அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு,
பாடல் : 6
மோட்சமது பெறுவதற்குச் சூட்சங் கேளு
முன்செய்த பேர்களுடன் குறியைக் கேளு
ஏய்ச்சலது குருக்களது குலங்கள் கேளு
எல்லாருங் கூடழிந்த தெங்கே கேளு
பேச்சலது மாய்கையப்பா வொன்று மில்லை
பிதற்றுவார வரவரும் நிலையுங் காணார்
கூச்சலது பாளையந்தான் போகும் போது
கூட்டோடே போச்சுதப்பா மூச்சுத் தானே.
பாடல் : 7
மூச்சொடங்கிப் போனவிடம் ஆருங்காணார்
மோட்சத்தின் நரகாதி யிருப்புங் காணார்
வாச்சென்றே வந்தவழி யேற்றங் காணார்
வளிமாறி நிற்குமணி வழியுங் காணார்
வீச்சப்பா வெட்டவெளி நன்றாய்ப் பாரு
வேதங்கள் சாத்திரங்கள் வெளியாய்ப் போச்சே
ஆச்சப்பா கருவுதனில் அமைந்தாற் போலாம்
அவனுக்கே தெரியுமல்லா லறிவாய்ப் பாரே
மோட்சத்தின் நரகாதி யிருப்புங் காணார்
வாச்சென்றே வந்தவழி யேற்றங் காணார்
வளிமாறி நிற்குமணி வழியுங் காணார்
வீச்சப்பா வெட்டவெளி நன்றாய்ப் பாரு
வேதங்கள் சாத்திரங்கள் வெளியாய்ப் போச்சே
ஆச்சப்பா கருவுதனில் அமைந்தாற் போலாம்
அவனுக்கே தெரியுமல்லா லறிவாய்ப் பாரே
விளக்கம்:
மோட்சம் பெறுவதற்க்கான சூட்சம வழிமுறையை என்னவென்று சற்குருவிடம் கேளுவென்றும்,
பொதுவாக நதிமூலம் மற்றும் ரிஷிமூலம் பார்க்ககூடாது என்று சொல்வார்கள்.
குருக்களின் குலத்தினையும்,அவர்களின் ஜீவசமாதி எங்கே என்றும் கேளு என கூறுகிறார்.
இதுவெல்லாமே மாய்கைதான் எனவும், உணமையான நிலையை யாரும் அறிய மாட்டார்கள் எனவும் கூறுகிறார். இந்த உடலோடு தான் மூச்சானது போச்சதப்பா என கூறுகிறார்.
மூச்சொடங்கிபோன இடம் யாருக்கும் தெரியாது எனவும், மோட்சத்தின் நரகாதி இருப்பிடத்தையும் அவர்கள் காணார் எனவும், மூச்சானது வந்த வழியே சென்றதையும், வழிமாறி நின்றதையும் அவர்களால் அறியமுடியாது எனவும் கூறுகிறார். உண்மையான பரவெளியைப் பார்தாலே போதும் எந்த வித வேத,சாஸ்திரங்களும் நமக்கு தேவைப்படாது. இவ்வுடலில் உள்ள நாதனுக்கே எல்லாம் தெரியும் என கூறுகிறார்.
என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.
. உண்மையான பரவெளியைப் பார்தாலே போதும் எந்த வித வேத,சாஸ்திரங்களும் நமக்கு தேவைப்படாது.//
பதிலளிநீக்குஆழ்ந்த கருத்து.
அன்புள்ள இராஜராஜேஷ்வரிக்கு,
பதிலளிநீக்குகுரு நாதரின் பாடலில் உள்ள கருத்துகளை உணர்ந்தாலே போதும்.
எல்லாமும் கிடைக்கும். எல்லாம் என்றால் எல்லாமும் தான்.
தங்களின் வருகைக்கு நன்றி.
தன்னை அறிந்தால் அனைத்தும் அறியலாம். ஆகாசத்தில் இருந்துதான் மற்ற அனைத்து பூதங்களும் தோன்றின. எனவேதான் வெளியில் எல்லாம் இருப்பதாக சூட்சுமமாக எழுதிஉள்ளார் போல தோன்றுகிறது.
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி.
http://anubhudhi.blogspot.com/