செவ்வாய், 3 மே, 2011

தொழுநோயை குணபடுத்திய ஆன்மாக்கள்...

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

எனக்கு பல சீடர்கள் இந்த துறையில் இருந்தார்கள். என்னிடம் ஒரு முறை அருள்வாக்கு பார்க்க வந்தால், அவர்கள் விரும்பினால் அவர்களுக்கும் இந்த கலையை கற்றுகொடுத்து இந்த கலையை வளர்த்து வந்தேன்.

ஒருமுறை என்னை பார்க்க ஒரு நண்பர்  வந்தார், அவர் வந்தவுடன் அவருக்கு உள்ள பிரச்சினையும் ,வந்த நோக்கத்தையும் நான் கூறினேன்.
என் மேல அவருக்கு ரொம்ப நம்பிக்கை வந்தது ,  பின் ஐயா நானும் இதனை
கற்றுக்கொள்கிறேன் என்று கேட்டார் . எனது வழிகாட்டியை அழைத்து நான்
விளக்கம் கேட்டபோது இவன் கற்றுக்கொள்வான் என்று கூறினார்.  அதற்க்கான தட்சணை எவ்வளவு  என்று  என்னிடம் எனது வழிக்காட்டி கூறினார்.

வந்த நண்பரோ , என்னிடம் வெறும் 100  ரூபாய் தான் உள்ளது என்று கூறினார். நானோ உன்னிடம் ஆறு 50  ரூபாய் உள்ளது மொத்தம் தட்சணை
ரூபாய் 300  என கூறினேன்.
 உடனே  அவர் என்னைப்பாத்து மன்னித்து விடுங்கள்  எனக் சொன்னார்.
நான் சொன்னேன்  எனக்கு ஒன்றும் தெரியாது தம்பி ,எனக்கு வந்து விபரம் தான் இது, தயவு செய்து உன் சட்டைப்பையில் உள்ள பணத்தை எண்ணிப்பார்
எனக் கூறினேன்.   எண்ணிப்பார்த்தால் சரியாக சொன்ன தொகை இருந்தது.

பின் அந்த நண்பருக்கு மந்திரம் உபதேசித்து ,
ரொம்ப நிதானமாகவும் ,அன்பு கலந்த மரியாதையுடனும் ஆன்மாக்களை அழைக்க சொன்னேன் . சிறிது நேரத்தில் அந்த நண்பரின் கையில் உள்ள புத்தகத்தில் எழுத்துகள் வர ஆரம்பித்தன .  இதில் ஒரு விஷயம் என்னவென்றால் அந்த நண்பரின் இறந்துபோன தாத்தாவே அவனுக்கு வழிக்காட்டியாக வந்துவிட்டார்.

சில மணி துளி உரையாடலுக்கு பின் அவருக்கு உள்ள நோய் என்னவென்று கேட்டபோது வெண்குஷ்டம் என்று வந்தது . அவர் அதை ஒப்புக்கொண்டு அவரின் உடலை திறந்து காட்டினார்.

மாதம் கை நிறைய சம்பாதித்தாலும் இந்த நோயினை பார்த்த எந்த பெண்ணும் அந்த பையனுடன் பேசுவதில்லை. அண்ணே எப்படியாவது இந்த
நோயை குணப்படுத்தணும் என்று என்னை கெஞ்சி கேட்டார் இல்லையென்றால் என் வாழ்க்கை வீண் என அழுதார் . அவர் மேல் இறக்கம் கொண்ட வழிக்காட்டி கன்னியாகுமரியில் உள்ள ஒரு மருத்தவரின் விலாசத்தை தெளிவாக எழுதி காட்டினார்.


எனக்கு இந்த விசயத்தில் உடன்பாடில்லை ஏனென்றால் அந்த நண்பர் கன்னியாகுமரிக்கு சென்றதே கிடையாது அந்த தெருவின் பெயர், வீட்டின் தோற்றம் போன்றவை தெளிவாக வழிக்காட்டியின் மூலம் அவருக்கு தரப்பட்டது .எனக்கு நம்பிக்கையும் இல்லை இந்த நோய் குணமாகும் என்று.  வந்த நண்பர் கொடுத்த பணத்தை அவரிடமே கொடுத்து இந்த தொகைக்கு தயிர் சாதம் அல்லது சாப்பாட்டினை வாங்கி அன்ன தானம் செய்யுங்கள் என்று கூறிவிட்டேன் அவரும் அவ்வாறே செய்தார் .

அருள்வாக்கின் மூலம் சம்பாதித்த பணத்தை நான் தொடுவதே கிடையாது .
அவர்களின் மனதினை அறிந்து அவர்களின் மூலமே அன்னதானம் செய்வது
தான் எனது இயல்பு. இது சத்தியம்.  இதன் மூலமோ என்னவோ தெரியவில்லை  அந்த ஆதி சித்தன் பல கலைகளை எனக்கு கற்றுகொடுக்கிறான்.

சரியாக 3 மாதங்களுக்கு பிறகு அந்த நண்பர் என்னை பார்க்க வந்தபோது .
எனக்கு நம்ப முடியாத ஆச்சர்யம் அவரின் நோய் முற்றிலும் குணமாகி இருந்தது.

அனுபவத்தில் பல விஷயங்கள் நம்ப முடியாதவை.

பல நேரங்களில் ,எனது வழிக்காட்டி அவர்களை சிவதலங்களுக்கு அழைத்து சென்று அவர்களையும் சிவ அபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செய்து இருக்கிறேன்.

ஆன்மாக்கள் எங்கும் உலவும் எதிலும் உலவும்.  அவர்களால் தன்னிச்சையாக எந்தவொரு காரியத்தையும் செய்ய முடியாது. ஆகையால் தான் அவர்கள் மனிதர்களின் மூலம் பல நல்ல காரியங்களை செய்து அவர்களின் பாவங்களை குறைத்து கொள்கிறார்கள்.

இறந்து போன எல்லா ஆன்மாக்களும் நம்மிடம் பேசிக்கொண்டு தான் இருக்கின்றன ஆனால் அவர்கள் பேசுவதை நம்மால் தான் புரிந்து கொள்ள முடியவில்லை .

இதற்க்கு ஒரு சிறந்து உதாரணம் நாளைய பதிவில் காணலாம்.

என்றும்-சிவனடிமை-பாலா.

5 கருத்துகள்:

  1. அன்புள்ள பாலா, மெய் சிலிர்க்க வைக்கும் அனுபவம்... தொடருங்கள்.. வாழ்த்துக்கள்..

    http://anubhudhi.blogspot.com/

    பதிலளிநீக்கு
  2. அன்புள்ள சங்கர் குருசாமி ஐயா ,

    தங்களின் விளக்கங்களினாலே தானே நானும் வளர்கிறேன்.

    பதிநென்மர் சித்தர்களின் பரிபூரண ஆசி உங்களுக்கு கிடைக்கும்.

    என்றும்-சிவனடிமை-பாலா.

    பதிலளிநீக்கு
  3. நீங்கள் பரி பூரண சிவன் அருள் பெற்றவர் :)

    பதிலளிநீக்கு
  4. என்ன உதாரணம் அது ஆவலாக அடுத்த பதிவை காண்கிறேன்

    நண்பரே நன் சென்னை வருகிறேன் பல முறை தட்டி போகும் பட்டனத்தாரின் ஜீவ சமாதி தரிசனத்தை இந்த முறை அவரின் அருளால் காண்பேன் என்று நினைக்கிறன். சென்னை வந்தால் தங்களை காண முடியுமா?

    பதிலளிநீக்கு