இவரை சித்தர்களில் முதன்மையானவர் சீனதேசத்துக்குரியவர் என சித்த மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. இவர் வாழ்ந்த காலத்தில் ஜாதி, குலம், மரபு என்ற பிரிவுகள் இல்லாத காலம் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும். சீனாவில் போகருக்கு “போ-யாங்” என்று பெயருள்ளதாகவும், வா. ஓ. சியூ என்ற பெயரில் சீனாவின் தலைசிறந்த ஞானி என்று கொண்டாடப்படுவதாகப் பேராசிரியர் இராமையா யோகி அவர்கள் தமது போகர் 7000 நூல் மதிப்புரையில் கூறியுள்ளார். போகர் என்ற பெயருக்கு நியாயமான ஒரு காரணம் கற்பிக்க விரும்புபவர் சகலத்துறைகளிலும், துறை போயவர். ஆகையால், போகர் என்ற பெயர் ஏற்பட்டது என்கின்றனர். போ-யாங் என்ற பெயர் போ-யர் என்று மரியாதை நிமித்தம் அழைக்கப்பட்டு போகர் என்று மருவி இருப்பதாகவும் சிலர் கூறுகின்றனர்.
அகத்திய முனிவர் போகரை சீனாக்காரர் என்றே அழைக்கிறார். அகத்தியரின் 12000 நாலாம் காண்டத்தில்
“சித்தான சித்துமுனி போகநாதன் சிறந்த பதினெண்பேரில் உயர்ந்த சீலன் கத்தனெனும் காலாங்கி நாதர்சீடன் கனமான சீனபதிக்குகந்த பாலன்” என்கிறார். சீனநாட்டில் போ-யாங் என்ற சீனரின் உடலில் கூடுவிட்டுக்கூடு பாய்ந்து போகமுனிவர் சீனநாட்டவராக வாழ்ந்து வந்தார் என்ற செய்தியும் உண்டு. இவரை புத்த சமயத்துறவி என்றும் சீன யாத்ரீகராக நம்நாட்டிற்கு 1600 ஆண்டுகளுக்கு முன் வந்து புத்தகயா, பாடலிபுத்திரம் முதலான இடங்களைத் தரிசிக்கத் தமிழ்நாட்டிற்கு வந்தவர் என்றும் சிலர் கூறுவர். இவர் தென் தமிழ் நாட்டில் பலகாலம் தங்கித் தாம் அறிந்தவற்றைப் பல சீடர்களுக்குக் கற்பித்தும், தாம் அறியாதனவற்றைப் பயின்றும் வந்துள்ளவராகத் தெரிகிறது. போகர் சமாதிநிலையில் பழனியில் இன்றும் இருப்பதாகக் கருதப்படுகிறது.
போகரது சமாதிக்கு இன்னும் புலிப்பாணி சாமியார் என்னும் ஒருவர் வழிவழியாக வழிபாடும் தொண்டும் செய்து வருவது இவரது சீடர்தான் புலிப்பாணி என்பதை உறுதி செய்கிறது. போகர் அருளிய நூல்கள்:
போகர் 12000
- அகத்தியர் 21,000
- அகத்தியர் 12,000
- அகத்தியர் பரிபூரணம்
- அகத்தியர் ஆயுர்வேதம்
- அகத்தியர் நயனவிதி
- அகத்தியர் குணயாடம்
- அகத்தியர் அமுதக்கலை ஞானம்
- அகத்தியர் செந்தூரம் 300
- அகத்தியர் வைத்திய காவியம் 1500
0 கருத்துகள்:
கருத்துரையிடுக