அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,
பூரணமாலை தொடர்ச்சி...
41 ) நரம்பு தசை தோல் எலும்பு நாற்றத்துக்குள்ளிருந்து
வரம்பரிய மாட்டாமல் மயங்கினேன் பூரணமே !
42 ) சிலந்தியிடை நூல்போல் சீவசெந்துக் குள்ளிருந்த
நலந்தனைத் தான் பாராமல் நலம் அழிந்தேன் பூரணமே !
43 ) குருவாய் பரமாகிக் குடிலை சத்தி நாதவிந்தாய்
அறுவை உருவானது அறிகிலேன் பூரணமே !
44 ) ஒளியாய் கதிர்மதியாய் உன் இருளாய் அக்கினியாய்
வெளியாகி நின்ற வியன் அறியேன் பூரணமே !
45 ) இடையாகிப் பிங்கலையாய் எழுந்த சுழுமுனையாய்
உடல் உயிராய் நீ இருந்த உளவறியேன் பூரணமே !
46 ) மூலவித்தாய் நின்று முளைத்து உடல்தோறும் இருந்து
காலன் என அழிக்கும் கணக்கு அறியேன் பூரணமே !
47 ) உள்ளும் புறம்புமாய் உடலுக்குள் நீ இருந்தது
எள்ளளவும் நான் அறியாது இருந்தேனே பூரணமே !
48 ) தாயாகித் தந்தையாய்த் தமர் கிளைஞர் சுற்றம் எல்லாம்
நீயாகி நின்ற நிலை அறியேன் பூரணமே !
49 ) விளங்கு புள்ளூர் வன அசரம் விண்ணவர் நீர்ச் சாதிமனுக்
குலங்கள் எழு வகையில் நின்ற குறிப்பு அறியேன் பூரணமே !
50 ) ஆணாகிப் பெண்ணாய் அலியாகி வேற்றுருவாய்
மாணாகி நின்ற வகையறியேன் பூரணமே !
விளக்கத்தை நாளைய பதிவில் காணலாம். ...
என்றும்-சிவனடிமை-பாலா.
ஆவலுடன் தங்கள் விளக்கத்தை எதிர் பார்க்கிறேன்..
பதிலளிநீக்குநன்றி..
http://anubhudhi.blogspot.com/
We need to visit all these places !!!
பதிலளிநீக்குஆதிகாலத்திலே தில்லையில் திருமூலர்
அழகர் மலை இராமதேவர்
அனந்தசயனம் கும்பமுனி திருப்பதி
கொங்கணவர் கமலமுனியாகி
சோதிரக் கஞ்சட்டமுனி கருவை கருவூரார்
சுந்தரானந்தர் கூடல்
சொல்லுமெட்டுக் குடியில் வான்மீகரோடு ஒர்
நெல்காசியில் நந்திதேவர்
பாதியரிச் சங்கரன் கோவில் பாம்பாட்டி
பழனிமலை யோகநாதர்,
பரங்குன்ற மதில், மச்ச முனிபொய்யூர் கோரக்கர்
பதஞ்சலி இராமேசுவரம்
சோதி வைத்தீசுவரன்கோயிலில் தன்வந்திரி
திகழ் மயூரங்குதம்பை
சித்தருணை யோரிடைக்காடன் சமாதியிற்
சேர்ந்தன ரெமைக் காக்கவே