வெள்ளி, 27 மே, 2011

உங்களுக்கு ஞானம் கிடைக்கவேண்டுமா ?

அன்புள்ள  சித்த உள்ளங்களுக்கு ,

என்னுடைய கருத்துகளை தான் இங்கு எழுதிக்கொண்டு இருக்கிறேன் அந்த ஆதி சித்தன் அருளினால்.

நேற்றைய பதிவில் நான் பட்டினத்து அடிகளின் பூரனமாலையில் உள்ள பல ஞான பாடல்களை பதித்து விட்டு  இன்றோடு இந்த ஞானத்தை விட்டு விட்டு வேற ஏதாவது எழுதவேண்டும் என்ற எண்ணத்தில் அதனை பதிவு செய்து பார்த்த போது உண்மையிலே இரண்டு பாடல்கள் தான் வெளியாகிஉள்ளது. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. எல்லாம் அந்த சித்தனின்  செயல் என்று உணரப்பெற்றேன்.

இதனுடன் பட்டினத்து அடிகளின் ஞானத்தை முடிக்கவேண்டும் என்ற என்னுடைய எண்ணத்தை அவர் அடியோடு மாற்றிவிட்டார் என்றே எண்ண தோன்றுகிறது.

வரும் நாட்களில் அவருடைய பூரணமாலையில் உள்ள அனைத்து பாடல்களையும் தினந்தோறும் பத்து பாடல்களாக எல்லாருக்கும் புரியும் வகையில் எழுதலாம் என்ற எண்ணம் உதித்துள்ளது.


உங்களுக்கு ஞானம் கிடைக்கவேண்டுமா ?- அதற்க்கான வழியை பட்டினத்து அடிகள் பூரண மாலையில் பாடியுள்ளார்.

மிகவும் எளிய நடையில் அமைந்துள்ள அவரின் பாடல்களுக்கு விளக்கம் தேவை இல்லை என்றாலும் எனக்கு தெரிந்த கருத்துகளை கூறுகிறேன்.

"எதிர்பார்ப்பு என்று இருக்கும்போது தான் ஏமாற்றம் என்பது விளங்கும் ".

"ஏமாற்றம் என்பது நாம் ஏன் மாற்றம்(மனதளவில்) அடைந்தோம் என்றால்  விளங்கும் ".

"மனதளவில் மாற்றம் அடைந்தாலே போதும் மாற்றத்தை மாற்றாமலே நம்மால் வாழ முடியும் ".


பட்டினத்து அடிகளின் ஞானத்தை அள்ளி பருக விரும்புபவர்களுக்கு கிடைக்கும் பயன் .

பூரண மாலை தனை புத்தியுடன் ஒதினருக்கு
தாரணியில் ஞானம் தழைப்பிப்பாய் பூரணமே !...

வரும் நாட்களில் பூரண மாலையில் உள்ள பாடல்களை காண்போம்.

என்றும்-சிவனடிமை-பாலா.

5 கருத்துகள்:

  1. பெயரில்லா27 மே, 2011 அன்று PM 4:42

    Hi Bala

    Expecting to know all the Poorna Malai songs. Thanks for all your spiritual services.

    Ram, Madurai - 9445256574

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் பாலா அவர்களே
    "மனதளவில் மாற்றம் அடைந்தாலே போதும்"

    பதிலளிநீக்கு
  3. உங்களுக்கு ஞானம் கிடைக்கவேண்டுமா ?

    என்றால் நிச்சயம் வேண்டும் பாலா அவர்களே,

    அதற்காகத்தானே தங்களது அருட்தளத்துக்கு வருகை தருகிறோம்..

    அந்த அருட்சித்தனின் கருணையால் எங்களுக்கும் ஞானம் கைவர வேண்டுகிறோம்.

    நன்றி...

    பதிலளிநீக்கு
  4. ஞானம் என்பதை அனைவரும் பெறவேண்டும் என்ற ரீதியாலான தங்கள் பணி பாராட்டுக்குறியது. வாழ்த்துக்கள்.

    http://anubhudhi.blogspot.com/

    பதிலளிநீக்கு
  5. iyya

    "எதிர்பார்ப்பு என்று இருக்கும்போது தான் ஏமாற்றம் என்பது விளங்கும் ".

    "ஏமாற்றம் என்பது நாம் ஏன் மாற்றம்(மனதளவில்) அடைந்தோம் என்றால் விளங்கும் ".

    "மனதளவில் மாற்றம் அடைந்தாலே போதும் மாற்றத்தை மாற்றாமலே நம்மால் வாழ முடியும் ".

    mika mika arumai

    nanri aiya

    ramu babu

    பதிலளிநீக்கு