அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு,
தானென்ற தானே தானொன்றே தெய்வம்
தகப்பனுந் தாயுமங்கே புணரும்போது
நானென்று கருப்பிடித்துக் கொண்டு வந்த
நாதனைநீ எந்நாளும் வணங்கி நில்லு
கோனென்ற திருடனுக்குந் தெரியுமப்பா
கோடான கோடியிலே யொருவனுண்டு
ஏனென்றே மனத்தாலே யறிய வேணும்
என் மக்காள்நிலை நிற்க மோட்சந் தானே .
விளக்கம் :
தெய்வம் ஒன்றே என்று உணர்வதற்கு முதலில் தன்னை உணரவேண்டும் .
தன்னை தானே உணராதவனுக்கு தெய்வம் எப்போதும் வேறாக தான் தெரியும் . இவ்வுலகில் எல்லா உயிர்களும் ஆண் ,பெண் புணர்வதினால் மட்டுமே தோன்றமுடியும் . இது தான் இயற்க்கை நியதியும் கூட .
உலகில் தோன்றிய அனைத்து சித்த மக்களும், ரிஷிகளும்,முனிகளும் , ஏசு, மற்றும் முகமது நபி எல்லாரும் இவ்வழியே வந்தவர்கள் தான் ,இதனை யாராலும் மறுக்கவும் முடியாது . இவ்வாறு தோன்றிய அந்த கருவினை(நாதனை) நீ எந்நாளும் வணங்க வேண்டும்.
கருவில்லையே உருவில்லை என்பதற்கு ஏற்ப அந்த உயிரினை வணங்க வேண்டும் என கூறுகிறார்.
இந்த உண்மையின் தத்துவத்தை அவ்வளவு எளிதாக எல்லாராலும் புரிந்து
கொள்ள முடியாது. அப்படி புரிந்து கொள்பவர்கள் கோடியில் ஒருவர் தான் இருப்பார் என கூறுகிறார்.
இவ்வாறு இதனை உணர்வதற்கு நல்ல மனம் வேண்டும், அதே நேரம் கொஞ்சம் பகுத்தறிவும் வேண்டும். இந்த உண்மையின் தத்துவத்தை உணர்ந்து
அதற்க்கு ஏற்றார்போல வாழ தொடங்கினாலே நமக்கு மோட்சம் தான் என தெளிவு பட கூறுகிறார்.
"மக்களே உண்மையான சூட்சமத்தை உணருங்கள் "-குருவின் அருளினால் .
பத்திரகிரியாரின் பாடலில்
பாவியென்ற பேர்படைத்துப் பாழ் நரகில் வீழாமல்
ஆவியென்ற சூத்திரத்தை யறிவதினி யெக்காலம் .....
என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.
தன்னை அறிதல் அவ்வளவு எளிதல்ல.. நான் யார்?? என்ற கேள்விக்கு மனிதனால் இன்றுவரை விடை கண்டு பிடிக்க முடியவில்லை.. யாராவது தெரிந்து கொண்டால் அவர்களால் அதை விளக்க முடியவில்லை.. அந்த சுவையை அவரவர் சுவைக்கும்போதுதான் அது எப்படி இருக்கும் என்று தெரியும்..
பதிலளிநீக்குஅருமையான பதிவு.. பகிர்வுக்கு நன்றி..
http://anubhudhi.blogspot.com/
அன்புள்ள சங்கர் குருசாமி ஐயா ,
பதிலளிநீக்குதம்மை உணரும் காலம் எல்லாருக்கும் வரும். அவைகள் பொதுவாகவே அனுபவத்தின் மூலம் தான் வரும்.
உடுக்க உடையும், உண்ண உணவும் இல்லாதவனிடம் போய் நாம் தம்மை உணர்தல் பற்றி பேச முடியாது.
ஆனால் இதே வகையில் உள்ள சாதுக்களிடம் போய் கேட்டால் கிடைக்க வாய்ப்பு உண்டு.
தங்களின் கருத்துகள் என்றும் தனித்தன்மை வாய்ந்தவை.
என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.
ஆவியென்ற சூத்திரத்தை யறிவதினி -முயற்சி செய்வோம்.
பதிலளிநீக்கு