திங்கள், 6 ஜூன், 2011

பட்டினத்து அடிகளின் பூரணமாலை 11 -> 20

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு  ,

காலத்தின் வேண்டுகோளுக்கிணங்க என்னால் மிகச்சிறிய அளவில் விளக்கத்தைத் தான்  கொடுக்க முடிகிறது .  பட்டினத்து அடிகள் போல எல்லா சித்தர்களும் தங்களின் ஞானத்தைப் பற்றி பாடியுள்ளார்கள் .  அவர்களின் பாடலும் இதனுடன் சேர்த்து தர 
என் மனது ஆவலாக உள்ளது . இருப்பினும் பூரண மாலையை முழுமையாக தரவேண்டும்
என்பதால்  இப் பாடல்களுடன்  சிறிய விளக்கத்தை மட்டும் தற்சமயம் தருகிறேன்.

பட்டினத்து அடிகளின் பூரணமாலை தொடர்ச்சி ....

11 ) ஊனுக்குள் நீ நின்று உலாவினதைக் காணாமல்
       நான் என்றிருந்து நலன் அழிந்தேன் பூரணமே !
     
விளக்கம் : கடவுள் வாழும் ஆலயம் நம் உடலாகும் . 

12 ) மெய் வாழ்வை நம்பி விரும்பி மிக வாழாமல்
       பொய் வாழ்வை நம்பி புலம்பினேன்ப்  பூரணமே!

விளக்கம் : இந்த உடல் மெய்யென்று நம்புதல் .

13 ) பெண்டுபிள்ளை  தந்தை தாய் பிறவியுடன் சுற்றம் இவை
        உண்டென்று நம்பி உடல் அழிந்தேன் பூரணமே !

விளக்கம் : மேற்கூறியவை நாம் இறக்கும்போது நம்முடன் கூட வராதவை  . எல்லாம் மாயை என்று எண்ணுதல் .

14 ) தண்டிகை பல்லக்குடனே  சகல சம்பத்துகளும்
       உண்டென்று நம்பி  உணர்வழிந்தேன் பூரணமே !

 விளக்கம் : உற்றார் ,உறவினர்கள் என்றும் நமக்கு நிலையான  உறவினை 
கொண்டவர்கள் என்று எண்ணுதல் . 

15 ) இந்த உடல் உயிரை எப்போதும் தான் சதமாய்ப்
        பந்தமுற்று  நானும் பதம் அழிந்தேன் பூரணமே !

விளக்கம் : உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவினை கூறுதல் .

16 ) மாதர் பிரபஞ்ச மயக்கத்திலே விழுந்து 
       போதம் மயங்கிப் பொறி அழிந்தேன் பூரணமே !

விளக்கம் :  விலை மாதர்களின் பேச்சினை கேட்டு வாழ்வில் நிலையாமை பற்றி கூறுவது.

17 ) சரியை கிரியா யோகம் தான் ஞானம் பாராமல்
        பரிதி கண்ட மதியது போல பயன் அழிந்தேன் பூரணமே !

விளக்கம் : ஆன்மிகத்தின் அடிப்படையை கூறுவது .

18 ) மண் பெண் பொன்னாசை மயக்கத்திலே விழுந்து
       கண் கேட்ட மாடது போல  கலங்கினேன் பூரணமே !

விளக்கம் : மூன்று ஆசைகள் பற்றி கூறுவது. இதன் மாயையில் சிக்காத மனிதர்களே இல்லை என கூறலாம்.
 மண் ஆசை : மகாபாரதம்
பெண் ஆசை : ராமாயணம்


19 ) தனி முதலைப் பார்த்து தனித்திருந்து வாழாமல்
        அநியாயமாய்ப்  பிறந்திங்கு அலைந்து நின்றேன் பூரணமே !

 விளக்கம் : பிறப்பின் தன்மையை கூறுவது.

20 ) ஈராறு  தன்கலைக்குள்  இருந்து கூத்து ஆடினதை
       இருவிழியால் பாராமல் ஈடழிந்தேன் பூரணமே !..

விளக்கம் :  நமது மூச்சு காற்று வெளியிடும் போது 12  அங்குலமாக போகும். 
அவ்வாறு செலவாகும் வாசியினை பற்றி கூறுவது. இதனைப்பற்றி சிவயோக சாரத்தில் 
வரும் பதிவுகளில் காணலாம்.  
என்றும்-சிவனடிமை-பாலா.

2 கருத்துகள்:

  1. பாடல்களுக்கு விளக்கங்கள் சற்று நீளமாகவே தேவைப்படுகிறது. ஏனெனில் சித்தர்களின் கூற்று சூட்சுமம் எல்லோருக்கும் பிடிபடுவதில்லை. அதை சூட்சுமமாக உணர்ந்த உங்களைப் போன்றவர்கள் தரும் விளக்கங்கள்தான் எங்களைப்போன்ற எளிய மக்களின் அறிவுக்கண்ணை இன்னும் விசாலமாக்கும் என்று நம்புகிறேன்.

    http://anubhudhi.blogspot.com/

    பதிலளிநீக்கு
  2. பெற்றேனே பேரதனைப் பெற்றுக்கொண்டு
    பெருமையுள சதுரகிரி மலைக்குமேலே
    நற்றேனே பாய்ந்தோடும் அருவியோடை
    நாற்புறமுந் தானுண்டு நானுஞ்சென்றேன்
    பற்றாசை யில்லாத சட்டைநாதர்
    பலம்பெற்ற கோரக்கர் தன்னைக்கண்டு
    கற்றேனே மூலிகையு மவர்க்குச்சொன்னே஠ ?்
    கண்டவருக் குற்றதிது பலிக்குந்தானே

    பலிக்குமே நினைத்ததெல்லாங் கலிகாலத்திற்
    பலங்கொண்ட தெய்வமகா லிங்கர்தன்னைச்
    சலிக்காமற் கண்டுதெரி சித்தபேர்க்குத்
    தனையரொடு சகலபாக் கியமுமுண்டாம்
    ஒலிக்குமே உலகத்தார்க் குதவிமெத்த
    உண்மையாம் சுந்தானு மங்கேபாரு
    சொலிக்குமே சதுரகிரி மலையைப்பற்றி
    சொன்னாரென் னையர்நூல் காட்டினேனே

    பதிலளிநீக்கு