்தியதோர் சள்ளிட்டுத் த்ர்க்கி யாதே
கர்மியென்று நடவாதே கதிர்தான் முற்றே.
விளக்கம்:
இந்த உலகத்தில் கோடி வகையான பிறவிகள் உண்டு என்றும் ,
அதே வேளையில் இறைவனின் படைப்புகள் பல கோடி உண்டு என்றும்,
நாம் பார்க்கும் இந்த பிரபஞ்சத்தில் எண்ணற்ற வகையான மாற்றங்கள் அண்ட வெளியில் தினந்தோறும் நடைபெற்று கொண்டு இருக்கிறது. அதனை நன்றாக உற்றுப்பார் , அதனின் செயல்பாடுகளைப்பார்த்தல் உனக்கு எல்லாமே புரியும். அண்டத்தில் உள்ள எல்லா பொருள்களும் இந்த பிண்டத்திலும் உள்ளது . அதனை குருவின் அருளினால் உணர்ந்தாலே போதும் என கூறுகிறார்.
மனிதனாக இருக்கவேண்டுமெனில்,
கீழ்க்கண்ட வழிகளை பின்பற்றுமாறு அகத்தியர் கூறுகிறார்.
1)உண்மையாக இருக்கவேண்டும்.
2)துரோகம் செய்யக்கூடாது.
3)நித்தியகர்மங்களை கைவிடக்கூடாது.
4)கெட்டவர்களின் சகவாசம் கொண்டு புத்திக்கொண்டு திரியக்கூடாது.
5)பொய் சொல்ல கூடாது.
6)புண்ணியத்தை சேர்த்துக்கொள்ளவேண்டும்.
7)எல்லாருடன் சண்டை போட்டுக்கொண்டு தர்க்கி என்ற பெயரை எடுக்க கூடாது.
8)காமியென்று பெயரை எடுக்காதே .
பாலா, அற்புதமான கருத்துக்கள். மனத்தூய்மையும் பணிவும் கட்டுப்பாடும் இருந்தால் இவை அனைத்தும் நிச்சயம் கைகூடும்.
பதிலளிநீக்குபகிர்வுக்கு மிக்க நன்றி.
http://anubhudhi.blogspot.com/
நண்பரே ..நான் உங்களுடன் -முதுகலை பட்டய படிப்பு -வர்மம் & தொக்கணம் படித்து கொண்டிருக்கும் சக மாணவன் -என்னை ஞாபகம் இருக்கிறதா ?சென்னை பொன் ஸ்டடி சென்டரில் சந்தித்தோம் அல்லவா ?
பதிலளிநீக்கு