திங்கள், 19 மார்ச், 2012

பரங்கிப்பேட்டையில் பாபாஜியின் அருகில்....

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

பரங்கிப்பேட்டையில் பாபாஜியின் அருகில்....

பலநாட்களாக என்னால் எந்தவொரு பதிப்பினையும் பகிர்வு செய்ய முடியவில்லை .

இரண்டு வாரங்களுக்கு முன்னால் நாங்கள் பாபாஜி அவதரித்த புண்ணிய பூமிக்கு சென்று இருந்தோம்.   அங்கு தரிசனம் முடிந்த பிறகு ,கொஞ்ச நேரம் தியான செய்து விட்டு போகலாம் என்று எண்ணம் கொண்டு இருந்தேன்.  நானும் என் நண்பனும் தியானம் செய்ய ஆரம்பித்தோம். ஆனால் அவனுக்கு தியானம் செய்ய தெரியாது , கொஞ்ச நேரம் கண்ணை மூடி கொண்டு பாபாஜியின் நாமத்தை சொல்லி கொண்டு இரு என்று சொல்லிவிட்டு தியானத்தை ஆரம்பித்தோம்.

கொஞ்ச நேரம் கழித்து ,எனக்கு அருகே யாரோ ஒருவர் உட்கார்ந்து கொண்டு வாசியை ஏற்றி கொண்டு இருந்தார் . என்னுடைய எண்ணம் எல்லாம் என் நண்பனின் மேல் இருந்தது .  ஏறக்குறைய 20  நிமிடங்கள் கழித்து நான் எனது கண்களை திறந்து அருகில் இருந்த என் நண்பனை பார்த்தேன் . அங்கு யாருமே இல்லை என்னை தவிர .
 ஒருவேளை இப்போதுதான் எழுந்திருந்து போய் இருப்பான் என்று எண்ணம் கொண்டு வெளியே வந்தேன் . 

ஆனால் என் நண்பனோ, வெளியே  என் மகனிடம் விளையாடி கொண்டு இருந்தான் . உடனே எனக்கு ஒரு எண்ணம் வந்தது .  என் நண்பனிடம்
எப்பொழுது தியானத்தை விட்டு வெளியே வந்தாய் என்று கேட்டேன்.

அவனோ நான் ஒரு 3  நிமிடங்கள் தான் உட்கார்ந்து இருந்தேன் . அதற்க்கு அப்புறமா என்னால் உட்கார முடியல என்று கூறினான்.

எனக்கு ஒரு சந்தோசம் , ஆச்சர்யம் ,பாபாஜியின் அருகில் இருந்து தியானம் பண்ணியதை நினைத்து கொண்டு இருந்ததை .


மறக்க முடியாத நினைவுகளோடு .....பாபாஜியின் துணையோடு ....


 
நீரழிவு நோயின் தன்மையையும் அதனை குணமாக்கும் மருத்துவத்தை   அறியும் முயற்சியில் ஈடுபட்டு அதில் ஓரளவு  வெற்றிபெற்றுள்ளேன். அதற்க்கான மருத்துவ செலவு ஒன்றும் இல்லை ,நீங்கள் உங்களைப்பற்றி நன்றாக தெரிந்து கொண்டு இயற்க்கை வைத்தியத்தின் மூலம் உங்களை நீங்களே குணப்படுத்தி கொள்ள முடியும்.

வாழ்நாள் முழுவதும் மருந்து மாத்திரைகளோடு வாழவேண்டும் என்ற அவசியம் உங்களுக்கு கிடையாது .


அதைப்பற்றிய விபரங்கள் வரும் நாட்களில் காணலாம் .


 http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

நீங்களும் தேவராகலாம்.....

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,


நீண்ட இடைவெளிக்குப்பிறகு  உங்களை சந்திப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன்.

பால் கறத்தல் பற்றி எழுத ஆரம்பித்த பிறகு தான் பல மாற்றங்கள் என்னுள் ஏற்படுகிறது . இதை எழுதலாமா வேணாமா என்ற எண்ணத்திலே பல நாட்கள் போய்விட்டது . ஆனால் இதை குருமுகமாக தான் கேட்டு பயிற்சி செய்து கொள்ள வேண்டும்.  ஆகையால் இதனை விளக்கமாக எழுதும் காலம் கூட கூடிய விரைவில் வரலாம்.


இங்கு பால் என்று குறிப்பிடப்படுவது அமிர்தம் ஆகும் .


தேவர்களுக்கு சாவே கிடையாது(அமிர்தம் உண்டதால் ). ஆக தேவர்கள் மனிதர்களை விட உயர்ந்தவர்களா ?. இல்லை ,இருக்கவே முடியாது .
 நமது சித்தர்கள் இன்றும் உயிரோடு தான் இருந்து கொண்டு 
நம்மிடையே உலவி கொண்டு நம்மை காத்துகொண்டு இருக்கிறார்கள்.

சுருக்கமாக சொல்லபோனால் , நம்மிடம் உள்ள சுக்கிலத்தை முறையான யோக பயிற்சியின் மூலம்  சுத்தம் செய்து அதில் உள்ள உயிர் சக்தியை நம்முடைய கபாலத்தில் சேகரித்து வைத்து கொள்ளவேண்டும். அவ்வாறு சேகரித்து வைத்துள்ள திரவத்தில்(உயிர் சக்தி ) இருந்து ,மற்றொரு யோக மூச்சு(வாசி) பயிற்சியின் மூலம் நம்முடைய அண்ணாக்கில் விழ செய்ய வேண்டும் .
இவ்வாறு செய்தால் நம்முடைய உயிரின் சக்தியை நம்மால் நீட்டிக்க முடியும்.


எந்த அளவுக்கு உயிர் சக்தி உள்ளதோ அந்த அளவுக்கு அவர்களால் இவ்வுலகில்
உயிர் வாழ முடியும்.  இந்த அமிர்தத்தை கொண்டு எல்லாவித வியாதிகளையும் அவர்கள் உடம்பில் இருந்து வெளியேற்றி கொள்ள முடியும். ஏன் இந்த உடலையே அவர்களால் பிரபஞ்சத்தில் கலந்து கொள்ள செய்து கொள்ள முடியும்.

குருவின் பாத கமலங்களை பற்றி கொண்டு அந்த வித்தையை கற்றுக்கொள்ளுங்கள். நீங்களும் தேவராகலாம் .

 http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

புதன், 25 ஜனவரி, 2012

பால் கறத்தல்-1

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு  ,

உலகில் உள்ள அனைத்து பாலுட்டிகளும் பாலை குடித்துதான் வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கிறது .  நம்முடைய வாழ்க்கை
தோன்றுவதில் இருந்து மறையும் வரை உள்ள அனுபவங்களை நினைவு கூர்ந்து நம்மை கொஞ்சம் மாற்றி கொண்டு வாழ்ந்தால் எவ்வித இல்லல்களும் இல்லாமல் நம்மால் வாழ முடியும் .

இவ்வுலகில் நாம் பிறந்தவுடன் நம்மை ஈன்ற தாயானவள் தம்முடைய ரத்தத்தையே பாலாக மாற்றி நமக்கு உணவினை தருகிறாள் . நாம் பிறந்தவுடன் நமக்கு எதுவும் தெரியாது , ஏறக்குறைய
முப்பது நாட்களுக்கு பிறகு தான் நமக்கு கண் பார்வை தெரிகிறது. பிறகு தான் தாயானவள் எல்லாரையும் நமக்கு அறிமுகப் படுத்துவாள். 

குழந்தை பருவம் நமக்கு வாழ்வில் இரண்டு முறை வரும் . முதல் பருவத்தில் நமக்கு எதுவும் தெரியாது . இரண்டாவது முறை வரும்போது நாம் சுதாரித்து கொண்டு நம்மை கொஞ்சம் தயார் படுத்தி கொண்டால் நமக்கு சாவே கிடையாது .

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று -என்று கூறிக்கொண்டு இருந்தால் மட்டும் போதாது . குழந்தை போன்ற மனத்தை நாம் பெற முயற்சி செய்ய வேண்டும் .


தாயானவள் தம்முடைய ரத்தத்தில் இருந்து பாலினை உற்பத்தி செய்து நமக்கு தந்து இந்த உலகில் வாழ இடம்  தருகிறாள் .

குருவானவர் நம்முடைய ரத்தத்தில் இருந்து பாலினை உற்பத்தி செய்து
நமக்கு மரணமில்லா பெருவாழ்வை பெற்று தருகிறார்.  இவ்வுலகின் பிரபஞ்ச ரகசியங்களையும் மனிதர்களின் வாழ்க்கை நெறியையும் தெய்வங்களின் தத்துவங்களையும் நமக்கு விளக்கி ஞானம் என்ற பாலினை நமக்கு தருகிறார்.


என்ன ஒற்றுமை பாருங்கள்...

எப்படி நம்மால் பாலினை உற்பத்தி செய்ய முடியும் ? முடியும் வரை முயற்சி செய்ய வேண்டும்.


விளக்கம் தொடரும் ....

என்றும்-சிவனடிமை-பாலா.

செவ்வாய், 24 ஜனவரி, 2012

இடைக்காட்டு சித்தரின் பால் கறத்தல்: 107 to 112

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

இடைக்காட்டு சித்தரின் பால் கறத்தல்:

சாவா திருந்திடப் பால்கற-சிரம்
  தன்னி லிருந்திடும் பால்கற
 வேவா திருந்திடப் பால்கற -வெறும்
  வெட்ட வெளிக்குள்ளே பால்கற .

தோயா திருந்திடும் பால்கற -முனைத்
தொல்லை வினையறப் பால்கற
வாயா லுமிழ்ந்துடும் பால்கற -வெறும்
வயிறார வுண்டிடப் பால்கற .

நாறா திருந்திடும் பால்கற- நெடு
 நாளு மிருந்திடப் பால்கற
மாறா தொழுகிடும் பால்கற - தலை
மண்டையில் வளரும் பால்கற

உலகம் வெறுத்திடும் பால்கற -மிக்க
ஒக்காள மாகிய பால்கற
கலசத்தினுள் விழப்  பால்கற -நிறை
கண்டத்தினுள் விழப் பால்கற

ஏப்பம் விடாமலே பால்கற -வரும் 
 ஏமன் விலக்கவே பால்கற
தீப்பொறி யோய்ந்திடப் பால்கற -பர
சிவத்துடன் சாரவே பால்கற

அண்ணாவின் மேல்வரும் பால்கற -பேர்
அண்டத்தி லூரிடும் பால்கற
விண்ணாட்டி லில்லாத பால்கற -தொல்லை
வேதனை கெடவே பால்கற .

பால் கறக்க எல்லாரும் தயாரா இருக்கிங்களா ?

விளக்கம் வரும் நாட்களில் தொடரும் ...

என்றும்-சிவனடிமை-பாலா.

திங்கள், 23 ஜனவரி, 2012

இடைக்காட்டு சித்தரின் பால் கறத்தல்..

அன்புள்ள  சித்த உள்ளங்களுக்கு ,

நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன். சித்தர்களைப்பற்றி பேசுவதற்கும் எழுதுவதற்கும் கூட நமக்கு அவர்களுடைய அனுமதி தேவைப்படுகிறது.

என்னுடைய பணியின் சுமை மற்றும் என்னுடைய மக்கள் நலம் இல்லாமை போன்ற காரணங்களால் என்னால் எதுவும் எழுதமுடியவில்லை .
எழுதாத ஒவ்வொரு நாளும் வீண் என்றே என்னும் எண்ணம் உடையவன் நான் . இருப்பினும் அவர்களுடைய அனுமதியின்றி எதுவும் நடக்காது என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் கிடையாது .

வரும் வாரங்களில் இடைக்காட்டு சித்தரின் பாடலில் இருந்து பால் கறத்தல் என்ற பகுதியில் வரும்  சில  பாடல்களை நாம் இங்கு காணலாம்.

பால் கறத்தல் :

இந்த உலகத்தில் நாம் இறக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும் .   நம்மால் இதை செய்து காட்ட முடியுமா ? என்று நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது . ஆனால் இதையே வெற்றிகரமாக செய்து காட்டியவர்கள் தான் நம்முடைய சித்தர்கள் . 

பிறப்பு என்று ஒன்று இருந்தால்
இறப்பு என்பதும் உண்டு -என்பதில் மாற்று கருத்து கிடையாது . இதுவே இயற்கையின் நியதி மற்றும் விதியும் கூட. ஆனால் நம்முடைய சித்தர்கள் இயற்கையின் விதியையும் கூட மாற்ற சக்தி மிக்கவர்கள் என்பதில் ஐயம் இல்லை .

அவர்கள் கூறும் கருத்துகளை நன்கு உணர்ந்து அவர்களை பூசித்து வந்தாலே போதும் மீதியை அவர்கள் பார்த்து கொள்வார்கள் .

அவர்கள் கூறும் கருத்துகள் எல்லாம் ஒரே மாதிரியானவை . எல்லா சித்தர்களும் கூறும் கருத்துகள் ஒன்றே .

உன்னை உணர் என்பது தான்.

வரும் நாட்களில் சில பாடல்களை உங்கள் முன் சமர்பிக்கிறேன்.


என்றும்-சிவனடிமை-பாலா.

சனி, 31 டிசம்பர், 2011

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்-2012

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

உலகில் உள்ள அனைத்து உள்ளங்களுக்கும்  எமது புத்தாண்டு நல்வாழ்த்துகள் .

பழையன கழிதலும் புதியன புகுதலும் -என்ற கோட்பாட்டில் வாழும் நாம் கடந்த ஆண்டில் நடந்த கசப்பான அனுபவங்களின் துணை கொண்டு இனி வரும் நாட்களில் அதுப்போன்ற அனுபவங்களை மீண்டும் ஏற்படுத்தி கொள்ளாமல் வாழ்ந்தால் போதும்.

குருவின் துணை கொண்டு தான் நாம் இந்த பிறவியை முடித்து பிறவா
வாழ்க்கையை  மேற்கொள்ளவேண்டும் .

பாம்பாட்டி சித்தரின் பாடல் -குருவணக்கம்

பொய்ம்மதங்கள்  போதனைசெய் பொய் குருக்களைப்
புத்தி  சொல்லி நன்னெறியிற் போக விடுக்கும்
மெய் மதந்தான் இன்னதென்றும் மேவ விளம்பும்
மெய்குருவின் பதம் போற்றி ஆடாய் பாம்பே

மதம் பிடிப்பது என்பது விலங்குகளுக்கு தான் மனிதர்களுக்கு அல்ல . மதங்களை தாண்டி மனித உள்ளங்களை  நேசித்தால் போதும் .  எல்லா  மதங்களும்   மனிதனால் உருவாக்கப்பட்டவை தான் .

உண்மையான மதத்தை நமக்கு விளக்கம் கூற சற்குருவினால் மட்டும்  தான் முடியும் .

இவ்வாண்டில் எந்தவித  சாதி  சண்டையும், மதக்கலவரங்களும் ஏற்படாமல்
இருக்க எல்லாவல்ல சித்தர்களின் பாதங்களை தொட்டு வணங்கி வேண்டி கொள்வோம் .

http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

வியாழன், 29 டிசம்பர், 2011

நெஞ்சறி விளக்கம்-சிவன் உறையும் இடம்

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

மதிப்பிற்குரிய ஐயா சங்கர் குருசாமி கேட்டுதர்க்கிணங்க எனக்கு தெரிந்த
விளக்கத்தை இங்கே தருகிறேன்.

முதல் பாடலில் நாடு,நகரம்,  வீடு ,நல்ல வாழ்க்கை ,இல்லாள் , மைந்தர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரும் நம்முடன் இருக்கிறார்கள் என்று நினைத்து கொண்டு இருக்கின்றாயே ,இந்த கூடும் ஒரு நாள் அழிந்து போகுமே , இப்படி அழிந்து போகும் கூட்டினை வைத்து கொண்டால் பிறவிகள் பல எடுக்க வேண்டி இருக்குமோ கூறு நெஞ்சே என்று கேட்கிறார் . இந்த கூட்டினை அழியாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ?


இரண்டாவது பாடலில் கூறுவது , என்னதான் படித்தாலும் ,எத்தனை ஏடுகள் படித்தாலும் எத்தனை  நூல்கள் படித்தாலும் ஒன்றும் புண்ணியம் இல்லை என கூறுகிறார்.  இன்று நிறைய ஏடுகள் தியானத்தை பற்றி நமக்கு கிடைக்கிறது ,ஆனால் ஏடுகளை படித்துவிட்டு நாம் தியானத்தை தொடர்ந்தால் பல விளைவுகளை தான் சந்திக்க வேண்டீருக்கும் . எனவே குருவினை கொண்டு இது போன்ற
பயிற்சிகளை கற்று கொள்ளவேண்டும் .

முற்காலத்திலும் சரி, தற்காலத்திலும் சரி மனிதன் தனது இறுதி காலத்தினை கழிக்க கானகத்தை தான் தேர்வு செய்து கொள்கிறான் .ஏனெனில் அங்கு தான் மன  நிம்மதி கிடைக்கும் என நினைக்கிறான். பல சித்திகளை பெறுவதற்காக பல மாதங்களாக காட்டில்
தவம் செய்து கொண்டு மாண்டு போனவர்கள் எண்ணிலா கோடி ஆகும். இதுவும் நமக்கு தேவை இல்லை . இங்கு கானல் நீரினை உண்மையான நீர் என நினைத்துகொண்டு நாம் அலைவதை குறிப்பிடுகிறார். அதுபோல நாட்டிலே தெய்வம் இங்கு இருக்கிறது அங்கு இருக்கிறது என்று மக்கள் அலைவதை பார்த்து தெய்வம் என்பது நமது கூட்டினுள் தான் இருக்கிறது என்று தெளிவாக கூறுகிறார்.

இது உண்மையும் கூட தான் , நமது ஜீவன் நம்மை விட்டு போனால் நாம் சடம் ஆவோம் .இந்த உடலையும் உயிரையும் ஆட்டுவிப்பவனே இறைவன் ஆவான் .


மூன்றாம் பாடலில் நாம் எவ்வாறு இந்த ஆக்கையை அழியாமல் பாதுகாக்க முடியும் என்று கூறுகிறார்  . இதற்க்கு முதலில் நமக்கு ஞானம் கிடைக்கவேண்டும்,  ஞானம் கிடைக்க நல்ல குரு வேண்டும் , நல்ல குரு கிடைத்தால் வாசி போன்ற பயிற்சிகளை நமக்கு கற்று கொடுத்து உண்மையான கயிலையை நமக்கு காட்டுவார்கள் , அவ்வாறு கண்ட கயிலையில் குண்டலினி மூலம் தீபத்தை நெற்றியின் புருவ மையத்தில் எப்படி ஏற்றுவது என்று கற்று கொடுப்பார்கள் . அவ்வாறு ஏற்றிய தீபத்தின் மூலம் உண்மையான சிவலிங்கத்தை நமக்கு காட்டுவார்கள் .

நமது உயிரின் வடிவம் சிவலிங்கம் ஆகும். இதை தான் நமது சித்தர்கள்
எல்லா கோவிலிலும் நாகலிங்கத்தை பிரதிஸ்டை பண்ணி இருப்பார்கள் .
குண்டலினி மூலம் நமது ஜீவனை நம்மால் அடைய முடியும்.

இது எமக்கு தெரிந்த கருத்துகள் .


http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

செவ்வாய், 27 டிசம்பர், 2011

நெஞ்சறி விளக்கம் -இறைவன் உறையும் இடம்

அன்புள்ள சித்த  உள்ளங்களுக்கு ,

நெஞ்சறி விளக்கம் -இறைவன் உறையும் இடம்

நாடென்றும் நகரமென்றும் நலந்திகழ் வாழ்வதென்றும்
வீடென்றும் மனையாளேன்றும் மிக்கதோர் மைந்தரென்றும்
மாடன்றுஞ்  சம்பத்தென்றும் வாஞ்சை கொண்டலைந்தாய் இந்தக் கூடொன்றும் அழிந்தாற் கூடத்தொடருமோ கூறு நெஞ்சே.

 ஏட்டிலே எழுதும் நூல்கள் எத்தனை படித்தும் தீதான்
 காட்டிலே எறித்த திங்கள் கானலிற்  சலம்போலானாய்
நாட்டிலே தெய்வமென்று நடந்தலை யாமாலுன்றன்
கூட்டினுலே நாகைநாதர் குறிப்பறிந் துணர்வாய் நெஞ்சே ...

கிட்டுமோ ஞானயோகம்  கிடைக்குமோ குருவின் பாதம்
கட்டுமோ மூல வாசி காணுமோ கயிலை வீடு
எட்டுமோ நாகலிங்கம் ஏற்றுமோ தீப ஜோதி
தட்டுமோ பளிங்குமேடை தனையரி யார்க்கு நெஞ்சே ...

இறைவன் நம்முள்ளே இருக்கிறான் ....

இந்த சான்று ஒன்றே போதும் என நினைக்கிறேன் ...

http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

ஞாயிறு, 25 டிசம்பர், 2011

நெஞ்சறி விளக்கம்-எண்ணத்தின் வலிமை

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

கீழ்காணும் பாடலில் தெளிவான விளக்கங்கள் உள்ளதால்
எமது விளக்கம் தேவைப்படாது என நினைக்கிறேன்.


குளத்திலே கிடக்கும் ஆமை குளக்கரை முட்டையிட்டு
குளத்துநீர்க்  குள்ளிரிந்து குறிப்புடன் நினைக்கும்போது
குளத்திலே புதைத்த முட்டை கருவுரு வானாற் போலுன்
உளத்திலே நாகை நாதர் உருவறிந்து உணர்வாய் நெஞ்சே .


மருவிய சிலந்திப் பூச்சி வயிற்றினில் நூலுண்டாக்கி
உருவுடன் கூடுக்கட்டி உகந்ததிலிருக்கு மாபோல்
குருபர னுனது கூட்டில் குடியிருப்பதனைப் பார்த்துப்
பெருவெளி நாகை நாதர் பெருமை கண்டருள் சேர்  நெஞ்சே . 

தண்ணீரிலிருக்கும் மீன்கள் தண்ணீரிற் கருவைப்பித்திக்
கண்ணினாற் பார்க்கும்போது கயலுருவானாற் போல
நண்ணிய குருவைக்கண்டு  நாதனல் லுருவைச் சேர்த்து
விண்ணின்மேல் நாகை நாதர் மெல்லடி வெளியார் நெஞ்சே.


எண்ணம் போல் வாழ்க்கை என்பது உண்மை தான் . உயிர்கள் உருவாகும் விதத்தை உவமையாக கூறிய நமது சித்தர்களை நம்மால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை .

பதிநென்மர் சித்தர் பாதம் போற்றி ...
http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

வியாழன், 8 டிசம்பர், 2011

கார்த்திகை தீபவாழ்த்துகள்...

அன்புள்ள சித்தஉள்ளங்களுக்கு ,

நீண்ட இடைவேளைக்கு பிறகு உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. 
எனக்கு பணியில் சிறிது இடமாற்றம் ஏற்பட்டுள்ளதால் தங்களை சந்திக்க முடியவில்லை, தினந்தோறும்    காலை 3 மணி நேரம் பயணம் செய்து அலுவலகத்திற்கு செல்வதும் அதற்குபின் 10 மணி நேரம் அலுவலக
வேலை பார்ப்பதும் ,பின் 3 மணி நேரம் பயணம் செய்து வீட்டுக்கு திரும்ப வேண்டியாகி உள்ளது. 

இருப்பினும் இதுவும் அந்த ஆதி சித்தனின் வேலையாக தான் இருக்கும் . நடப்பது நன்மைக்கே என்ற கோட்பாட்டில் மீண்டும் எழுத முயற்சிக்கிறேன்.

இன்று கார்த்திகை தீபம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த கார்த்திகை தீபவாழ்த்துகள்.

திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீபம் போல உங்கள் மனதிலும் ஆன்ம ஜோதியை ஏற்றுங்கள் . இறையருள் பெறுங்கள் .

நெஞ்சறி விளக்கம் -10

வீட்டிருள் போகவென்றே விளக்கினை ஏற்றி வைத்தால்
வீட்டிருள் எங்கே போச்சு விளக்கொளி எங்கே போச்சு
கூட்டினுள் நடஞ்செய் ஈசன் குறிப்பறியாமல் நீதான்
நாட்டினுள் அலைந்தால் நாகை நாதரை வணங்கு நெஞ்சே ..


http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.