செவ்வாய், 17 மே, 2011

சிவவாக்கியரின் பாடல்களில் ஆதியைப்பற்றி சில பாடல்கள் ...

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

குருபெயர்ச்சி எல்லாருக்கும் நன்றாக இருக்கும் என நம்புவோம்.
குருபெயர்ச்சி எனக்கு இடப்பெயற்சியாக அமைந்ததால் . எனக்கு பணி மாற்றம் மற்றும் இட மாற்றம் மற்றும் அலுவலக நேரம் மாற்றம் போன்றவை நிகழ்ந்தையால் ஒண்ணுமே புரியல .

தற்சமயம் இந்த புதிய இடமாற்றம் கொஞ்சம் எனக்கு  இயல்பாகி விட்டதால் .மீண்டும் என் கருத்துகளை உங்கள் முன்னிலையில் வைக்கிறேன்.

சிவவாக்கியரின் பாடல்களில் சில...

ஆதியில்லை  அந்தமில்லை யானநாலு வேதமில்லை
சோதியில்லை சொல்லுமில்லை சொல்லிருந்த தூவெளி
நீதியில்லை நேசமில்லை நிச்சயப் படாததும்
ஆதிகண்டு  கொண்டபின்  அஞ்செழுத்தும் இல்லையே .

---உன்னை உணர்ந்த பின் உனக்கு எதுவும் தேவையில்லை ......

நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை
நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாய்கை மாயகையே
அனைத்துமாய் அகண்டமாய் அநாதிமுன்  அனாதியாய்
நினைக்குள் நாநெக்குள் நீ நினைக்குமாறு எங்ஙனே...

--உன்னையன்றி எதுவும் இல்லை எல்லாமே நீ தான் ---------

கருகலந்த காலமே கண்டுநின்ற காரணம்
உருகலந்த போதலே உன்னை நானுணர்ந்தது
விரிக்கிலென் மறைக்கிலென் வினைக்கிசைந்த போதெல்லாம்
உருகலந்து நின்ற பொது நீயும் நானும் ஒன்றலோ ....

--நீயின்றி நானில்லை----------

என்றும்-சிவனடிமை-பாலா.

5 கருத்துகள்:

  1. அருமையான கருத்துக்கள். சிவவாக்கியரின் சத்திய வாக்குகள் நம் வாழ்வைப் பண்படுத்தட்டும்.

    பகிர்வுக்கு நன்றி.

    http://anubhudhi.blogspot.com/

    பதிலளிநீக்கு
  2. dear sir,

    padalkal arumaiyaga irukinrana. ithan artham eluthi irunthal innum nanraha irukkum. adutha pathivil padal & porul endu eluthavum

    thanks

    பதிலளிநீக்கு
  3. அன்புள்ள சங்கர் ஐயா,

    தங்களின் வருகைக்கும் பதிவுக்கும் நன்றி..

    என்றும்-சிவனடிமை-பாலா.

    பதிலளிநீக்கு
  4. அன்புள்ள அகத்தியரின் வழிப்பாட்டில் உள்ள ஐயா,

    தங்களின் பெயர் எனக்கு தெரியவில்லை இருப்பினும் உங்களின் வலைதளத்தை பார்த்து தாங்கள் குருவின் வழிப்பாட்டில் உள்ளவர்கள் என்று அறியப்பட்டேன்.

    தங்களின் வருகைக்கு நன்றி, பொதுவாக சித்தர் பாடல்களுக்கு பொருள் எழுதுவது கடினம்.

    இந்த பதிவில் உள்ள பாடல்கள் எளிய நடையிலே உள்ளன. இருப்பினும் உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப பொருளுரையுடன் பாடல்களை எழுதுகிறேன்.

    என்றும்-சிவனடிமை-பாலா.

    பதிலளிநீக்கு
  5. அந்த நானரிதலில் தானே பல சோதனைகள் உள்ளது நண்பரே ,

    முயன்று கொண்டிருக்கிறேன் சில படி முன் சென்றால் பல படி பின் சென்றுவிடுகிறேன் எனக்கு ஒண்ணுமே புரியல அவன் செயல் என்ன வென்று.

    பதிலளிநீக்கு