செவ்வாய், 28 ஜூன், 2011

எனது மகனின் முதலாமாண்டு பிறந்த நாள்(29/06)

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

எனது மகனின் முதலாமாண்டு பிறந்த நாள் வருகின்ற புதன்கிழமை (29 /06  ) எனது இல்லத்தில் நடைபெறுகிறது .

சித்தர்  முழக்கங்களை படித்து வரும் சித்தர்களின் ஆசி பெற்ற உங்களின் ஆசிர்வாதங்களை   என்னுடைய புதல்வனுக்கு வழங்கும்படி அடியவர்களின் அடியை பற்றி வேண்டிகொள்கிறேன்.

அவருடைய பெயர் ஜெயசிவமகாலிங்கம்.

எல்லா தடைகளையும் உடைத்தெறிந்து முழுக்க முழுக்க சதுரகிரியின் சந்தனத்தில் விழைந்தவர் .

அவர் அவதரித்தே ஒரே சுவாரஷ்யமான கதை தான். அதைப்பற்றி வரும் நாள்களில் பகிர்ந்து கொள்கிறேன்.  இப்புவியில் ஜனனம் எடுப்பதற்கு முன்பே சித்தர்களின் ஞான கோவையை முழுவதும் அறிந்தவர்.

உங்களின் பூரண ஆசிகளை மனமார எதிர்ப்பார்க்கும் .....


நாளை மதியம் பெரம்பலூரில் உள்ள  கௌதம புத்தர் அறக்கட்டளையில் இருக்கும் காது கேளாதோர் மற்றும் முதியோர்களுக்கு அன்னத்தானம் நடைபெறும்.

இது விளம்பரத்திற்கு அல்ல , அவர் அவதரித்தருக்கு பின் தான் என் வாழ்வில் நிறைய மாற்றம் ஏற்பட்டது அதில் இதுவும் ஒன்று ..

என்றும்-சிவனடிமை-பாலா.

12 கருத்துகள்:

 1. பிறந்தநாள் விழாக்காணும் குழந்தைக்கு அனைத்து வளங்களும் நலமும் இறைவன் அருள்புரிய எங்கள் குடும்பத்தின் சார்பாக வேண்டுகிறேன்

  பதிலளிநீக்கு
 2. Hi Bala

  God will bless Master Jaya Siva Mahalingam
  Convey my blessings to him
  Valga Valamudam
  Valarga Nalamudan
  Endrum Anbudan
  Ram - Madurai - 9445256574

  பதிலளிநீக்கு
 3. மனப்பூர்வ பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. பிறந்தநாள் கொண்டாடும் ஐயாவின் குழைந்தைக்கு எல்லாம் வளமும் நலமும்

  பெற இறைவன் அருள்புரிய இறைவனை வேண்டிகிறேன்

  !என்றும் அன்புடன்!
  இறைவனடி யுவராஜா

  பதிலளிநீக்கு
 5. சித்தர் பரம்பரையில் வந்துதித்த செல்வம் ஜெயசிவமகாலிங்கத்தை மனமார வாழ்த்துகிறேன்.,

  பதிலளிநீக்கு
 6. அன்புள்ள பாலா, தங்கள் அருமை மகனுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள். நல்ல உடல் நலமும், மன நலமும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கிறேன்.

  http://anubhudhi.blogspot.com/

  பதிலளிநீக்கு
 7. அன்பு பாலா,
  தங்களுடைய மகன் ஜெயசிவமகாலிங்கம் ஊன் எனும் உடலெடுத்து இந்த ஜென்மத்தில் முதல் பிறந்த நாள் காணும் இந்நன்னாளில் இறைவனின் அருளாசியை பெற்றுய்ய, அந்த ஜெயசிவமகாலிங்கத்திடமே பிரார்த்தனை செய்து, குழந்தையை ஆசிர்வதித்து மகிழ்கின்றேன்.
  வாழ்க நீடூழி, வளர்க அருட்செல்வத்தோடு.

  பதிலளிநீக்கு
 8. பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  குழந்தை அனைத்து வளங்களும் நலமும், சித்தர்கள் அருள்புரிய எங்கள் குடும்பத்தின் சார்பாக வேண்டுகிறேன்

  பதிலளிநீக்கு
 9. ஜெயசிவமகாலிங்கம், அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம், நீண்ட ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன்! இந்த மாமாவின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

  சித்தர் முழக்கம் மூலம் எங்களுக்கு சிறந்த ஒரு சிந்தனை விருந்து தரும் தாங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்வில் அனைத்து வளங்களையும் பெற்று குரு அருளாலும் இறை அருளாலும் அமைதி மகிழ்ச்சி வெற்றி பெற்று மேன்மேலும் சிறப்பாய் வாழ எனது மனமுவர்ந்த வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்..!

  பதிலளிநீக்கு
 10. பிறந்தநாள் விழாக்காணும் குழந்தை ஜெயசிவமகாலிங்கம்,அமைதி மகிழ்ச்சி பெற்று வாழ்க்கை மேன்மேலும் மேன்மையடைய எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 11. சற்று தாமதமாய் வந்திருக்கிறேன் என்றாலும்
  சத்தியமாய் வாழ்த்துகிறேன்.

  சர்வ வல்லமை பொருந்திய
  சர்வேஸ்வரனின் அருளால்
  சகல சௌபாக்கியங்களும் பெற்று

  பாலாவின் - பாலன்
  பன்னெடுங்காலம் வாழ்க வாழ்க என
  வாழ்த்தும்.

  அன்பன் சிவ. சி.மா.ஜா

  பதிலளிநீக்கு
 12. may god bless your child with love, peace and harmony for ever. Sorry for belated wishes :(

  பதிலளிநீக்கு