வியாழன், 2 ஜூன், 2011

பட்டினத்து அடிகளின் பூரணமாலை ->4 - 7 விளக்கம்...

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு  ,

"உருத்திரனை இருதயத்தில் உண்மையுடன் பாராமல் "---

 நமது நெஞ்சு பகுதியில் இருதயத்திருக்கு அருகில் "அனாகத சக்கரம் "அமைந்துள்ளது.  இதன் உயிர் மந்திரம் 'யம்' ஆகும். இதன் அதிபதி உருத்திரன் .இது 12  இதழ்களை கொண்டுள்ளது .
இதன் பஞ்ச பூதத் தலம் "காற்று" ஆகும் .  இங்கு நாம் கவனிக்கவேண்டியவை  நமது உடலில் நுரையீரல் எங்குள்ளதோ அதற்க்கு அருகில் தான் இந்த சக்கரம் உள்ளது என்று அழகாக பாடிவைத்து விட்டு சென்றுவிட்டார்கள் . இங்குள்ள வர்மம் "நேர்மைய வர்மம்"  ஆகும்.


"கருத்தழிந்து நானும் கலங்கினேன் "---இதற்க்கு வாசியை  பற்றிய உண்மையை தெரியாமல் தான் கலங்கியதாக கூறுகிறார் .

"விசுத்தி மகேசுவரனை விழி திறந்து பாராமல் "--
இது நமது தொண்டை பகுதியில் உள்ளது. இதன் அதிபதி மகேசுவரன் . இது 16  இதழ்களை கொண்டுள்ளது . இதன் பஞ்ச பூதத் தலம் "ஆகாயம் "  ஆகும்.  இதன் உயிர் மந்திரம் 'ஹம்' ஆகும். இங்குள்ள வர்மம் "தும்மி வர்மம்"  ஆகும்.

"பசித்துருகி நெஞ்சம் பதறினேன் "--இந்த சக்கரத்தின் தன்மையை உணர்ந்து கொண்டால் ,நம்மால் உணவின்றி வாழமுடியும்.  யோகிகள் உணவில்லாமல் பல நூறாண்டுகள் வாழும் சூட்சமம் இந்த சக்கரம் தான். 
இக்கால சூழ்நிலையில் "கிரியா பாபாஜி தியான " மையத்தில் இந்த கலை சொல்லி தரபடுகிறது.
நம்மால் ஒவ்வொரு சக்கரத்தில் இருந்தும் சுவாசத்தை பண்ண முடியும். ஆனால் அதனை முறையோடு குருவின் துணைகொண்டு பயில வேண்டும்.

இந்த கலையின் மகிமையை அறிந்து கொள்ளாமல் பசித்து உருகி நெஞ்சம் பதறினேன் என கூறுகிறார் .


" நெற்றி விழியுடைய நிர்மல சதாசிவத்தைப்"-- இது நமது உடலில் உள்ள நெற்றி கண் ஆகும். இதற்க்கு  ஞான கண் அல்லது அருட்பெருஞ்சோதி அல்லது ஆக்கினா என்று பல பெயர்களால் வழங்கப்படுகிறது.  இதன் அதிபதி சதாசிவம் . இதன் உயிர் மந்திரம் 'ஓம்' . இது ஈரதழ்களை உடையது .  

ஒருவனின் வாழ்வில் ஞானம் தோன்றுவது இந்த சக்கரத்தின் மூலம் தான். இது பிட்யூட்டரி சுரப்பி என்று அறிவியல் உலகத்தில் அறியபடுகிறது.  நமது உயிர் தங்கும் இடம் இந்த இடம் தான். சிவனின் உருவத்தை காண்பதும் இந்த இடம் தான்.

சித்தர்கள் இமயம் என்பதை இரண்டு மையங்களுக்கு இடையில் உள்ளது என்று சூட்சமாக சொல்லிவிட்டு சென்று விட்டார்கள் .  நமது இரண்டு புருவ மையங்களுக்கு இடையில் உள்ள சக்கரத்தின் தன்மையை அறிவது தான் இமயமலையை அறிவது. அதனை விட்டுவிட்டு இமயமலைக்கு செல்வதினால் ஒன்றும் லாபம் இல்லை . ஏனெனில் நான் மூன்று முறை இமயமலைக்கு  சென்று வந்தும் எனக்கு ஒன்றும் தெரியவில்லை (இது எனது  தனிப்பட்ட கருத்து ). 

இந்த சக்கரத்தின் மூலம் எண்ணற்ற சித்துகளை நம்மால் பெற இயலும். ஆனால் இந்த நிலையை அடையும் போது சித்துகளும் மாயை என்ற எண்ணம் தோன்றும்.

"புத்தியுடன் பாராமல் பொறி அழிந்தேன் "--இதன் மகத்துவத்தை புத்தி கொண்டு அறியாமல் அழிந்தேன் என புலம்புகிறார்.

"நாதவிந்து தன்னை நயமுடனே "--இது ஏழாவது சக்கரம் ,சிலர் இதனை சக்கரம் என்று எடுத்து கொள்வது இல்லை . இதற்க்கு சகச்த்தாரம் என்று பெயர் அல்லது கைலாயம் என்று பெயர். இது நமது தலையின் மூளைக்கு மேல் உள்ளது. இது ஆயிரம் இதழ்கள் கொண்டது.  இதற்க்கு அதிபதி யாரும் இல்லை. இதற்க்கு மந்திரம் எதுவும் இல்லை . இதுவே சர்வமும் சிவம் என்ற நிலையில் யோகிகள் இருக்கும் நிலை ஆகும்.

இதுவே சமாதி நிலையை அடைய உதவும் சக்கரம் ஆகும்.
இங்கு தான் சிவமே நாம் நாமே சிவம் என்று தத்துவத்தை உணரும் இடமாகும். 
சதாகாலம் பிரபஞ்சத்தில் கலந்திற்க்கும் இடம் இதுவாகும்.

ஆகையால் தான் இமயமலையில் உள்ள கைலாசத்திற்கு நாம் எல்லாம் யாத்திரை போகிறோம்(இது புறவழிபாடு).
இதனையே நமது சித்தர்கள் உடலின் உள்ள சக்கரங்களை கொண்டு அதனை அடைந்து இருக்கிறார்கள்(இது அகவழிபாடு ) .

நமது மூதாதையர்கள் செய்த அனைத்து புறவழிப்பாட்டினயும் உணர்ந்து அதனை அகவழிப்பாடாக மாற்ற வேண்டியது நமது கடமையாகும்.

தொடரும்.... 

என்றும்-சிவனடிமை-பாலா.

5 கருத்துகள்:

  1. //நமது இரண்டு புருவ மையங்களுக்கு இடையில் உள்ள சக்கரத்தின் தன்மையை அறிவது தான் இமயமலையை அறிவது. அதனை விட்டுவிட்டு இமயமலைக்கு செல்வதினால் ஒன்றும் லாபம் இல்லை .//

    SuPer...Keep it Up :)

    பதிலளிநீக்கு
  2. ஆகா... நல்ல விளக்கம்.,

    தொடர்ந்து எழுதுங்கள் பாலா

    பதிலளிநீக்கு
  3. நமது மூதாதையர்கள் செய்த அனைத்து புறவழிப்பாட்டினயும் உணர்ந்து அதனை அகவழிப்பாடாக மாற்ற வேண்டியது நமது கடமையாகும்.//
    ஆழ்ந்த பொருளை அள்ளித்தந்த பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் பாலா அவர்களே,

    //இந்த சக்கரத்தின் மூலம் எண்ணற்ற சித்துகளை நம்மால் பெற இயலும். ஆனால் இந்த நிலையை அடையும் போது சித்துகளும் மாயை என்ற எண்ணம் தோன்றும்.//

    ஆம்.. சித்து பெற முயற்சித்தால் முத்தி பெற தாமதமாகும் எனப் படித்திருக்கிறேன்..

    அருமைய ஆக்கம்.. நன்றி..

    பதிலளிநீக்கு
  5. அருமையான விளக்கங்கள். இவைகளை முறையாக கற்றுக் கொடுக்க ஒரு நல்ல குரு அனைவரையும் வந்தடைய வேண்டுகிறேன்.

    http://anubhudhi.blogspot.com/

    பதிலளிநீக்கு