புதன், 27 ஏப்ரல், 2011

ஊமை சாமியாரின் அருள்வாக்கு .

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

எனது முதல் அனுபவம் ,

எங்கள் கிராமத்திற்கு ஒரு ஊமை சாமியார் வந்து தங்கி அருள்வாக்கு கூறிவந்தார்  . அவரால பேச முடியாது அதனால அவர பார்க்க போறவங்க எல்லாம் கையில் ஒரு நோட் புக் எடுத்துட்டு தான் போக வேண்டும் . 
சில சமயம் உடனே அருள்வாக்கு சொல்ல மாட்டார், அடுத்த வாரம் வாங்க என்று கூறிவிடுவார்.
அவர் சமயபுரம் மாரியம்மன் பக்தர், அம்மா வந்து அவர் உடலில் இறங்கியதும் ,
அங்குள்ள பக்தர்களை பார்த்து யாருக்கு அருள்வாக்கு கூறவேண்டும் என்று அவருக்கு உத்தரவு வந்ததோ அவர்களை  கூப்பிட்டு அவர்கள் கொண்டு வந்த நோட் புக் -ல் அவர்களின் வம்சம் முதல் தற்சமயம் உள்ள பிரச்சனை வரையும் தெள்ள தெளிவாக எழுதி கொடுப்பார் .நம்ம முடியாத ஆச்சர்யமாக எல்லாருக்கும்  இருந்தது .

நாளடைவில் அவரைப்பார்க்க கூட்டம் அலை மோதியது.  முன்னால் உட்கார்ந்து இருக்கும் நபரின் முகத்தினை பார்த்தே எல்லா விசயங்களையும் கூறுவதால் அவரின் புகழ் எங்கும் பரவியது . ஜாதகம் இல்லாமலே ,துல்லியாமாக கணிப்பதால் அவரை பார்க்க போக வேண்டும் என்று எனது உள் மனது துடித்தது .

அதற்க்கான நாளும் வந்ததது , என் கையில் ஒரு நோட் புக் எடுத்து கொண்டு அவரை பார்க்க சென்றேன் . ஏறக்குறைய ஒரு மணி நேரம் உட்கார்ந்து இருந்தேன் . பின் என்னை பார்த்து விட்டு ,அடுத்த வாரம் புதன் கிழமை வாங்க என்று எனது நோட் புக் -ல் எழுதிவிட்டார் . எனக்கு ஒரே ஏமாற்றம் . இருப்பினும் அடுத்த வாரம் புதன் கிழமைக்காக காத்து இருந்தேன் . 

என் நண்பன் ஒருவன் இதனை கேள்விப்பட்டு நானும் அவரைப்பார்க்கவேனும்  என்று ஒரே அடம்பிடித்தான் . சரி இருவரும் சேர்ந்து போகாலாம் என்று முடிவெடுத்து அவரைப்பார்க்க சென்றோம் . அந்த வேளையில் என் நண்பன் அருகில் இருந்த மது கடைக்கு சென்று ஒரு பீர் குடித்து விட்டு வந்தான்.
இது எனக்கு தெரியவில்லை ,நான் நினைத்தேன் அவன் டீ கடைக்கு போகிறான் என்று ,ஆனால் அவன் போன கடையோ அவன் வந்த பிறகு தான் தெரிந்தது .

அன்று நல்ல கூட்டம் ,நிறைய பெண்களும் வந்து இருந்தார்கள்  . சாமியார்கள் என்றாலே கிராம புறத்தில் பெண்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். இதற்க்கு எங்கள் வூரும் விதி விலக்கல்ல .

பொதுவாக அந்த சாமியார் ஊமை என்பதால் மெளனமாக தான் இருப்பார். யாரிடம் கோபமாக நடந்து கொள்ளமாட்டார் .ரொம்ப அமைதி அவர் கோபப்பட்டு  பார்ப்பதே அபூர்வம் . அப்படி உள்ள சாமியார் நாங்கள் இருவரும் உள்ளே நுழைந்தவுடன் , மிகவும் டென்ஷன் ஆகி விட்டார் . ஒரே கூச்சல் குழப்பம் அங்கு நீடித்தது . எங்களுக்கு ஒன்றும் புரிவில்லை என்ன நடக்குது என்று.

உள்ளே அமர்ந்து இருந்த  பெண்கள் எல்லாம் அவரின் கோர தாண்டவத்தைப் பார்த்து பயந்து அங்கு இருந்து ஓடிவிட்டார்கள் . உடனே அவரின் சீடர்கள் ஓடி வந்து எங்களைப்பார்த்து ,அம்மா ஆக்ரோசமாக இருக்காங்க ,இப்ப யாரையும் பார்க்க முடியாது, முதலில் இந்த இடத்த விட்டு போங்க என்று எங்களைப்பார்த்து சொன்னார்கள்.  

என் நண்பனைப்பார்த்து அவர் மிகவும் முறைத்து முடிந்த வரை கோபமாக ,ஆவேசமாக முடிந்த வரை திட்டினார் என்றே சொல்லலாம் , ஊமைகள் பேசும் பாஷைகள் நமக்கு புரியாது . அவரின் சீடர்கள் எங்களிடம் யாரோ குடித்துவிட்டு வந்து இருக்கிறார்கள் அதனால தான் சாமியார்  ரொம்ப கோபமாக இருக்கிறார் என்று எங்களிடம் கூறினார்கள் , இதனால் என் நண்பன் உடனே அந்த இடத்தை விட்டு சென்று விட்டான். 

இறுதியாக இன்று யாருக்கும் அருள் வாக்கு கிடையாது என்று கூறிவிட்டு அந்த கடையை சாத்தி விட்டார்கள்.  எனக்கு ரொம்ப ஏமாற்றம் ,என்னடா இது போன வாரம் வந்தா ,இந்த வாரம் வாங்க சொன்னார் ,இந்த வாரம் வந்த சாமி மலை ஏறிடுச்சி  என்று சொல்றாங்க, இந்த சாமியார்களே  இப்படி தான் என்று மனதில் திட்டிக்கொண்டு அந்த இடத்த விட்டு நகர்ந்தேன் . இருப்பினும் என் மனதில் ,இந்த சாமியாரும் மனிதர் தான் நம்மளும் மனிதர் தான், அவரும் மாரியம்மன் வழிபடுறாரு ,நானும் அந்த அம்மாவைத்தான் வழிபடுறேன் ,அப்படி இருக்க அவருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சக்தி என்று என் மனதில் ஆழமாக சிந்தித்தேன்.

சரி ஒரு சின்ன சோதனை செய்து பார்ப்போம் ,எல்லாம் போய்ட்டாங்க ,எல்லாரயும் அவர் கூப்பிட்டு அருள் வாக்கு கூறுவது போல அவர கூப்பிட்டு நம்ம அருள் வாக்கு கூறுவோம் என்று நினைத்தேன்.

அதற்க்கான முதல் முயற்சி தான் இது என்று அந்த சோதனையை  செய்து பார்த்தேன் .

என்ன நடந்தது என்று நாளைக்கு பார்ப்போம்.

என்றும்-சிவனடிமை-பாலா.

2 கருத்துகள்: