திங்கள், 20 ஜூன், 2011

பட்டினத்து அடிகளின் பூரண மாலை தொடர்பில் பின்னடைவு....

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு   ,

 கடந்த ஒரு வாரமாக என்னால் எந்தவொரு பதிவுகளையும் பதிவு செய்ய முடியவில்லை . இதற்காக முதலில் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.  தினந்தோறும் எனக்கு சித்தர்களின் உத்தரவு வந்தால் தான் என்னால் எழுதமுடியும் . 

பல அன்பர்கள் என்னிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு கடந்த வாரம் பேசினார்கள். எல்லாருக்கும் உள்ள ஒரே ஆவல் புண்ணிய ஆத்மாக்களுடன் எப்படி தொடர்பு கொள்வது என்று தான் ?. 

இந்த தொடர்பு பூர்வ  ஜென்ம பலனை கொண்டுதான் வரும். இதனை விட்டுவிட்டாலும் இதன் தாக்கம் இன்று வரை எனக்குள் நடந்து கொண்டு தான் இருக்கிறது .  எனக்கு மிகவும்  வேண்டப்பட்ட இரண்டு நண்பர்கள் கடந்த மாதம் வந்து இக்கலையை கற்றுகொண்டார்கள் . இதில் ஒருவருக்கு கொஞ்சம் தான் அதிர்வலைகள் வந்தது. 
மற்றொரு நண்பருக்கு நல்ல அதிர்வலைகள் வந்தது .

நடிகர் ரஜினிகாந்த் உடல் நிலை பாதிக்கப்பட்டபோது அவரின் நிலையை பற்றி அருமையான தகவல்கள் அவருக்கு கிடைத்தது. எல்லாரும் கைவிட்ட நிலையில் மகா அவதார் பாபாஜியின் கருணையால் இன்று நலமாக உள்ளார் . ஏனெனில் அந்த நண்பருக்கு வழிகாட்டியாக பாபாஜி வந்துள்ளார்.

எல்லாமே பூர்வ ஜென்ம பலம் .

நம்ப முடியாத பல ஆச்சர்ய தகவல்கள் நமக்கு வழிக்காட்டிகளின் மூலம் நமக்கு கிடைக்கும். 

இது ஒரு வகையான மருத்துவ முறை தான் . இதனால் மனதில் தோன்றும் எண்ணங்களை களைய முடியும், எதிர்கால திறனை அறிந்து கொண்டு நமது வாழ்க்கையை நல்ல முறையில் அமைத்துக்கொள்ள முடியும்.

"கலைகள் உம்மை தேடிவரும் காலன் வருமுன் "

"எம்மை பற்றி "-இந்த வலைப்பூவில் உள்ள நிழற்படமானது நான் அல்ல ஆனால் அதனைப்போல் நான் ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் பதஞ்சலி சித்தர் அவர்களின் உருவ படத்தினை வைத்திருக்கிறேன். 

இந்த படத்தை யாரோ ஒரு ஓவியன் வரைந்து இருக்கிறான் என்ற எண்ணம் என் மனதிலும் ,எல்லார் மனதிலும் உள்ள ஒரு மிகப்பெரிய சந்தேகம் ஆகும்.

ஆனால் உண்மையிலே இந்த உருவத்தை போல் ஒரு உருவத்தை நேரில் நீங்கள் தரிசிக்க நினைத்தால் உங்கள் நிலை எப்படி இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள் .

பதஞ்சலியாரின் தெய்வ தரிசனம் எமக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் 
( ஞாயிற்று கிழமை) கிடைத்து . அதன் அனுபவத்தை கூடிய விரைவில் பகிர்ந்து கொள்கிறேன். 


அந்த சித்தரின் தரிசனம் இனிமேல் யாருக்கும் கிடைக்காமல் போய்விட்டதே  என்ற மன ஆதங்கம் தான் என்னை கடந்த நான்கு நாட்களாக பாடாய்ப்படுத்துகிறது .

பட்டினத்து அடிகளின் பூரணமாலை முடிந்த பிறகு பதஞ்சலியாரின் தரிசனத்தை பற்றி எழுதுகிறேன்.

தொடரும்....
 என்றும்-சிவனடிமை-பாலா.

5 கருத்துகள்:

  1. பாலா, இந்த மாதிரி விஷயங்கள் எழுதுவது சற்று கடினமே... இருந்தாலும் தங்களின் பணிகளுக்கிடையில் தாங்கள் எழுதுவது மகிழ்ச்சியே.

    தொடர்ந்து எழுதுங்கள்...

    பகிர்வுக்கு நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    பதிலளிநீக்கு
  2. அய்யா உங்கள் பதிவுகள் நெகிழ்ச்சியானவை, உங்கள் தொடர்பு முகவரி அல்லது தொலைபேசி எண் தருவீர்களா? உங்களை தொடர்பு கொள்ள ஆவல்.

    பதிலளிநீக்கு
  3. http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_24.html

    தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். தங்கள் கருத்துக்களை அறியப்படுத்தவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  4. அன்புள்ள ராஜராஜேஸ்வரி அவர்களுக்கு ,

    தங்களின் வலைப்பூவில் சித்தர்களின் முழக்கங்களை வெளியிட்டமைக்கு
    மிக்க நன்றி .

    சித்தர்களின் ஆசி அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் வாழும் ....

    என்றும்-சிவனடிமை-பாலா.

    பதிலளிநீக்கு