அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,
விளக்கம் : 41 -->50 ..
//நரம்பு தசை தோல் எலும்பு நாற்றத்துக்குள்ளிருந்து//-இந்த ஜீவன் வாழும் இடத்தினை பற்றி குறிப்பிடுகிறார்
//சிலந்தியிடை நூல்போல் சீவசெந்துக் குள்ளிருந்த //-பந்த பாசங்களை பற்றி குறிப்பிடுகிறார் .
//குருவாய் பரமாகிக் குடிலை சத்தி நாதவிந்தாய் //-பரம்பொருள் வாழும் குடில் என்று குறிப்பிடுகிறார்.
//ஒளியாய் கதிர்மதியாய் உன் இருளாய் அக்கினியாய் //-இறைவனின் உருவமானது எப்படி வெளிப்படும் என்பதை குறிப்பிடுகிறார்.
//இடையாகிப் பிங்கலையாய் எழுந்த சுழுமுனையாய்//-இங்கு உடலை இடைகலையாகவும் உயிரை பிங்கலையாகவும் ஜீவனை சுழுமுனையாகவும் குறிப்பிடுகிறார்.
//மூலவித்தாய் நின்று முளைத்து உடல்தோறும் இருந்து//-தாம் எவ்வாறு கருத்தரித்து இந்த உலகில் வாழ்ந்து வளர்கிறோம் ஆனால் எமன் வரும் நாளை நம்மால் அறிந்து கொள்ளமுடியாமல் போகிறது. அவன் வரும் நாளை அறியும் கணக்கு தெரிந்தவர்கள் தான் சித்தர்கள். வாசியை கொண்டு அவனை வெல்ல முடியும் வேறொரு வழி எதுவும் கிடையாது. .
//உள்ளும் புறம்புமாய் உடலுக்குள் நீ இருந்தது//-உடலில் சிவனை காணுதல் .
//தாயாகித் தந்தையாய்த் தமர் கிளைஞர் சுற்றம் எல்லாம் //-பந்த பாசங்களில் சிவனை காணுதல்.
//குலங்கள் எழு வகையில் நின்ற குறிப்பு அறியேன்//-சிவனை அறிதல்
//ஆணாகிப் பெண்ணாய் அலியாகி வேற்றுருவாய் //-ஆண் ,பெண் பேதமின்றி கூறுதல் .
பூரணமாலை தொடர்ச்சி....
51 ) வாலையாய்ப் பக்குவமாய் வளர்ந்து கிழம் தானாகி
பாலையாய் நின்ற பயன் அறியேன் பூரணமே !
52 ) பொய்யாய்ப் புவியாய்ப் புகழ்வா ரிதியாகி
மெய்யாகி நின்ற வியன் அறியேன் பூரணமே!
53 ) பூவாய் மணமாகிப் பொன்னாகி மாற்றாகி
நாவாய்ச் சொல்லான நயம் அறியேன் பூரணமே !
54 ) முதலாய் நடுவாகி முப்பொருளாய் மூன்றுலகாய்
இதமாகி நின்ற இயல் அறியேன் பூரணமே !
55 ) ஊனாய் உடல் உயிராய் உள் நிறைந்த கண்ணொளியாய்த்
தேனாய் ருசியான திறம் அறியேன் பூரணமே !
56 ) வித்தாய் மரமாய் விளைந்த கனியாய்ப் பூவாய்ச்
சித்தாகி நின்ற திறம் அறியேன் பூரணமே !
57 ) ஐவகையும் பெற்றுலக அண்டபகிரண்டம் எல்லாம்
தெய்வமென நின்ற திறம் அறியேன் பூரணமே !
58 ) மனமாய்க் கனவாகி மாய்கையாய் உள்ளிருந்து
நினைவாகி நின்ற நிலை அறியேன் பூரணமே !
59 ) சத்திசிவம் இரண்டாய்த் தான் முடிவில் ஒன்றாகிச்
சித்திரமாய் நின்ற திறம் அறியேன் பூரணமே !
60 ) பொறியாய்ப் புலன் ஆகிப் பூதபேதப் பிரிவாய்
அறிவாகி நின்ற அளவறியேன் பூரணமே !..
http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.
அருமையான விளக்கங்கள். சித்தர்களின் பூரண ஆசி இருந்தால்தான் இப்படிப்பட்ட விளக்கங்கள் தர முடியும். தொடர்ந்து எழுதுங்கள்.
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி..
http://anubhudhi.blogspot.com/