அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,
ஏனோ தெரியவில்லை , பதிவுகளை சரிவர பகிர முடியவில்லை. காரணமும் யான் அறியேன் . அன்புக்குரிய சங்கர் குருசாமி யான் நினைப்பதையே ,அவரின் பதிவுகளாக நான் காண்பது எனக்கு மிக ஆச்சர்யமாக இருக்கிறது.
சித்தர்களின் பாத கமலங்களுக்கு வரும் முன் , பல வித வேட்கையுடன் ,பலரின் தரிசனம் கண்டும் நான் திருப்தி அடையாதவன்.
நம்மால் எப்படி அடுத்தவர்களின் வாழ்க்கை ரகசியத்தை தெரிந்து கொள்வது (அருள்வாக்கு கூறுவது). அதானால் அவர்களின் வாழ்க்கை தரத்தை எப்படி முன்னேற்றுவது என்ற வேட்கையில் பலரை தரிசனம் கண்டு அவர்கள் கூறியதை கண்டு ஆச்சர்ய பட்டவன்.
நம்மாலும் இதுப்போல் எப்படி கூறுவது போன்ற எந்தன் சிந்தனைக்கு
அந்த ஆதி சித்தன் கற்று கொடுத்த கலையின் ரகசியத்தை வரும்
நாள்களில் காணலாம்.
இறந்தபின் இந்த ஆத்மா எங்கே போகிறது.
உயிர் எங்கே இருக்கிறது ?
புண்ணியலோக ஆத்மாக்கள் உண்மையிலே உள்ளதா ?
போன்ற நிகழ்வுகளை வரும் நாள்களில் காணலாம் .
என்றும்-சிவனடிமை-பாலா.
பாலா, சற்று முயற்சி செய்தால் எல்லாரும் அருள் வாக்கு சொல்லாம். அது 90% சரியாகவும் இருக்கும்.
பதிலளிநீக்குஆனால் அவர்களுக்கு நம்மால் உதவ முடியாது. நாம் கூறுவதை வைத்து அவர்கள் தங்களை தற்காத்துக் கொள்ளவும் முடியாது. இது நான் அனுபவத்தில் கண்ட உண்மை.
இது மிகப் பெரிய மன உளைச்சல் தரும். அதில் மீள நாம் மிகப் பெரிய போராட்டம் நடத்த வேண்டும்.
எனது கருத்து என்னவென்றால் மக்கள் பிரச்சினைகளை தீர்க்கும் சூத்திரம் ஞானத்தில் உள்ளது. எவ்வளவு சித்த உள்ளங்கள் ஞான மார்க்கத்தில் செல்லுமோ அவ்வளவு தூரம் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வரும்.
இது இயற்கை. ஆனால் அதற்கான கிரெடிட் யாருக்கும் கிடைக்காது. சில சமயங்களில் தவறானவர்களுக்குக்கூட கிடைக்கும்.
அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து பயணம் செய்தால் ஞானம் தானாக அடைய முடியும் என்பது என் அனுமானம்.
தங்களின் அனுபவங்களை அறிய ஆவலாக உள்ளேன். நன்றி.
htp://anubhudhi.blogspot.com/