அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,
பட்டினத்து அடிகளின் பூரணமாலையை எழுத ஆரம்பித்த பிறகு , என் மனதில் பல வித எண்ணங்கள் தோன்றுகிறது . இன்னும் பத்து பாடல்கள் கூட விளக்கம் எம்மால் கொடுக்க முடியவில்லை எனும்போது கொஞ்சம் வருத்தமாகவும் தான் இருக்கிறது.
விளக்கங்களை ஒரே பதிவில் நம்மால் கொடுக்க முடியும் .ஆனால் எனக்கு தெரிந்த கருத்துகளை இந்த பாடல்களுடன் சேர்த்து கொடுக்கும்போது தான் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது.
எனக்கு தெரிந்த சித்தர்களின் யோக நெறிகள் மற்றும் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறை ,அவர்களின் தத்துவங்கள் அனைத்தும் மக்களுக்கு சென்றடைவதே எனது நோக்கமாகும்.
நேற்றைய பதிவில் இமயம் என்பதற்கு இரண்டு இமைகளின் மையம் என்று குறிப்பிட்டு இருந்தேன் . இதற்க்கு நல்ல பின்னூட்ட கருத்துகள் கிடைத்துள்ளது. இது நமது சித்தர்கள் கூறியவையாகும். நான் ஒரு கருவியாக தான் இங்கு செயல்படுகிறேன் என்பதனை சொல்லிகொள்கிறேன்.
கைலாயம் என்பது நமது உடலில் தான் உள்ளது வேறெங்கும் இந்த உலகில் கிடையாது. ஆறாவது சக்கரத்தை தாண்டி போனால் நாம் கைலாயத்தை சென்றடைய முடியும். யோகிகள் , ஞானிகள் ,சித்தர்களின் ஆத்மா(உயிர் ) கைலாய வழியாக தான் பிரமத்தை அடைகிறது .
ஏனைய மக்களின் ஆத்மா மூத்திரம், விந்து,மலம், கருவிழி இந்த நான்கு வழியாக தான் எல்லாருடைய உயிரும் பிரியும் இதில் எந்த மாற்றமும் இல்லை . உங்களுக்கு சந்தேகம் இருந்தால் இறக்கும் தருவாயில் உள்ளவர்களை பாருங்கள் அது உங்களுக்கு புரியும்.
இதனால் தான் இறந்தவர்களை குளிப்பாட்டி பின் நாம் அடக்கம் செய்கிறோம் .
"நாதவிந்து தன்னை நயமுடனே "--இதற்கு விளக்கம் தரவேண்டும் என்கிறபோது நான் சில விசயங்களை இங்கு குறிப்பிட்டு தான் ஆகவேண்டும்.
நாதம் என்பது "ஒலி", "சக்தி", "பெண்","வாலை".
விந்து என்பது "ஒளி","சிவன்","சதாசிவம்", "பிரமம்".
மேற்கூறிய இரண்டும் இரண்டறகலத்தல் ஒரு உண்மையான உறவாகும். சாதாரண மக்களாகிய நாம் திருமணம் செய்து கொண்டு பெண்களுடன் உறவு கொண்டு ,தமது சந்ததிகளை பெருக்கிகொள்கிறோம். பிறகு ஞானம் கிடைத்த பிறகு தம் உடலிலே அதனை உணர்ந்து உறவு கொண்டு பேரின்பத்தை அடைகிறோம் .
யோகிகள், ஞானிகள் ,சித்தர்கள் தம் உடலிலே உள்ள பெண்ணை மணந்து அவளை சிவனுடன் இனைய செய்கிறார்கள் . இந்த நிகழ்வின் மூலம் தான் அவர்கள் பேரின்பத்தை அடைகிறார்கள்.
மூலாதாரத்தில் உள்ள சக்தியை கைலாயத்தில் உள்ள சிவனுடன் சேர்த்து வைத்தாலே பேரின்பமாகும். உங்களுக்கு புரியும் என நினைக்கிறேன். புரியவில்லை என்றால் இன்னொரு பதிவில் இதனை விளக்கமாக கூறுகிறேன். ஒவ்வொரு உடலிலும் இரண்டு சக்திகள் உண்டு ஆண்மை மற்றும் பெண்மை. இது சரிசமமாக இருந்தால் பிரச்சனை இல்லை ,இதில் குறைவு ஏற்படும் பொது தான் அது பேடி, அலி என்று மாறுபடுகிறது. உடலில் உள்ள பெண்மையை ஆண்மை அடைவது தியானமாகும் அதுவே ராஜ யோகமாகும் . இதற்க்கு தகுந்த பயிற்சியும் முயற்சியும் தேவை.
முறையாக எதனையும் கற்று கொள்ளவில்லை என்றால் விளைவுகள் அதிகமாக இருக்கும்.
எல்லாரும் சொல்வார்கள் சிவனுக்கு இரண்டு பொண்டாட்டி . இதனை நானும் ஒப்புகொள்கிறேன். எல்லாம் தெய்வங்களுக்கும் ரெண்டு பொண்டாட்டி தான் அதில் எந்த மாற்றம் இல்லை . ஒன்று உடலுக்கு மற்றொண்டு உள்ளத்துக்கு(தியானம் , யோகம், ஞானம் ) .
ஒன்று புறவாழ்க்கை(பெண் ) மற்றொண்டு அகவாழ்க்கை(வாலை சக்தி ) .
சிவன் -சக்தி புறவாழ்க்கை , கங்கை -அகவாழ்க்கை
முருகன் -தெய்வானை -புறவாழ்க்கை , வள்ளி -அகவாழ்க்கை
கணபதி -சித்தி -புறவாழ்க்கை , புத்தி -அகவாழ்க்கை
திருமால்- ஸ்ரீதேவி -புறவாழ்க்கை , பூமாதேவி -அகவாழ்க்கை .
நமது மூதாதையர்கள் என்றும் அறிவில் சிறந்தவர்கள் என்பதனை இந்த சான்று ஒன்றே போதும். அவர்கள் கூறியதை நம்மால் தான் புரிந்து கொள்ள முடியவில்லை.
"உச்சி வெளியை உறுதியுடன் பாராமல் "---
பரவெளியை ,பிரமத்தை பார்த்தல் -உடலை விட்டு வெளியே செல்லுதல் .
"மூக்கு முனையை முழித்திருந்து பாராமல் "--- வாசி பயிற்சி ஆரம்பிக்கும் இடம்.
"இடைபிங் கலையின் இயல்பறிய மாட்டாமல் "--- நமது உடலில் ஓடும் நாடிகளின் இயல்பை அறிவது . இதனைப்பற்றி ஒரு விளக்கமான பதிவினை வரும் நாட்களில் பகிர்கிறேன்.
தொடரும்....
என்றும்-சிவனடிமை-பாலா.
நமது மூதாதையர்கள் என்றும் அறிவில் சிறந்தவர்கள் என்பதனை இந்த சான்று ஒன்றே போதும். அவர்கள் கூறியதை நம்மால் தான் புரிந்து கொள்ள முடியவில்லை.//
பதிலளிநீக்குதங்கள் அரிய விளக்கங்களுக்கு நன்றி ஐயா.
தெளிவான விளக்கங்களுக்கு நன்றி ..
பதிலளிநீக்குபாலா,அருமையான விளக்கங்கள். தொடருங்கள்..
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
http://anubhudhi.blogspot.com/
//சிவன் -சக்தி புறவாழ்க்கை , கங்கை -அகவாழ்க்கை
பதிலளிநீக்குமுருகன் -தெய்வானை -புறவாழ்க்கை , வள்ளி -அகவாழ்க்கை
கணபதி -சித்தி -புறவாழ்க்கை , புத்தி -அகவாழ்க்கை
திருமால்- ஸ்ரீதேவி -புறவாழ்க்கை , பூமாதேவி -அகவாழ்க்கை .//
வள்ளி -இட கலை
தெய்வானை -பிங்கலை
முருகன்- சுழி முனை
பார்வதி -இட கலை
கங்கா தேவி -பிங்கலை
சிவன் -சுழி முனை
பாமா -இட கலை
ருக்மணி- பிங்கலை
கிருஷ்ணா -சுழி முனை
(நன்றி :ஸுவாமி ஓம்கார்)
Iyaa,
பதிலளிநீக்குThelivana vilkkangalay alithullergal.
ungal siddar pani thodarattum.